2 சீக்ரெட்.. "கொக்கி" போட்டாச்சு போல.. பதறிய எடப்பாடி பழனிசாமி... ஆட்டத்தை கலைத்து ஆடும் ஓபிஎஸ்.. அட

எடப்பாடி பழனிசாமிக்கு 3 முக்கிய நெருக்கடிகள் ஓபிஎஸ் மூலம் சூழ்ந்து வருவதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: 3 முக்கிய சிக்கல்கள் எடப்பாடி பழனிசாமிக்கு நெருங்கிவருவதால், அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்திலும், ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளாராம்..!!
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை இன்னமும் ஓயவில்லை.. ஓபிஎஸ் + சசிகலா + தினகரனை இணைத்துக் கொள்ள சிறிதும் விருப்பமில்லை என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறிவருகிறார்..

ஆனால், ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜக மேலிடம் விரும்புவதால், அதற்கான அறிவுரைகளை எடப்பாடிக்கு சொன்னதாகவும், ஆனால், அப்போதுகூட எடப்பாடி அந்த பேச்சை காதில் வாங்கி கொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது..

 2 மேட்டர்

2 மேட்டர்

இதைதவிர, கொடநாடு விவகாரம், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை, என பல்வேறு விவகாரங்களில் எடப்பாடி பழனிசாமியின் பெயர் அடிபட்டு வருகிறது. மேலும், நெடுஞ்சாலை துறை ஊழல்கள், சம்பந்தி தொடர்பான ஊழல்கள் விஸ்வரூபமெடுத்துள்ளன. அதனால்தான், தன்னை காப்பாற்றும்படி, டெல்லி பாஜக தலைவர்களின் உதவியை நாடி எடப்பாடி பழனிசாமி சென்றதாகவும், ஆனால், எடப்பாடியை மேலிடம் கைவிட்டுவிட்டதாகவும் ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்...

 அஸ்திரம் A

அஸ்திரம் A

அதனால்தான், வேறு வழியில்லாமல், ஓரளவு இறங்கி வர எடப்பாடி சம்மதித்ததாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி கசிந்தது.. அதன்படி, ஓபிஎஸ்ஸுக்கு இணை பொதுச்செயலாளர் பதவியை தர போவதாகவும், இதற்காக முக்கிய நபரிடம் ஓபிஎஸ்ஸுக்கு தூதும் அனுப்பியதாகவும் கூறப்பட்டது.. ஆனால், ஓபிஎஸ் அதற்கு மறுத்துவிட்டாராம்.. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்தான் சமமான பதவிகள்.. அதன்படி தான் இத்தனை காலமும் இருந்துள்ளோம்.. அதே பதவிகளே நீடிக்க வேண்டுமே தவிர, புதுஸா ஒன்றை கிளப்ப கூடாது.. முதலில், பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக சசிகலா தொடர்ந்துள்ள வழக்கு முடிவுக்கு வரட்டும்" என்று பதிலளித்தாராம்.

 அஸ்திரம் B

அஸ்திரம் B

இறங்கி வந்தும் பலனில்லாமல் போகிறதே என்று எடப்பாடி நொந்து போனதாக கூறப்பட்டது.. இப்போது இன்னொரு சமாதான நடவடிக்கையை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.. அதன்படி, ஓபிஎஸ் தரப்பினரை சந்தித்து பேச, தன்னுடைய தரப்பு உறவினரை மதுரைக்கு எடப்பாடி பழனிசாமி அனுப்பி வைத்தாராம்.. மறுபடியும் கட்சியில் சேர்த்து கொள்ள வேண்டுமானால், இணை பொதுச்செயலாளர் பதவியை ஏற்று, சுப்ரீம்கோர்ட்டில் இருக்கும் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கொக்கி போடப்பட்டதாம்.. ஆனால், இதற்கும் ஓபிஎஸ் தரப்பு மறுத்து விட்டதாம்..

 மூவ் 1

மூவ் 1

இரட்டை இலை சின்னத்துக்கு கையெழுத்து போடுகிற அதிகாரம் மற்றும் அதிமுக அவைத் தலைவர் என்ற பதவியை மாற்றி தலைவராக ஓபிஎஸ்சை அறிவிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக சொல்லப்பட்டுவிட்டதாம்.. இந்த கண்டிஷனுக்கு ஓகே என்றால் பேசுவோம், இல்லாவிட்டால் கோர்ட்டிலேயே பார்த்துக் கொள்வோம் என்று கறாராக கூறிவிட்டதால், இதை கேட்டு எடப்பாடி டீம் அதிர்ந்து போய்விட்டதாம்.. மறுபடியும் இறங்கிவந்தும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டதே என்று நொந்து போயுள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.

 மூவ் 2

மூவ் 2

இதற்கு நடுவில், ஓபிஎஸ் தன்னுடைய அடுத்தக்கட்ட ஆட்டத்தை துவங்கிவிட்டார்.. அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய நிர்வாகிகளை நியமித்து கொண்டிருக்கிறார். சென்னை, விழுப்புரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமித்து வருவது, எடப்பாடிக்கு மேலும் சிக்கலை உண்டுபண்ணி வருகிறது.. அதுமட்டுமல்ல, சுப்ரீம்கோர்ட்டில் கேஸ் நிலுவையில் உள்ள நிலையில், டெல்லி மூலம் எடப்பாடிக்கு அழுத்தம் கொடுக்கும் பணியையும் ஓபிஎஸ் சைலண்ட்டாக மூவ் செய்து வருகிறாராம்.. ஆக, ஒருபக்கம் நிர்வாகிகள் நியமனம், மறுபக்கம் பாஜகவுக்கு அழுத்தம், இதற்கு நடுவில் பேச்சுவார்த்தையில் கறார்தன்மை என கெத்து காட்ட துவங்கி விட்டாராம் ஓ.பன்னீர்செல்வம்.

அப்பாயிண்ட்மென்ட்

அப்பாயிண்ட்மென்ட்

இன்னொரு அதிர்ச்சியும் எடப்பாடிக்கு உள்ளது.. வடசென்னை, தென்சென்னை, சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மாவட்ட அவை தலைவர், இணை செயலாளர், துணை செயலாளர்கள், பொருளாளர், ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர்கள், மருத்துவ அணி செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை ஓபிஎஸ் அறிவித்துள்ளார்... இந்த அறிவிப்பினையடுத்து, புதிய பொறுப்புகளுக்கு ஆசைப்பட்டு, முக்கிய நபர்கள் பலர் ஓபிஎஸ் முகாமை நாட ஆரம்பித்துள்ளார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+