Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஹாட்ரிக்".. அவர்தான் "டேஞ்சரஸ்" ஸ்டாலின்.. அதைவிடுங்க.. பாஜக "ஆபரேஷன்" அதிமுகவுக்கும்தான்.. என்னவாம்

எடப்பாடி பழனிசாமியின் ஒவ்வொரு செயல்பாடுகளும் அதிமுகவின் வீழ்ச்சிக்கு காரணமாவதாக ஓபிஎஸ் டீம் சொல்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒற்றை தலைமையில் அதிமுக அபார வளர்ச்சி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சொல்லி வந்த நிலையில், தொடர் சறுக்கல்கள் காணப்பட்டு வருகின்றன.. தொடர் தோல்விகளில் அதிமுக சிக்கி வருகின்றது.. வாக்கு சதவீதங்களும் மெல்ல மெல்ல குறைந்துவருவதாக கவலைகள் கிளம்புகின்றன.. அப்படியானால் இதற்கெல்லாம் மூலகாரணங்கள் என்ன? தீர்வுகள் என்ன?

முதன்முறையாக 4 எம்எல்ஏக்களுடன் சட்டசபைக்குள் தமிழக பாஜக காலடி எடுத்துவைத்தபோதே, அதிமுகவின் செல்வாக்கு மெல்ல மெல்ல சரிய தொடங்கியது.

இந்த சரிவுகளுக்கு காரணம் சாட்சாத் அதிமுகவேதான் என்றும், உட்கட்சி பூசல்களே, ஈரோடு இடைத்தேர்தல் வரை நீடித்து வந்தது என்றும் சொல்லப்படுகின்றன.

 8 + 8

8 + 8

நமக்கு யார் தலைவர்? யாரைதான் பின்பற்றுவது? யார் கையில்தான் கட்சி உள்ளது? என்ற குழப்பத்திலும் கலக்கத்திலும் தொண்டர்கள் சிக்கி வரும் போக்கும் இந்த ஒருவருடமாகவே தொடரத்தான் செய்கிறது.. அதிமுகவை எப்போதுமே கைவிடாமல், இறுக்க பற்றிக்கொண்டு, வெற்றியையும் தேடி தரும் "கொங்கு கோட்டை"யில், திமுக வெற்றிக்கொடியை பதித்துள்ளது. ஹாட்ரிக், அதாவது, சட்டப்பேரவை தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களில் திமுகவின் வெற்றி, கொங்கு அதிமுகவுக்கு பெருத்த அதிர்ச்சியையே தந்துள்ளது.

 24%

24%

தற்போது எடப்பாடி பழனிசாமி பக்கம் காற்று சாதகமாக வீசிவருகிறது என்றாலும், போதுமான வெற்றியை அவர் நிரூபிக்கவில்லை என்ற கருத்தே தற்போது அழுத்தமாக வேரூன்றப்பட்டு வருகிறது.. இதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.. அதிமுகவுக்கு பலமே அதன் வாக்கு வங்கிதான்.. அப்படிப்பட்ட வாக்கு வங்கி, இப்போது 25-லிருந்து 20ஆக குறைந்துவிட்டது என்கிறார்கள்.. இத்தனைக்கும் எடப்பாடிக்கு, இலை சின்னம் கிடைத்தாகிவிட்டது..ஓபிஎஸ் தரப்பும் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி வழிவிட்டது.. வழக்கமாக அதிமுகவின் வாக்குகளை பிரிக்கும், அமமுகவும் ஒதுங்கி கொண்டது.. இது எல்லாவற்றையும்விட, எடப்பாடிக்கு சாதகமான தேர்தல் களம், சொந்த மண்ணில் அமைந்தது.

 வாசன் மவுசு

வாசன் மவுசு

சொந்த சாதி வாக்குகள் இருந்தும்கூட, வெறும் 40 ஆயிரம்தான் ஓட்டுக்கள் என்பதைதான் பலராலும் ஜீரணிக்க முடியவில்லையாம். ஒருவேளை ஈரோடு கிழக்குக்கு பதிலாக தென்மாவட்டங்களில் இடைத்தேர்தல் வந்திருந்தால், எடப்பாடி எவ்வளவு ஓட்டு பெற்றிருப்பார்? என்ற கேள்வியும் எழுகிறது.. அதுமட்டுமல்ல, எடப்பாடிக்கு கிடைத்த இந்த 40 ஆயிரம் ஓட்டுக்களும், எடப்பாடி என்ற தனி மனிதருக்கு கிடைத்த ஓட்டுக்களாகவும் கருத முடியாது என்கிறார்கள். அந்த 40 ஆயிரம் ஓட்டுக்களில், ஓபிஎஸ்ஸுக்கும் பங்கு உள்ளது.. பாரிவேந்தருக்கும் பங்குள்ளது.. கிருஷ்ணசாமிக்கும் பங்குள்ளது.. வாசனுக்கும் பங்குள்ளது.. பாஜகவுக்கும் பங்குள்ளது.. ஜான்பாண்டியனுக்கும் பங்குள்ளது.. இவ்வளவு பேரும் சேர்ந்துதான், 40 ஆயிரம் வாக்குகள் என்று பார்க்க வேண்டி உள்ளது.

 ஜான் பாண்டியன்

ஜான் பாண்டியன்

அந்தவகையில், எடப்பாடி தலைமையிலான அணிக்கு இது ஒரு மோசமான தோல்வியாக பார்க்கப்பட்டும் வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ஷ்யாம், ஒரு சேனலுக்கு பேட்டி தந்திருந்தார்.. அதில், "எல்லா தலைவர்களும் வாக்கு வங்கியை உருவாக்கி வைத்திருப்பார்கள். அந்த வாக்கு வங்கியை உருவாக்கவில்லையானாலும், அதை சேதாரம் இல்லாமல் காப்பாற்ற வேண்டியது அடுத்தடுத்து வர வேண்டிய தலைவர்களின் பொறுப்பு.. ஆனால், அது அதிமுகவில் இப்படி கரைந்து கொண்டிருக்கிறதே" என்று வேதனையை வெளிப்படுத்தியிருந்ததை இங்கு நாம் நினைவுகூர வேண்டி உள்ளது.

 கருப்பு புள்ளி

கருப்பு புள்ளி

இந்நிலையில், ஓபிஎஸ் நிர்வாகிகள் மற்றும் சில தொண்டர்களிடம் நாம் பேசினோம்.. அவர்கள் நம்மிடம் தெரிவித்த கருத்துக்கள் இதுதான்: "அதிமுக தொண்டர்களின் நிலைபாடு என்பது எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானதாக திரும்ப தொடங்கி உள்ளது. இதனால் அதிமுகவில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சில மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்த தொடங்கியுள்ளதாகவும் தெரிகிறது. தேர்தல் களத்தில் பல கோடிகளை செலவழித்ததாக சொல்லப்பட்ட நிலையில், பரிசு பொருட்களை தாராளமாக கொட்டியதாக கூறப்பட்ட நிலையிலும், இப்படிப்பட்ட தோல்வி என்பது அதிமுக வரலாற்றில் கரும்புள்ளியை தந்துவிட்டது.

 எட்டு எட்டு சறுக்கல்

எட்டு எட்டு சறுக்கல்

சொந்த மண்ணிலும், சொந்த கோட்டையிலும், சொந்த சாதியிலும், தனியாக நின்று ஒற்றை தலைமையில் வெற்றி பெற முடியவில்லை என்பதும் நிரூபணமாகி உள்ளது. ஒன்றுபட்ட அதிமுக இருந்தால், இந்த அளவுக்கு மண்ணை கவ்வியிருக்க தேவையில்லை. அதிமுக முகாமில் ஒற்றுமை இல்லை.. கோவை மாநகர் மாவட்ட செயலாளரும், நீக்கப்பட்ட ஓபிஎஸ் விசுவாசியுமான, முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ், கடந்த டிசம்பரில்தான் திமுகவில் இணைந்தார்.. கட்சி இப்போது 4 அணிகளாக பிளவுபட்டுள்ளதுடன், ஒவ்வொரு அணியும் தாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும் சொல்லி வருகிறார்கள். இந்த இடைத்தேர்தலுக்காக களத்தில் பிரச்சாரம் செய்தபோது அதிமுகவின் மூத்த தொண்டர்கள் யாருமே தென்படவில்லை.

தவிடுபொடிகள்

தவிடுபொடிகள்

ஜெயலலிதா மறைந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் மொத்தம் 8 தேர்தல்களில் தொடர் தோல்விகளை அதிமுக சந்தித்து வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், எம்பி தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், 9 மாவட்ட ஊராட்சி மன்றத்தேர்தல், 2021 தேர்தல், 2022ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், ஈரோடு இடைத்தேர்தல் இப்படி தொடர் தேர்தல்களில் தோல்வியை தழுவியதுடன், வாக்கு வங்கிகளும் சரிய துவங்கிவிட்டது. ஒற்றைத் தலைமை இருந்தால், அதிமுக மிகப்பெரிய வளர்ச்சி பெறும் என்று எடப்பாடி சொல்லிவந்த நிலையில், அந்த பேச்சுக்கள் எல்லாம் இன்று தவிடுபொடியாகிவிட்டன.

 கூடாரம் சலசலப்பு

கூடாரம் சலசலப்பு

மேலும், ஒருங்கிணைந்த பெரிய கூட்டணி திமுகவுக்கு இடைத்தேர்தலில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றிபெற உதவியது. இதைத்தவிர, அருந்ததியர்களுக்கு எதிராக சீமான் பேசியிருந்ததும், திமுகவுக்கு கைகொடுத்தது. இந்த இடைத்தேர்தலில் பாஜக மட்டும், போட்டியிட்டு இருந்தால், இப்போது அதிமுக கண்ட படுதோல்வியை விட இன்னும் மோசமான தோல்வியையே சந்தித்திருக்க கூடும்.. இத்தனை காலமும், ஓபிஎஸ் தரப்பினர் மட்டுமே புலம்பி கொண்டிருந்த நிலையில், எடப்பாடி கூடாரத்துக்குள்ளிருந்தும் சலசலப்புகள் இப்போது முளைத்துள்ளன.. எடப்பாடியை அனைத்து சமூகத்தினரும் பொதுவான தலைவராக பார்க்கவில்லை என்பதே உண்மை.. அதிமுக சிறப்பாக செயல்படும் என நம்பினால், அவர்கள் தங்களது வியூகத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்...

ராஜதந்திரம்

ராஜதந்திரம்

முக்கியமாக, கூட்டு தலைமையின் கீழ் அதிமுகவை ஒன்று சேர்த்தால் மட்டுமே வரும் தேர்தல்களில் அதிமுகவுக்கு வெற்றி கிடைக்கும். அதற்காக பாஜகவிடம் பணிந்துவிட தேவையில்லை. கட்சியை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் பாஜவுக்கு எதிரான ராஜதந்திர அரசியலை, அதிமுக தலைவர்கள் முன்னெடுக்க வேண்டும். ஆபரேஷன் தாமரை என்பது, "அதிமுகவையும் உள்ளடக்கிய ஆபரேஷன்"தான் என்பதை எடப்பாடி + ஓபிஎஸ் இரு தரப்புமே புரிந்து கொள்ள வேண்டும்.. இரு தலைவர்களும் விரைவில் ஒன்றுசேர்ந்து, திமுகவை எதிர்க்க வேண்டும். "நாங்கள் தேர்தலில்தான் தோற்று உள்ளோம். அரசியலில் வெற்றி பெற்று உள்ளோம்" என்று கேபி முனுசாமி சொன்னாலும், பாஜகவை வெல்வதிலேயே அடங்கியுள்ளது அதிமுகவின் எதிர்கால அரசியல்" என்று உறுதிப்பிடிப்புடன் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+