ஓஹோ.. இது லிஸ்ட்லயே இல்லையே.. "எடு வண்டியை".. சேலம் நோக்கி சசிகலா.. அதிமுகவில் டென்ஷன்

எடப்பாடி பழனிசாமி அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா எடுத்து வரும் ஒவ்வொரு முயற்சியையும், தன்னுடைய சமயோஜித புத்தியால் நொறுக்கி தள்ளி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.. ஆனாலும் சசிகலா தன் முயற்சியில் கொஞ்சம் கூட தளராமல் அடுத்த அடியை எடுத்து வைத்து வருகிறார். அந்த வகையில், எடப்பாடியை விரைவில் நெருங்குகிறாராம் சசிகலா..!

அன்று சசிகலா ஜெயிலுக்கு சென்றதையடுத்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்பட்டு வந்தது.. பிறகு கட்சியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

விடுதலையாகி வந்ததில் இருந்தே அதிமுகவை கைப்பற்ற சசிகலா நடவடிக்கை எடுத்து வருகிறார்.. வழக்கமாக அரசியலில் அதிரடி காட்டும் சசிகலா, இப்போதெல்லாம் மென்மை போக்கை கடைப்பிடித்து வருகிறார்..

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

குறிப்பாக எடப்பாடி பழனிசாமி விஷயத்தில் அளவுக்கு அதிகமான பொறுமையை கையில் எடுத்து வருகிறார்.. அதேசமயம், எடப்பாடியை தன் பக்கம் இழுத்து வரும் முயற்சியையும் மேற்கொண்டு வருகிறார்.. மற்றொரு பக்கம் தொண்டர்கள், நிர்வாகிகளை பலப்படுத்தியும் வருகிறார்.. அவர்களையும், அதிமுகவின் அதிருப்தி தலைவர்களையும் நேரில் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.. இதற்காகவே சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

 மாவட்டம்

மாவட்டம்

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் அதிமுக தோல்வியடைந்துவிட்டது.. 9 மாவட்ட மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக எந்தவொரு மாநகராட்சியையும் கைப்பற்றாமல் தோல்வியடைந்துவிட்டது.. அதிமுகவிலும் உட்பூசல் குறையவில்லை.. இதனால், சசிகலா குறித்த பேச்சுகள் மீண்டும் அதிகரித்துள்ளது.. சமீபத்தில்கூட, அதிமுக தேனி மாவட்டச் செயலாளர், "சசிகலாவையும் தினகரனையும் கட்சியில் சேர்த்தாலே அணைத்து பிரச்னைகளும் முடிந்துவிடும்" என்று பேசியிருந்தார்..

 தென் மாவட்டம்

தென் மாவட்டம்

இதற்கு அதிமுகவில் ஆதரவும் உள்ளது.. எதிர்ப்பும் உள்ளது.. சசிகலா தென்மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.. இதற்காக, சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தபோது அவரிடம் "சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது தொண்டர்கள் உங்களை சந்திப்பார்களா" என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு சசிகலா, "இதிலென்ன சந்தேகம், அதிமுக ஒரே குடும்பம், நிச்சயமாக தொண்டர்களை நானே நேரில் போய் சந்திப்பேன்" என்று கூறியிருந்தார்.

 புது மேட்டர்

புது மேட்டர்

சசிகலா இப்படி சொன்னதுமே அதிமுக மேலிடத்துக்கு கலக்கம் சூழ்ந்தது.. இப்போது அடுத்த வெடிகுண்டை சேலம் பக்கம் வீசியுள்ளார் சசிகலா.. வருகிற மார்ச்-20. சசிகலாவின் கணவர் நாடராஜனின் நினைவு நாள். இதனை அனுஷ்டிக்கும் விதத்தில் அன்றைய தினம் தஞ்சையில் உள்ள விளார் கிராமத்திற்கு செல்கிறார் சசிகலா... நினைவு நாளை அனுஷ்டித்து விட்டு அப்படியே தரை வழியாக சேலம் செல்ல போகிறாராம்..

 எடப்பாடி பிளான்

எடப்பாடி பிளான்

எனவே, எடப்பாடி ஏரியாவில் கூட்டம் நடத்தி தொண்டர்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்று நடராஜனின் சகோதரர் ராமச்சந்திரனின் யோசனையாக உள்ளதாம்.. அதனாலேயே இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார் சசிகலா என்கிறார்கள்.. தஞ்சை டூ சேலம் வரையில் அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்க ராமச்சந்திரனின் தரப்பு திட்டமிட்டுள்ளது... இந்த வரவேற்பில் கூட்டத்தை அசத்த இப்போதே ஆட்களை தேடிக் கொண்டிருக்கிறார்களாம்..

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

கடந்த வாரம், திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற போது, ஆன்மீக சுற்றுப்பயணமாக மாற்றியமைத்தது போல, இப்போது தற்போது தஞ்சை டூ சேலம் செல்லும் சசிகலாவின் பயணத்தை அரசியல் பயணமாக நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.. எடப்பாடிக்கே சசிகலா வருவதும், நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக கூறப்படுவதையும் கேள்விப்பட்டு, அப்படியே உறைந்துபோய் உள்ளதாம் கட்சி மேலிடம்.. அதை முறியடிக்க ஏதாவது வழி இருக்கிறதா என்ற ஆலோசனையிலும் எடப்பாடி தரப்பு இறங்கி உள்ளது..

Recommended Video

    தேனி: சசிகலா, டிடிவி தினகரன் அதிமுகவில் சேர்ப்பா? செல்லூர் ராஜூ சொன்ன சூப்பர் பதில்!
     டெல்லி மேலிடம்

    டெல்லி மேலிடம்

    குறிப்பாக, சசிகலாவுக்கு கட்சிக்குள் ஆதரவு பெருகிவருவதை தடுக்க அவரை லேசாக மிரட்டி வைக்கத்தான் மீண்டும் ஜெயில் மேட்டரை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.. இந்த ஜெயில் மேட்டருக்கு சசிகலா கட்டுப்படுவாரா? என்று தெரியவில்லை.. ஆனால் ஜெயில் மேட்டரை கையில் எடுக்க வேண்டுமானாலும்சரி, அதை செயல்படுத்த வேண்டுமானாலும் சரி, டெல்லி அனுமதியும் கட்சிக்குள் முக்கியமாக பார்க்கப்படுகிறது.. எனவே, அதிமுக என்ன செய்ய போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டி உள்ளது.. பார்ப்போம்..!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+