இனி இதிலேயும் சிக்கல்? குடும்ப அட்டை ரெடி? குழம்பும் ரேஷன்தாரர்கள்.. தமிழக அரசு சர்ப்ரைஸ் தருகிறதா?
சென்னை: புதிதாக ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.. இதுகுறித்த முக்கிய கோரிக்கையை பொதுமக்கள் விடுத்துள்ளனர்.
தமிழகத்திலுள்ள ரேஷன் கடைகள் மூலம், அட்டைதாரர்கள் அனைவருக்குமே குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால் கோடிக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நேரடியாகவே பலன்களை பெற்று வருகிறார்கள்.

ரேஷன் கார்டுகள்: அதேபோல, புதிய ரேஷன் கார்டுகளை விண்ணப்பித்து பலரும் காத்திருந்தனர்.. ஆனால், மகளிர் உரிமைத்தொகை விநியோகம் காரணமாக, புது ரேஷன் கார்டு விநியோகம் தடைபட்டுவிட்டது. ஒரு லட்சம் கார்டுகள் அச்சடிக்கப்படாமல் தேங்கி நின்றன.
ஆனால், மருத்துவ காப்பீட்டு திட்ட சலுகைக்கும் ரேஷன் கார்டுதான் முக்கிய ஆவணமாக உள்ளதால், ரேஷன் கார்டுகளை உடனடியாக தர வேண்டும் என்றும் கோரிக்கைகள் வெடித்தன.. முதல்வரின் தனிப்பிரிவு வரை புகார்கள் தரப்போவதாகவும் சொன்னார்கள்..
காஞ்சிபுரம்: இதற்கு பிறகுதான், 45,509 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவதாக அரசு தரப்பில் தகவல் வெளியாகியிருந்தது. குறிப்பாக, வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில், 27,577 ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. ஏற்கனவே, இணைய வழியில் பெறப்பட்ட இவர்களது விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியுடைய, 45,509 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று கூறியிருந்தது ஓரளவு ஆறுதலை தந்திருந்தது.
எனினும், இப்போதுவரை ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிவிட்டது. 80,000 பேருக்கு கார்டு வழங்க அதிகாரிகள் ஒப்புதல் அளித்தும்கூட, கார்டு வழங்கப்படவில்லை. வழங்கல் துறை மற்றும் வட்ட வழங்கல் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இதுகுறித்து முறையாக பதிலளிக்கவில்லை என்று குமுறுகிறார்கள் பொதுமக்கள்..
கோரிக்கை: கடந்த மாதம் இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "விண்ணப்பித்து ஒருவருடம் ஆகிவிட்டதால், தகுதியான நபர்களை கண்டறிந்து இனியாவது கார்டுகளை வழங்கலாம்.. ஆனால், புதிய கார்டு தருவது நிறுத்தப்பட்டுவிட்டது, அரசு உத்தரவிட்டால் தான் கார்டு அச்சடித்து தரப்படும் என்றார்கள்.. இதற்கு பிறகு கேட்டால், தேர்தல் நடத்தை விதியை காரணமாக சொன்னார்கள். இப்போது தேர்தலும் முடிந்து விட்டது.. ஆனாலும் புதிய ரேஷன் கார்டு தரப்படவில்லை.
அதனால், தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று கார்டு தருமாறு கேட்டால், புதிய கார்டுகள் இனிமேல் கிடைக்காது என்கிறார்கள். இதனால் எங்களுக்கு வீண் அலைச்சல், பணம் விரயமும் உண்டாகிறது. ரேஷன் கார்டு வழங்கப்படுமா அல்லது ரேஷன் கார்டு நிறுத்தப்பட்டு விட்டதா? என்று தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" என்று குமுறி கேட்கிறார்கள்.












Click it and Unblock the Notifications