ஆமா.. உடம்பு சரியில்லைங்கிறாரே ரஜினிகாந்த்.. அப்போ, அண்ணாத்த சூட்டிங்? பரபரப்பு தகவல்கள்
சென்னை: உடல்நிலை காரணமாக அரசியலிலிருந்து விலகுவதாக ரஜினிகாந்த் நேற்று பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு இல்லாதபோது கலந்து கொள்வார் என்பது பற்றி கேள்விகள் எழுந்துள்ளன.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் ரஜினிகாந்துக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க, மாத்திரைகளை சாப்பிடுகிறார். எனவே கொரோனா தடுப்பூசி அமலுக்கு வந்த பிறகும் கூட ரஜினி அதைப் போட்டுக் கொள்ள முடியாது.
இந்த நிலையில், மக்களை சந்தித்து அரசியல் செய்வது இயலாத காரியம் என்பதால் அரசியலுக்கு வரவில்லை. இதையும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

40 நாட்கள் கால்ஷீட்
இந்த நிலையில்தான் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் எப்போது நடிப்பார் என்ற கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன.
அண்ணாத்த திரைப்படத்திற்காக ரஜினிகாந்த் மொத்தம் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். அதில் இதுவரை 10 நாட்கள்தான் நடித்து கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இனிமேல்தான், ரஜினிகாந்த் அதிகமாக பங்கேற்க வேண்டிய காட்சிகள் இருக்கின்றன. இதில் சண்டைக் காட்சிகள் கூட உள்ளன. இப்படியான கடுமையான ஒரு ஷூட்டிங்கை ரஜினிகாந்த் எதிர்கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது.

அண்ணாத்த சூட்டிங்
ஜனவரி மாதம் முதல், மறுபடி அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கை துவங்குவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால், ரஜினிகாந்த் இப்போதைக்கு ஷூட்டிங் செல்ல மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, அவர் சூட்டிங்கிற்கு சென்றால், உடல் நலக்குறைவால் அரசியலுக்கு மட்டும் வரமுடியவில்லை ஆனால், ஊதியம் கிடைக்கிறது என்பதற்காக படப்பிடிப்புக்கு மட்டும் ரஜினிகாந்த் போகிறார் என்ற அவப்பெயரை சுமக்க வேண்டியது வரும்.

ரத்து செய்யலாமே
இப்போதே சில ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் இந்த படத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்க ஆரம்பித்துள்ளனர். ஓய்வு என்று கூறிய பிறகு, அனைத்துக்கும் ஓய்வு. அது தானே சரியானதாக இருக்க முடியும். அதுதானே உடல் நலத்தை பாதுகாக்கும். படத்தில் மட்டும் நடிப்பேன் அரசியல் மட்டும் வேண்டும் என்றால் அது சந்தர்ப்பவாதமாக பார்க்கப்படும் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

ரஜினியின் நியாயம்
இதெல்லாம் ரஜினியின் கவனத்திற்கு போகிறது. எனவே இப்போதைக்கு அவர் படப்பிடிப்பில் பங்கேற்க செல்லப்போவதில்லை. இது படப்பிடிப்பு குழுவிற்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயம்தான் என்றாலும், தேர்தல் முடிந்து அதன் பிறகு அவர் சூட்டிங் சென்றால், அதற்குள்ளாக கொரோனா நோய் தடுப்பூசி பரவலாகி விடும். படக்குழுவினர் அந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள வாய்ப்பு அதிகம். எனவே பயமின்றி நான் சூட்டிங் சென்றேன் என்று தனது நியாயத்தை சொல்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும், என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications