தடுமாறிய முதலமைச்சர் ஸ்டாலின்! தாங்கிப் பிடித்த பிரதமர் மோடி! ஜாலியாக பேசிக்கொண்டே வாக்கிங்!
சென்னை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி தொடக்கவிழாவில் கால் இடறி தடுமாறிய முதலமைச்சர் ஸ்டாலினை பிரதமர் மோடி தாங்கிப் பிடித்த நிகழ்வு நடந்தது.
அதுமட்டுமல்ல முதலமைச்சர் ஸ்டாலின் கையை இறுகப்பற்றிய படி ஜாலியாக பேசிக்கொண்டே மேடைக்கு வந்தார் பிரதமர் மோடி. இந்தக் காட்சியை கண்டு அங்கிருந்த பாஜக முக்கிய பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் வியந்துப் போய்விட்டனர். கொள்கை ரீதியாக நேர் எதிர் கருத்துக்களை கொண்டிருந்தாலும், தமிழக உரிமைக்காக குரல் கொடுத்தாலும் முதல்வர் மீது பிரதமர் மோடி வைத்திருக்கும் மரியாதையை இன்றைய நிகழ்வு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

வழக்கமாக முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி சந்திப்பின் போது சம்பிரதாய சிரிப்பு மட்டுமே இருக்கும். மற்றபடி இறுக்கமாகவே இருவரும் இருப்பார்கள். ஆனால் இந்த முறை புன்முறுவலுடன் இருவரும் பேசிக்கொண்டே மேடை ஏறியது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலினுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மேடையில் ஒன்றாக அமர்ந்திருந்தார். வழக்கம் போல் டீ ஷர்ட் ஜீன்ஸ் ஆடை அணிந்தவாறே அவர் அமர்ந்திருந்தார். பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் ஃபார்மல் ஆடைகளை தவிர்த்து கேசுவலாக காணப்பட்டார்.
இதனிடையே சென்னையில் தொடங்கியுள்ள கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் மத்திய நிர்வாகப் பகுதிகளிலிருந்து 18 வயதிற்குட்பட்ட வயதுப்பிரிவில் 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும், 1,600க்கு மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்கின்றனர்.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்திட 1,000க்கு மேற்பட்ட நடுவர்கள், 1,200க்கு மேற்படட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் உட்பட மொத்தம் 27 விளையாட்டுகள் காட்சி விளையாட்டுகளாக இடம் பெறுகின்றன.












Click it and Unblock the Notifications