வேலூரில் "புயல்".. அதுவும் 8ம் தேதியே.. வெலவெலத்து போன அதிமுக, திமுக.. அட, இவ்ளோ ப்ளான்ஸ் இருக்கா?
சென்னை: வடமாவட்டங்களில் அதிமுக, திமுக இரண்டுமே கடும் களப்பணியில் இறங்கி கொண்டிருக்கின்றன.. என்ன காரணம்? பாஜக என்ன செய்ய போகிறது?
எம்பி தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. ஹாட்ரிக் வெற்றிக்காக பாஜக முயன்று கொண்டிருக்கிறது. இதற்கான வியூகங்களை கையில் எடுத்தும் வருகிறது.
அந்தவகையில் தமிழகத்தில் 10 இடங்களிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இறங்கி உள்ளது.. இதற்காக தாங்கள் பெரிதாக கால்ஊன்ற முடியாத பகுதிகளில், தேர்தல் வியூகங்களை முடுக்கிவிட்டுள்ளது.

ஆய்வு: இதற்கான களப்பணிகளை கடந்த ஒரு வருட காலமாகவே பாஜக மேற்கொண்டு வந்தது.. அந்தவகையில், எந்தெந்த தொகுதிகளில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளது என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. இதற்காகவே ஒரு டீம் தமிழகமெங்கும் ஆய்வு செய்தது.. அந்த ஐபி ரிப்போர்ட்படி பாஜகவுக்கு சாதகமானது மொத்தம் 10 தொகுதிகள் முடிவானது.
வடமாவட்டம்: அதன்படி, கோவை, கன்னியாகுமரி, நீலகிரி, உள்ளிட்ட தொகுதிகளில் பாஜகவே நேரடியாக இறங்கி தேர்தலை சந்திக்கக்கூட வாய்ப்புள்ளதாம்.. இதில் விஷயம் என்னவென்றால், மேற்கண்ட தொகுதிகள் எல்லாமே திமுக, அதிமுக கட்சிகள் செல்வாக்கு பெற்ற தொகுதிகள்தான்.. இப்போதைக்கு கூட்டணி உறுதியாகியிருக்கிறது என்றாலும், தொகுதி மற்றும் சீட் விவகாரங்களில் மீண்டும் பாஜக - அதிமுக இடையே சலசலப்பு எழலாம் என்கிறார்கள்..
அதேசமயம், திமுகவைவிட அதிக அளவிலான வாக்குவங்கி அதிமுகவுக்கு எப்போதுமே தமிழகத்தில் உண்டு என்பதால், இந்த வாக்குகளையும் இழக்க விரும்பாது என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, மேற்கண்ட 10 தொகுதிகளை தவிர, பாஜக செல்வாக்கு அவ்வளவாக இல்லாத தென்மண்டலம் & வடமாவட்டங்களில் வாக்கு சதவீதத்தை உயர்த்த பாஜக தற்போது திட்டமிட்டுள்ளதாம்.
கருத்தியல் விவாதம்: சமீபத்தில் பாஜகவை கண்டித்து விசிக தலைவரும், சிதம்பரம் எம்.பியுமான திருமாவளவன் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், "தமிழ்நாட்டில் எங்கும் பாஜக கொடியை ஏற்ற முடியாது. என்னோடு கருத்தியல் விவாதத்திற்கு பாஜகவினர் தயாரா?" என்று சவால் விடுத்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து, பாஜகவின் பாஜக மாநில செயலாளர் வினோஜ் செல்வம் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் கருத்தியல் ரீதியாக விவாதிப்பதற்கு பாஜக என்றும் தயார். எங்கள் கட்சிக் கொடியை கடலூரில் பல்வேறு இடங்களில் ஏற்றுகிறோம் என்றும் திருமாவளவனின் சவாலை ஏற்கிறோம் என்றும் கூறியிருந்தார்.. இந்நிலையில், வடமாவட்டங்களில் பலத்தை கூட்ட வேண்டும் என்று பாஜக மேலிடமே உத்தரவு போட்டுள்ளதாம்.. அதுமட்டுமல்லாமல், பாஜக உள்துறை செயலாளர் அமித்ஷாவே நேரடியாகவே தமிழகத்துக்கு வருகை தர போகிறார்.

பொதுக்கூட்டம்: வேலூரில் வரும் 8-ம் தேதி நடக்க உள்ள மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறாராம்... பிரதமர் மோடியின் 9 ஆண்டு ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வகையில், மே 30-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும், மாவட்டம்தோறும் பாஜக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்த பாஜக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. வேலூரில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வரும் 8-ம் தேதி நடக்க உள்ளது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார். அமித் ஷா வேலூருக்கு வருகை தர இருப்பது மாவட்ட பாஜகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கவனம்: இதனால், களப்பணியில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த இடம் தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது. தென்மண்டலங்களிலாவது, ஓபிஎஸ் + சசிகலா + தினகரன் என்று பலரும் பாஜகவுக்கு கைகொடுக்க இருக்கும்போது, வடமாவட்டங்களில் நேரடியாகவே பலத்தை சேர்க்கவும் திட்டமிட்டு வருகிறதாம்..
அதனால்தான், இதற்கு அடுத்தபடியாக, வேறு ஒரு தொகுதியை குறி வைத்து, பாஜக தலைவர்களின் வருகை விரைவில் நடக்கும் என்கிறார்கள்.. இதையடுத்து, திமுக மட்டுமல்லாமல், அதிமுகவும் வடமாவட்டங்களில் தங்கள் கவனத்தை குவித்து வருகிறதாம்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications