ஃப்ளூ ஃப்ளாக் கடற்கரையாக மாறிய சென்னை மெரீனா.. எப்போது திறக்கப்படுகிறது? வெளியான தகவல்
சென்னை: சென்னையில் 50 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மெரினா ப்ளூ கொடி கடற்கரையை மே மூன்றாவது வாரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
அங்கே கட்டுமானங்கள் தொடர்பாக பரிசோதனைகளை ஜிசிசி முடித்துள்ளது. அடுத்த கட்டமாக ஜிசிசி தண்ணீர் பரிசோதனையை முடித்து, வரைபடங்களுடன் தகவல் பலகைகளை அமைத்து வருகிறது. 6 கோடியில் ஒப்பந்ததாரர் மூன்று ஆண்டுகளுக்கு கடற்கரையை பராமரிப்பார். 250 ஏக்கரில் மெரினாவில் மற்றொரு நீலக் கொடி நீட்டிப்பும் திட்டமிடப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் அண்ணா நீச்சல் குளம் அருகே உள்ள 50 ஏக்கர் பகுதி விரைவில் நீலக் கொடி மண்டலமாக மாற உள்ளது. ₹6 கோடி நிதியுதவியுடன் சாய்ந்த இருக்கைகள், சிற்றுண்டிச்சாலை, வெளிப்புற ஜிம்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்பு, நவீன நடக்கும் பாதைகள் ஆகியவை இடம்பெறும். இந்த கடற்கரை உள்ளே நுழைவதற்கு சுமார் ₹30 செலவாகும்.

இங்கே வணிகர்கள் கடைபோட தடைசெய்யப்பட்டுள்ளனர். GCC ஆனது மெரினா முழுவதும் படிப்படியாக இதேபோல் மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளது. மே மாத இறுதிக்குள் உலகளாவிய சுற்றுச்சூழல் லேபிளான ப்ளூ பிளாக் சான்றிதழ் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான மெரினா கடற்கரையானது, புகழ்பெற்ற நீலக் கொடி சான்றிதழை பெற உள்ளது. இதை செயல்படுத்துவதற்கான டெண்டர்ள் கிரேட்டர் சென்னை மாநகராட்சியால் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தின் ஒரே நீலக்கொடி கடற்கரையாக செங்கல்பட்டில் உள்ள கோவளம் கடற்கரை உள்ளது. இந்தச் சான்றிதழானது, தூய்மை, பாதுகாப்பு மற்றும் கடற்கரையின் நிலைமை உள்ளிட்ட சர்வதேச தரங்களைச் பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். ₹1,675 கோடியில் கடலோர மேம்பாட்டு திட்டம் தொடங்கி உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக சென்னை மெரினா பீச்சை அடியோடு மாற்ற முடிவு செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள மற்ற மூன்று கடற்கரைகள் நீலக் கொடி சான்றளிக்கப்பட்ட கடற்கரைகளாக அறிவிக்கப்படுவதற்கு ஒரு படி நெருங்கிவிட்டன, தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையம் (NCSCM) விரிவான திட்ட அறிக்கைகளை (DPR) இதற்காக தயாரித்து உள்ளது.
தமிழ்நாடு கடற்கரை மறுசீரமைப்பு இயக்கத்தின் சார்பில் உலக வங்கி கடனுதவியுடன் ₹1,675 கோடியில் கடலோர மேம்பாட்டு புதிய திட்டங்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு. இதன் மூலம் தமிழ்நாடு முழுக்க உள்ள கடலோர பகுதிகள் மேம்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு கடலோர பகுதிகளை சீரமைக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு இயக்கத்தின் கீழ் அமைக்கப்படும் சில முக்கிய திட்டங்கள் இங்கே உள்ளன. இதன் ஒரு கட்டமாக சென்னை மெரினா பீச்சை அடியோடு மாற்ற முடிவு செய்துள்ளனர்.
திமுகவின் ராஜ்யசபா உறுப்பினர் பி வில்சனின் கேள்விக்கு பதிலளித்த சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணை அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங், சென்னை மெரினா கடற்கரை, ராமநாதபுரம் அரியமான் கடற்கரை, காமேஸ்வரம் கடற்கரை ஆகியவற்றுக்கான டிபிஆர்களை தேசிய நிலையான கடலோர மேலாண்மை மையம் (என்சிஎஸ்சிஎம்) சமர்ப்பித்துள்ளது என்றார். நாகப்பட்டினம் மற்றும் கடலூரில் சில்வர் பீச் அமைக்கப்படுகிறது.
கோவளம் கடற்கரை நீலக் கொடி சான்றளிப்புத் திட்டத்திற்கான தமிழகத்தின் முன்னோடி கடற்கரையாகும், மேலும் இது தமிழக அரசின் ஆதரவுடன் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டது. இது நீல கடற்கரையாக சான்றளிக்கப்பட்டது.
தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு இயக்கத்தின் கீழ் அமைக்கப்படும் சில முக்கிய திட்டங்கள் இங்கே உள்ளன.
1.நாகப்பட்டினம் மற்றும் சென்னையில் கடல் ஆமை பாதுகாப்பு மையங்கள்
2. மனோரா, தஞ்சாவூரில் உள்ள சர்வதேச டுகோங் பாதுகாப்பு மையம்
3. பள்ளிக்கரணை பாதுகாப்பு மையம் மற்றும் சென்னையில் உள்ள சதுப்பு நிலத்தை மீட்டமைத்தல்
4. சதுப்புநிலங்கள், கடல் புல் மற்றும் நீல கார்பன் தீர்வுகள்
5. மன்னார் வளைகுடா கரியாச்சல்லி தீவுகளில் அரிப்பு கட்டுப்பாடு மற்றும் பவழ மறுசீரமைப்பு
6. ப்ளூ பிளாக் கடற்கரைகள்
7. கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைத்தல்.
8. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் ஸ்மார்ட் கடற்கரை கிராமங்கள்
9. எண்ணூர் சிற்றோடை மீட்பு ஆகிய பணிகளை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டங்கள் இந்த வருடமே நிறைவேற்றப்படும்.












Click it and Unblock the Notifications