ஜஸ்ட் மிஸ்.. ஒரே நாளில்.. ஒரே இடத்தில்.. ஒரே நேரத்தில்.. 'அண்ணனின்' என்ட்ரி.. ஒதுக்குகிறாரா முதல்வர்
முக ஸ்டாலின் மற்றும் முக அழகிரி சந்திப்பு எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
சென்னை: ஒவ்வொரு முறையும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட முக அழகிரி - முக ஸ்டாலின் இருவரின் சந்திப்புகள் இந்த முறையும் நடக்காமல் போய்விட்டதால், ஆதரவாளர்கள் அப்செட் ஆகிவிட்டனர்.
ஸ்டாலின் முதல்வர் பதவியேற்புக்கு முன்பேயே, முக அழகிரி பாசத்துடன் தம்பிக்கு வாழ்த்து என்று சொல்லி இருந்தார்.. இதையடுத்து, பதவியேற்றதும், மதுரையில் உள்ள அழகிரி வீட்டுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும்படி வாய்மொழி உத்தரவினை ஸ்டாலின் பிறப்பித்ததாகவும் சொல்லப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில்தான், மதுரைக்கு ஸ்டாலின் சென்றிருந்தபோது, எப்படியும் அழகிரியை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் பரபரத்தன.. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.

சந்திப்பு
தம்பி ஸ்டாலின் வீடு தேடி வந்து தன்னை பார்க்கட்டும் என்று அழகிரி நினைத்துவிட்டாராம்.. அண்ணனே வந்து தம்மை நேரில் வந்து சந்தித்து பேசட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நினைத்து விட்டாராம்.. இப்படிப்பட்ட சூழலில், ஜுன் 3-ம்தேதி, அதாவது கருணாநிதி பிறந்த நாள் அன்று இருவரும் எப்படியும் சந்தித்து விடுவார்கள், அன்றைய தினம் குடும்பத்தினருடன் இணைந்து கட்சி விவகாரங்கள் குறித்து பேசுவார்கள் என்றும் அதற்கு பிறகு அழகிரிக்கு கட்சியில் முக்கிய பதவி ஏதாவது தரப்படும் என்றும் தகவல்கள் பரபரத்தன.

தொற்று
ஸ்டாலினின் பதவியேற்பு விழாவுக்கே அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.. ஆனால், தொற்று உக்கிரத்தில் பரவி வந்ததால், சென்னைக்கு வந்து பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தார்.. அதனால், எப்படியும் கருணாநிதி பிறந்த நாளில் இருவரும் சந்திப்பார்கள் என்று கணக்கு போடப்பட்டது..

அஞ்சலி
அதன்படியே, கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டில் முதல்வர் ஸ்டாலின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்... ஸ்டாலினை தொடர்ந்து கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அழகிரியும் அங்கு வந்து சேர்ந்தார்.. ஆனாலும் இருவரும் சந்தித்து கொள்ளவில்லை.

தலைவர்கள்
இப்படிப்பட்ட சூழலில்தான், கருணாநிதி மகன் மு.க.தமிழரசுக்கு சொந்தமான திருமண மண்டபம் மற்றும் ஹோண்டா ஷோ ரூம் திறப்பு விழா நடந்துள்ளது.. கேளம்பாக்கத்தில் தமிழரசுவுக்கு சொந்தமான மோகனா மஹால் மற்றும் மோகனா ஹீரோ ஷோரூம் இரண்டையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.. இந்த விழாவில் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுகவின் மூத்தத்த தலைவர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வாய்ப்பு
மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், செல்வி செல்வம், மு.க.அழகிரி குடும்பத்தினர் மறைந்த முரசொலி மாறனின் மனைவி மல்லிகா மாறன், கனிமொழி எம்.பி. உள்ளிட்ட பலரும் இந்த தொடக்கவிழாவில் கலந்துகொண்டனர். இந்த விழாவில் ஸ்டாலினும் அழகிரியும் சந்திப்பதற்கு வாய்ப்புள்ள மிக முக்கியமான ஒரு நிகழ்வாக பார்க்கப்பட்டது.. அழகிரியும் தன்னுடைய குடும்பத்துடன் வந்தார். ஆனால், அவர் வருவதற்கு முன்பாகவே முதல்வர் ஸ்டாலின் திருமண மண்டபத்தைத் திறந்து வைத்து விட்டு கிளம்பி சென்றுவிட்டார்.

பேத்தி
இதனால் அந்த சந்திப்பும் கடைசி நேரத்தில் நிகழாமல் போய்விட்டது.. இப்போது இன்னொரு வாய்ப்பு உள்ளதாம்.. வருகிற செப்டம்பர் 10ம் தேதி கருணாநிதியின் மகள் செல்வியின் பேத்தி திருமண வரவேற்பு விழா சென்னையில் நடக்க உள்ளது.. இந்த நிகழ்ச்சியில் மறுபடியும் குடும்பமே ஒன்று சேரக்கூடும்.. அப்போது நிச்சயம் ஸ்டாலின் - அழகிரி சந்திப்பு நடக்கும் என்று நம்பிக்கையுடன் அவரவர் ஆதரவாளர்கள் காத்திருக்கிறார்களாம்..!
-
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications