பள்ளி மாணவர்களுக்கு பறந்து வந்த செய்தி.. கோடை விடுமுறை எப்போது?.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்து அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த வருடம் முழுவதும் உச்சத்தில் இருந்தது.. இதற்கு பிறகு, ஓரளவு குறைந்த நிலையில், தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன.

10,11, 12-ம் வகுப்பு மாணவர்கள் ஆன்லைன் மூலமே கல்வி கற்கும் நிலைமையும் ஏற்பட்டிருந்த நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வந்தது.. இறுதியில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டது..

 பொது முடக்கம்

பொது முடக்கம்

எனினும், பொது முடக்கம் காரணமாக 2 வருடங்களாகவே மாணவர்களின் கல்வியில் பெரியளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.. வீட்டிற்குள்ளேயே இருந்ததால், மாணவர்கள் மனதளவிலும் பாதிக்கப்பட்டிருந்தனர்.. அதேசமயம், இந்த ஆண்டு எப்படியாவது பொதுத்தேர்வை நடத்திவிட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உறுதியாக இருந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன.

 செய்முறை தேர்வு

செய்முறை தேர்வு

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ம் தேதி தொடங்கி மே 2ம் தேதி வரை நடைபெறுகிறது. 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு மே 5ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜுன் 17ம் தேதியும், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜுன் 23ம் தேதியும் வெளியாகும் என்றும் ஏற்கனவே அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

 கோடை விடுமுறை

கோடை விடுமுறை

இந்நிலையில்தான், தற்போது வெயில் வாட்டி வருகிறது.. இன்னும் ஏப்ரல், மே மாதம் ஆரம்பிக்கப்படாத நிலையில் மக்கள் வெயிலால் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.. எனவேதான், கோடை விடுமுறை எப்போது விடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது.. திருச்செந்தூர் கோயிலுக்கு மனைவியுடன் வந்திருந்த அமைச்சர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அன்பில் மகேஷ் சொன்னதாவது:

முதல்வர்

முதல்வர்

"இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக முதல்வர் பெரிய திட்டத்தை அறிவித்துள்ளார். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு உயர்படிப்பு பட்டயம், பட்ட படிப்பு படிக்க செல்லும்போது, மாத மாதம் ரூ.1000 அவர்களது கணக்கில் செலுத்தப்படும். இதன்மூலம் அதிகப்படியாக மாணவிகள் கல்வி கற்பதோடு அரசு பள்ளியில் படிப்பதற்கு பெற்றோர்கள் அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

அறிவிப்பு

அறிவிப்பு

இப்போதைக்கு அரசு பள்ளிக்கு மட்டும் தான் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்... கொரோனா கால கட்டத்தில் எல்லாமே தாமதமாகி கொண்டு வருகிறது.. அந்த வகையில், தாமதமாக தான் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. மே 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை தேர்வுகள் நடக்கிறது. அது முடிந்த பிறகு பாடதிட்டங்கள் முழுமையாக முடிக்கப்பட வேண்டும். எனவே கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர் தான் சொல்ல முடியும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+