ஜெயபிரதீப் பாஜகவுக்கு போறாரா.. அடிச்சி நொறுக்கிட்டாரே "பிரபலம்".. இது எப்போ? ஓபிஎஸ்ஸூக்கு குஷி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை, பாஜக எப்போதுமே கைவிடாது என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் சொல்லி வரும்நிலையில், முக்கிய தகவல் ஒன்று கசிந்து வருகிறது.

சமீபத்தில் ஓபிஎஸ், திருச்சியில் மாநாடு நடத்தியிருந்தார்.. இந்த மாநாடு ஆகச்சிறந்த வெற்றி என்றே பூரிக்கிறார்கள் அவரது தொண்டர்கள்..

 When is OPSs son Jaya Pradeep going to join BJP whats happening in Theni ADMK BJP parties

காரணம், கடைசிவரை எவ்வளவோ முயற்சித்தும், இந்த மாநாட்டை எடப்பாடியால் தடுத்து நிறுத்த முடியவில்லை, எவ்வளவோ முட்டுக்கட்டைகள் போட்டும், மாநாட்டை தடுக்க முடியவில்லை என்கிறார்கள்..

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், திருச்சி மாநாட்டின் வெற்றிக்கு முக்கிய காரணிகளாக இருந்தது, ஓபிஎஸ்ஸின் இரு மகன்களான ரவீந்திரநாத்தும், ஜெயபிரதீப்பும்தான் என்ற பேச்சு அப்போதே வலுவாக அடிபட்டது.

ஓபிஆர் அதிரடி: இப்போது ரவீந்திரநாத் எம்பியாக உள்ள நிலையில், பாஜகவின் ஆதரவாளராகவும், மேலிட தலைவர்களின் அன்பை பெற்றவராகவும் விளங்கி வருவது தெரிந்த விஷயம்தான்.. ஆனால், ஜெயபிரதீப்பின் பங்களிப்பு இந்த மாநாட்டில் ஓங்கியிருந்ததாக சொல்கிறார்கள்.. பொதுவாக, தேர்தல் சமயங்களில் மட்டுமே தலைகாட்டி வருபவர் ஜெயபிரதீப்.. எப்போதாவது இவர் பதிவிடும், அரசியல் ட்வீட்கள் பெரும் பரபரப்பை கிளப்பிவிடும். அதிமுகவையே திரும்பி பார்க்கும் அளவுக்கு, தேர்தல் சமயங்களில் பதிவுகளின்மூலம் அதிரடிகளை கிளப்பிவிடுவார்..

எடப்பாடி தரப்புக்கு பதிலடி தருவதாகவும், திமுகவுக்கு பதிலடி கொடுப்பதிலும் ஜெயபிரதீப் முக்கிய பங்காற்றுபவர்.. அதிமுக அணிகள் ஒன்றிணைய வேண்டும் என்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில், சமீபத்தில்கூட, அவருக்கு ஜெயபிரதீப் பதில் தந்திருந்தார்.. அதில், தன்னுடைய அப்பாவின் தரப்பின் நியாயங்களையும், ஆதங்கங்களையும் அதில் கொட்டியிருந்தார்..

2 மகன்கள்: இந்நிலையில் திருச்சி மாநாட்டில், அதிமுக தலைமை அலுவலக முகப்பு வடிவில் மேடை, மாநாட்டில் தொண்டர்கள் உட்காரும் 2 பகுதிகளுக்கு நடுவில் நடந்து வர நீண்ட மேடை + .இரட்டை இலை சின்னத்துடன் கொடி + தொண்டர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள், + உணவு + என பல்வேறு விஷயங்களை ரவீந்திரநாத்துடன் சேர்ந்து ஜெயபிரதீப்பும் கவனித்து கொண்டாராம்.. அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் முயற்சியை முறியடிக்க, தங்கள் ஆதரவு நிர்வாகிகளுடன் அடுத்தக்கட்ட அதிரடியிலும் ஓபிஎஸ்ஸின் மகன்கள் ரவீந்திரநாத்தும், ஜெயபிரதீப்பும் இறங்கியிருப்பதாக கூறுகிறார்கள்.

அசந்து போன பாஜக: இப்போது, இன்னொரு தகவல் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. அதாவது, திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு நடத்தியதற்கு காரணமே, பாஜகவுக்கு தன்னுடைய பலத்தை நிரூபிப்பதற்காகத்தானாம்.. மேலிடம் தன்னுடைய பலத்தை புரிந்து கொண்டால் போதும், அதற்கு பிறகு, தங்களை எந்த நேரத்திலும் பாஜக கைவிட வாய்ப்பே இல்லை என்று பெரிதாக நம்பினாராம் ஓபிஎஸ்.. அதன்படியே, பாஜக இந்த மாநாட்டை பார்த்து அசந்து போய்விட்டதாம்..

அதிலும், மாநாட்டின் பின்னணி ஓபிஎஸ்ஸின் மூத்த மகன் ஜெயபிரதீப்பின் பங்களிப்பும் பாஜக சீனியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாம்.. இந்த முறை எப்படியாவது எம்பி தேர்தலில், தென்மண்டலங்களில் காலூன்றிவிட வேண்டும பாஜக முனைப்பு காட்டி வருகிறது.. இதற்காகவே, ஓபிஎஸ்ஸையும் அரவணைத்து செல்கிறது.. அதேபோல, தென்மண்டலங்களை நன்கு அறிந்தவர் ஜெயபிரதீப்.. அதிலும் தேனி மாவட்டம் முழுக்க மக்களால் அறியப்பட்டவர்..

வலைவிரித்த தலைகள்: இதை தங்களுக்கு பிளஸ்ஸாக மாற்றிக் கொள்ள பாஜக கணக்கு போடுகிறதாம்.. நன்கு பரிச்சயமான ஜெயப்பிரதீப்பை பாஜகவில் இணைத்தால் தென் மாவட்டங்களில் கட்சிக்கு வலு சேர்க்கலாம் என்றும் நினைக்கிறதாம்.. ஒருசில தமிழக பாஜக சீனியர்கள், ஜெயபிரதீப்பிடமே இதை பற்றி எடுத்து, தங்கள் பக்கம் கொண்டுவர முயற்சித்து வருகிறார்களாம்.. ஆனால், ஜெயபிரதீப் இதற்கு இதுவரை ஓகே சொல்லவில்லையாம்.. ஒருவேளை, பாஜக பக்கம் ஜெயபிரதீப் செல்வாரா? தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+