Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆரம்பமே சூப்பர்.. கேரளவில் அடித்து ஆடப்போகும் தென்மேற்கு பருவமழை - தமிழகத்திற்கு எப்படி?

திருவனந்தபுரம் முதல் பாலக்காடு வரையிலான ஒன்பது மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளாவில் தென் மேற்கு பருவமழை கனஜோராக தொடங்கியுள்ளது. ஆரம்பித்த உடனே மழை வெளுத்து வாங்கப்போகிறது. திருவனந்தபுரம் முதல் பாலக்காடு வரையிலான ஒன்பது மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு தமிழகத்திற்கு இயல்பான மழை கிடைக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிக மழைப் பொழிவைத் தரும் தென்மேற்கு பருவமழை, ஜூன் ஒன்றாம் தேதி கேரளாவில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த நிலையில், இந்த ஆண்டில் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மே 29ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமையே தொடங்கி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் பரவலாக மழை பெய்துள்ளது மற்றும் கேரளாவில் பருவமழை தொடங்குவதாக அறிவிக்கும் 14 மழைப்பொழிவு கண்காணிப்பு நிலையங்களில், 10 நிலையங்கள் 2.5 மிமீ அல்லது அதற்கும் அதிகமான மழையைப் பெற்றுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் வேகம் அதிகரிப்பு

காற்றின் வேகம் அதிகரிப்பு

தென்கிழக்கு அரபிக்கடலில் மேற்குக் காற்றின் வலிமை அதிகரித்துள்ளது. இறுதியாக, தென்கிழக்கு அரேபிய கடல் மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் மேகமூட்டம் அதிகரித்துள்ளது, மத்திய அரபிக்கடலின் சில பகுதிகள், கேரளாவின் எஞ்சிய பகுதிகள், தமிழகத்தின் மேலும் சில பகுதிகள், கர்நாடகா மற்றும் தெற்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா, வடகிழக்கு வங்காள விரிகுடா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேறுவதற்கு சாதகமான சூழ்நிலையும் உள்ளது.

 மஞ்சள் எச்சரிக்கை

மஞ்சள் எச்சரிக்கை

அரபிக் கடலில் இருந்து தென் தீபகற்பத்தின் மேல் இந்தியாவிலிருந்து கீழ் மற்றும் நடுத்தர வெப்பமண்டல மட்டங்களில் மேற்குப் பருவக்காற்று மற்றும் கேரளா மற்றும் மத்திய வெப்பமண்டல மட்டத்தில் சுற்றுவட்டாரத்தில் வளிமண்டல சுழற்சியின் காரணமாக மாநிலத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவனந்தபுரம் முதல் பாலக்காடு வரையிலான ஒன்பது மாவட்டங்களில் திங்கள்கிழமை கனமழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இயல்பான அளவு மழைப்பொழிவு

இயல்பான அளவு மழைப்பொழிவு


தென் அரபிக்கடல், லட்சத்தீவு பகுதி, கேரளாவின் பெரும்பாலான பகுதிகள், தென் தமிழகத்தின் சில பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஞாயிற்றுக்கிழமை பருவமழை முன்னேறியது.
வழக்கத்தை விட மூன்று நாட்களுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், நடப்பாண்டில் மழைப்பொழிவு என்பது இயல்பான அளவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீண்ட கால சராசரி மழையளவில் 96 சதவீதம் முதல் 104 சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பருவமழை மழை எப்படி

பருவமழை மழை எப்படி


கடந்த 10 ஆண்டுகளில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை அதன் இயல்பான தேதியை விட மூன்று நாட்களுக்கு முன்னதாக 2018 இல் தொடங்கியது. இந்த ஆண்டு பருவமழைக்கு முந்தைய சராசரி மழையை 64.56 செ.மீ மழையுடன் மாநிலம் 98% அதிகமாகப் பெற்றுள்ளது. அதாவது 32.62 செ.மீ.அளவிற்கு மழை அளவு பதிவாகியுள்ளது.

இயல்பை விட அதிக மழை

இயல்பை விட அதிக மழை

கடந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழையின் மூலம் 39.34 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இது இயல்பை விட 17 சதவீதம் அதிகமாகும். இந்த நிலையில், நடப்பாண்டில் தமிழகத்தில் இயல்பான மழையே பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேசமயம், திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மீனவர்கள் கவனம்

மீனவர்கள் கவனம்

அடுத்த ஐந்து நாட்களில் தென்மேற்கு அரபிக்கடலில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும் என்றும் மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் தென்கிழக்கு அரேபிய கடல், லட்சத்தீவு பகுதி, கேரளா கடற்கரையை ஒட்டிய பகுதி, கொமோரின் பகுதி, வடகிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய குஜராத் கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+