Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"லாஸ்ட் மினிட்ல" இப்படி ஆயிடுச்சே.. ரிஸ்க் எடுக்கிறாரா எடப்பாடி.. "நெளியும்" பாஜக.. அப்போ பன்னீரு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.. இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

கர்நாடக சட்டப்பேரவைக்கு மே மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது.

பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதிமுக கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருந்தது... இதற்காக தன்னுடைய விருப்பத்தை தொடர்ந்து வலியுறுத்தியபடியே உள்ளது.

When will panneeerselvam support BJP and Is AIADMK contesting in Karnataka election

கேஸ் நிலுவை: கர்நாடகாவில் போட்டியிட தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷாவிடமே இதற்கான கோரிக்கை வைக்கப்பட்டது.. ஆனால் கர்நாடகாவில் அதிமுகவுக்கு தொகுதி ஒதுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் அமித்ஷா. இதனிடையே கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ளதால் தன்னை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ளதால் அதற்கான எதிர்பார்ப்பும் கூடிவருகிறது.. இந்தநிலையில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்... கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக போட்டியிடும் என்றும் வேட்பாளராக கர்நாடக மாநில அதிமுக அவைத் தலைவர் அன்பரசன் போட்டியிடுவார் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

When will panneeerselvam support BJP and Is AIADMK contesting in Karnataka election

சிக்கலும், குழப்பமும்: அதிமுக ஆட்சிமன்றக்குழு பரிசீலத்து எடுத்த முடிவின்படி கர்நாடகாவில் ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்யப்பட்டு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, அதிமுக மட்டுமல்லாமல், கூட்டணி தொடர்பாகவும் சிக்கலும், குழப்பமும் கிளம்பி உள்ளது.. அதிமுக தனித்து போட்டியிட என்ன காரணம்? நாளைய தினம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ள நிலையில், எடப்பாடி திடீரென இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட என்ன காரணம் என்பது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.. கர்நாடக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் ஆரம்பத்தில் இருந்தே அதிமுக ஆர்வம் காட்டி வருகிறது.

கர்நாடகத்தில் திமுகவுக்கு எந்த அளவுக்கு ஓட்டு வங்கி உள்ளதோ அதுபோலவே அதிமுகவுக்கும் ஓட்டு வங்கி இருக்கிறது.. அதிலும் 15 தொகுதிகளில் தமிழர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.. இதில், பெங்களூரு மாநகராட்சியில் அதிமுகவுக்கு 9 கவுன்சிலர்கள் இருக்கிறார்கள்.. இவைகளை இழந்துவிடக்கூடாது என்றுதான் அதிமுக நினைக்கிறதாம்.. பாஜகவுக்கு வெறுமனே ஆதரவை மட்டுமே தந்துவிட்டு, ஒதுங்கி கொள்ளவும் அதிமுகவுக்கு மனசு வரவில்லை என்கிறார்கள். இதற்காகத்தான், இதை பற்றி உள்துறை அமைச்சர், பாஜக தேசிய தலைவர் நட்டாவிடம் பேச, தம்பிதுரையை சில நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சொல்கிறார்கள்..

When will panneeerselvam support BJP and Is AIADMK contesting in Karnataka election

தம்பிதுரை ஆலோசனை: கர்நாடக தேர்தல் பணிக்கான நிதி பற்றியும், எம்பி தேர்தலுக்கு பிறகு மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் தருவது பற்றியும் தம்பிதுரை அப்போதே பேசிய நிலையில் பாஜக திருப்திகரமான பதிலை அப்போது தரவில்லையாம்.. இதற்கு நடுவில் அதிமுக கேஸ் விஸ்வரூபமெடுத்துவிட்டது.. இப்போதைக்கு அதிமுக எடப்பாடி பழனிசாமி வசம் இருந்தாலும், தேர்தல் ஆணையம் இதுவரை பொதுச்செயலாளராக எடப்பாடியை அங்கீகரிக்கவில்லை. ஏ பார்ம், பி பார்மில் கையெழுத்து போடும் அதிகாரம் பெற்றால் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும்.

ஆனால், ஓபிஎஸ் கர்நாடகா தேர்தலில் போட்டியிடுவார் என்றால், மறுபடியும் எடப்பாடிக்கு "இலை" சிக்கல் வந்துவிடும் என்பதாலேயே தம்பிதுரை, அமித்ஷா தரப்பில் இந்த ஆலோசனையை நடத்தினாராம்.. ஆனால் அது போதுமான பலனை பெற்று தரவில்லை என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, பாஜகவினருக்கே சீட் கொடுக்க முடியாமல் திணறி வரும்நிலையில், அதிமுகவுக்கு சீட் எப்படி கொடுப்பது என்று மேலிடம் திகைத்தது..

எனவே, ஆதரவு மட்டுமே வேண்டும் என்று அதிமுகவிடம் சொல்லிவிட்ட நிலையில், அதுகுறித்து எடப்பாடி பழனிசாமி எந்த பதிலையும் சொல்லாமல் இருந்து வந்தார். மேலும், பாஜக மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 210 தொகுதிக்கு வேட்பாளரை ஏற்கனவே அறிவித்த நிலையில், நேற்றிரவு 10 தொகுதிக்கான வேட்பாளரையும் அறிவித்து விட்டது. அப்படியானால் மீதமுள்ள 2 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளரை அறிவிக்க வேண்டி நிலைமை உள்ளது..

தனித்து போட்டியா: இதுதான் அதிமுகவுக்கு மேலும் அதிர்ச்சியை தந்துவிட்டதாக சொல்கிறார்கள்.. கடைசிவரை காத்திருந்தும் சீட் தராததால்தான், எடப்பாடி பழனிசாமி இன்றைய தினம், கர்நாடகாவில் போட்டி என்பதை அறிவித்திருக்கக்கூடும் என்கிறார்கள்.. அப்படியானால், இது அதிமுக - பாஜக கூட்டணியை பாதிக்குமா? பாஜகவுக்கு அதிமுகவின் ஆதரவு எந்த அளவுக்கு கிடைக்கும்? ஓபிஎஸ் இந்த விஷயத்தில் என்ன செய்ய போகிறார்? இதெல்லாம் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக கிளம்பி உள்ளது.

When will panneeerselvam support BJP and Is AIADMK contesting in Karnataka election

தற்போது பாஜக வேட்பாளர் முரளியை எதிர்த்து, கர்நாடகா மாநில அதிமுக அவைத் தலைவராக இருக்கும் அன்பரசனை வேட்பாளராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.. பாஜக மீதான தங்களது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடப்போவதாக கூறப்படுகிறது...

அதிமுகவுக்கு சீட் ஒதுக்காமல் பாஜக கைவிரித்து விட்டதால், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், பாஜகவை எதிர்த்து அதிமுக போட்டியிட போவது மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.. அத்துடன், நடக்க போகும் எம்பி தேர்தலிலும் தனித்து போட்டியிடுவதா? அல்லது கூட்டணியா? என்பது குறித்து நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி ஆலோசனை நடத்த போவதாகவும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+