மகளிர் உரிமைத் தொகை.. குறிக்கப்பட்ட தேதி.. புதிய பயனாளிகளுக்கு எப்போது ரூ.1000? வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது 1 கோடியே 25 லட்சம் பெண்கள் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் நேரடியாக பயன் பெற்று வருகின்றனர். இதில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர்.

அதன்படி கூடுதலாக 10 - 15 லட்சம் பேர் வரை இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட உள்ளனர். அதன்படி இந்த பயனாளிகள் எண்ணிக்கை 1.45 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது. இதற்கான புதிய விண்ணப்ப தேதி தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

Tamil Nadu Government Notification ration magalir urimai thogai

அதன்படி ஜூன் முதல் வாரம் விண்ணப்பம் செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. பெரும்பாலும் ஜூன் 1ம் தேதியே புதிய விண்ணப்பங்கள் ரிலீஸ் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு அனுமதி பெறப்பட்டதும்.. விண்ணப்பம் ரிலீஸ் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் போன முறை நிராகரிக்கப்பட்டு மீண்டும் விண்ணப்பம் செய்பவர்கள்.. வட்டாட்சியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக பெண்களுக்கு முக்கியமான நல்ல செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் மீண்டும் அளிக்கப்பட உள்ளது. மகளிர் உரிமை தொகை திட்டம் 2 மாதத்தில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் கடந்த முறை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். சாதாரணமாக புதிதாக விண்ணப்பம் செய்பவர்கள் நேரடியாக இ சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால் போன முறை நிராகரிக்கப்பட்டு மீண்டும் விண்ணப்பம் செய்பவர்கள்.. வட்டாட்சியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.

முக்கியமான நல்ல செய்தி

இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தில் குடும்ப தலைவி அல்லாதவர்களுக்கு பணம் கிடைக்கும். ஒரு வீட்டில் அப்பா, 2 மகன், 3 மகள் இருக்கிறார்கள். யாருக்கும் திருமணம் ஆகவில்லை. அம்மா உயிரோடு இல்லை என்றால் வீட்டில் உள்ள 21 வயது நிரம்பிய முதல் பெண்ணுக்கு பணம் தரப்படும். அவர் குடும்ப தலைவி இல்லையென்றாலும் மகளிர் உரிமை தொகை மூலம் பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து அவர்கள் தகுதியானவராக இருந்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். இதன் மூலம் மீண்டும் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் விவாகரத்து பெற்றவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும். அவர்கள் தனி ரேஷன் கார்டு பெற்றுள்ள நிலையில் கண்டிப்பாக மகளிர் உரிமை தொகை கிடைக்கும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது

ஒரு ரேஷன் கார்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு மட்டுமே பணம் கிடைக்கும். இரண்டாவது பெண்ணுக்கு பணம் தரப்பட்டது. இதற்காக இரண்டாவது பெண் தனியாக ரேஷன் வாங்கினாலும் கிடைக்காது. ஏனென்றால் ஒரே வீட்டில் இருந்தால் சோதனையின் போது பணம் தர கூடாது என்று முடிவு எடுக்கப்படும். கள ஆய்வில் ஒரே வீட்டில் இரண்டு ரேஷன் இருந்தால் அதில் இரண்டாவது ரேஷன் நீக்கப்படும்.

அரசு பென்ஷன் பெற்றால் அவர்களுக்கு கண்டிப்பாக பணம் கிடைக்காது. அரசின் வேறு வகையான வருமானம் பெற்றாலும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது. அரசு ஊழியர் அல்லாத கணவர்களின் மனைவிகளுக்கு பொருந்தும். அவர்களுக்கு பணம் வழங்கப்படும். புதிதாக திருமணம் ஆகி ரேஷன் கார்டு பெற்றவர்கள். அரசு ஊழியர் அல்லாத பட்சத்தில் வழங்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+