கிளாம்பாக்கம் கிறங்கடிக்குதே.. கிளம்பிய 3 விஷயங்கள்.. விரைவில் அமைகிறது சென்னையின் "வரப்பிரசாதம்"
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு திறப்பு விழாவை நோக்கி நகர்ந்து வரும்நிலையில், 100 பேருந்துகளை வைத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சோதனை ஓட்டம் துவங்கப்பட்டுள்ளது.. இந்நிலையில், சில வசதிகளை கூடுதலாக செய்து தந்தால் பயணிகளுக்கு உதவியாக இருக்கும் என்ற கோரிக்கைகளும் கிளம்பி உள்ளன.
கிளாம்பாக்கத்தில் வடிகால் வசதி பணிகள் மிச்சமிருப்பதால்தான், பஸ் ஸ்டாண்டு திறப்பது தள்ளிப்போனது.. ஜிஎஸ்டி சாலையில், புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்தும் பணிகளும் நடந்தன..

அதேபோல, பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியேறும் மழைநீர் சுமார் 180 அடிநீளமுள்ள ஜிஎஸ்டி சாலையை கடந்து கிளாம்பாக்கம் ஏரி, மற்றும் வண்டலூர் ஏரிகளுக்கும் செல்லும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளும் நடந்தன.
புதிய கால்வாய்: இதற்கு நடுவில், பஸ் ஸ்டாண்டு அருகில், கிட்டத்தட்ட 1 மீட்டர் அகலம் உள்ள மழைநீர்கால்வாயை 2 மடங்கு அகலப்படுத்துவதுடன், புதிதாக 1180 மீட்டர் நீளத்தில் புதிய கால்வாய் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் 65 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்கவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அனுமதியும் கோரப்பட்டிருக்கிறது.
எவ்வளவு வசதிகளை செய்தாலும், பஸ் ஸ்டாண்டு பகுதியில், டிராபிக் இன்னும் அதிகமாகும் என்ற கவலை ஏற்கனவே கிளம்பியது. ஜிஎஸ்டி சாலையில் டிராபிக் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் வருவதற்கென ஒரு வழியும், சென்னைக்கு வெளியே இருந்து கிளாம்பாக்கம் வருவதற்கு வேறு வழியும் என 2 வழிகளை சிஎம்டிஏ மும்முரமாக உருவாக்கி வருவதாக செய்திகள் வெளியாகின.
வாகன ஓட்டிகள்: எனினும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தரப்பிலிருந்து 2 விதமான கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.. சென்னையின் நாலாபுற பக்கங்களிலிருந்தும் பயணிகள், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு வரவேண்டுமானால், பஸ், ஆட்டோ, அல்லது கேப்-களில்தான் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சேரவேண்டியதிருக்கும்.
ஏற்கனவே ஜிஎஸ்டி ரோட்டில், டிராபிக் ஜாம் நெருக்கி தள்ளும் நிலையில், இந்த நிலைமை வந்துவிட்டால், இன்னும் டிராபிக் அதிகமாகிவிடும். அதனால், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு வருபவர்களும்சரி, வெளியூரில் இருந்து வந்திறங்கும் பயணிகளும் சரி, மொத்தமாக வந்துசேரும்போது நெரிசல் விழிபிதுங்கிவிடும்.
ரயில் நிலையம்: இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால், உடனடியாக அந்த பகுதியில் ரயில் நிலையம் அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கோருகிறார்கள் அப்பகுதி மக்கள்.
அதேபோல, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை திறப்பதால் மட்டுமே, போக்குவரத்து சிக்கல்கள் தீர்ந்துவிடாது.. இந்த கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு பயணிகள் எப்படி வந்து சேர முடியும்? சென்னையின் எங்கோ மூலைப்பகுதிகளில் உள்ளவர்கள் இந்த கிளாம்பாக்கத்துக்கு வரவேண்டுமானால், இதற்காகவே பஸ் வசதி பிரத்யேகமாக வேண்டும்.. சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து புதிய பேருந்துகள் கிளாம்பாக்கத்துக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
கிளாம்பாக்கம்: ஆக, கிளாம்பாக்கம் பஸ் முனையம் திறக்கப்படவேண்டுமானால், ஒருபக்கம் ரயில் வசதி தேவை, இன்னொரு பக்கம் பஸ் வசதியும் தேவையாக இருக்கிறது..
இன்னொரு சிக்கலும் இதில் உள்ளதாம்.. கிளாம்பாக்கத்துக்கு குறைந்த செலவில் செல்ல வேண்டுமானால் ஊரப்பாக்கம் வரை மின்சார ரயிலில் சென்று, அங்கிருந்து 2 கிமீ சாலை மார்க்கமாக செல்ல வேண்டிய நிலைமை இருக்கிறது..
மேலும், நேரடியாக சொந்த வாகனங்களில் வருவோரால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கவே செய்யும்.. மாநகரப் பேருந்துகளை பயன்படுத்த அறிவுறுத்தினாலும் கோயம்பேட்டை பயன்படுத்தும் ஒரு லட்சம் பயணிகளை அழைத்துச்செல்ல போதிய மாநகர பஸ்கள் கைவசமில்லை.
புறநகர் பேருந்து: அப்படி, மாநகர பேருந்து மூலம் கிளாம்பாக்கத்தை அடைந்தாலும் அங்கிருந்து புறநகர் பேருந்து நிலையம் செல்ல நிலையத்தின் உள்ளேயே சுமார் 500 மீட்டர் நடக்க வேண்டியுள்ளது. எனவே, கட்டப்படவுள்ள மேம்பால பணியை விரைந்து முடித்தால் மட்டுமே இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும் என்கிறார்கள்.
எனினும், வரும் பொங்கலுக்குள் இந்த பஸ் ஸ்டாண்டை பொதுமக்களுக்காக திறந்து விடும் முடிவில் அதிகாரிகள் உள்ளதால், அதற்கான சோதனை ஓட்ட முயற்சிகளும் ஆரம்பமாகி உள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டு மட்டும் வந்துவிட்டால், சென்னையின் முகமே வேற வெலலுக்கு உயர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications