தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு.. இன்னிக்கு நேத்து எடுத்த முடிவல்ல?.. ஆதாரமாக பரவும் பழைய புகைப்படம்?
சென்னை: ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தால் தனுஷ்- ஐஸ்வர்யா பிரச்சினை சில மாதங்களாகவே புகைந்து வருவது தெரிகிறது.
நடிகர் தனுஷிற்கும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தன்னை விட வயது மூத்தவரான ஐஸ்வர்யாவை தனுஷ் திருமணம் செய்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த தம்பதிக்கு லிங்கா, யாத்ரா ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையிலிருந்து இருவரும் விலகுகிறோம் என நடிகர் தனுஷ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஐஸ்வர்யா
இதைத் தொடர்ந்து அதே அறிக்கையை ஐஸ்வர்யாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பிரிவை அறிவித்தார். ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருதும் தனுஷிற்கு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி டெல்லியில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது அந்த விழாவில் ரஜினி, லதா, தனுஷ், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

பெருமித போஸ்ட்
அப்போது ரஜினியும் தனுஷும் விருதுகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் #prouddaughter #proudwife என மிகவும் மகிழ்ச்சி பொங்க ஐஸ்வர்யா பதிவிட்டிருந்தார். எனவே கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி வரை தனுஷ்- ஐஸ்வர்யா உறவில் எந்த வித பிரச்சினையும் இல்லை என்றே தெரிகிறது.

ரஜினி பிறந்தநாள்
இதற்கு அடுத்து ரஜினிகாந்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் காவேரி மருத்துவமனையில் ஒரு மைனர் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 3 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர் வீடு திரும்பினார். இதற்கு பிறகு டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா வீட்டில் எளிமையாக கொண்டாடப்பட்டது.

சவுந்தர்யா
இந்த விழாவில் லதா ரஜினிகாந்த், இளைய மகள் சவுந்தர்யா, அவரது கணவர் விசாகன், அவர்களது மகன் வேத், அனிருத்தின் பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அது போல் மூத்த மகளான ஐஸ்வர்யா தனது இரு மகன்கள் லிங்கா, யாத்ராவுடன் கலந்து கொண்டார். இது தொடர்பாக சவுந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படத்தில் தனுஷ் மட்டும் இல்லாமல் இருந்தார்.
Recommended Video

ஓ இதுதான் விஷயமா
அவர் பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடிப்பதால் ஷூட்டிங் சென்றிருப்பார் என புரிந்து கொள்ளப்பட்டது. இது பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் இப்போதுதான் தெரிகிறது. தனுஷ்- ஐஸ்வர்யா இடையே உள்ள கருத்து வேறுபாடு கடந்த நவம்பர் மாதம் முதலே ஓடி கொண்டிருக்கிறது என்றும் ஐஸ்வர்யாவை சந்திப்பை புறக்கணிக்கவே தனுஷ், ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவில் பங்கேற்கவில்லை என்றும் தெரிகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications