சென்னை புறநகர் ஏசி மின்சார ரயில் எப்போது? சோதனை ஓட்டமும் நடத்தியாச்சு.. வெளியான குட் நியூஸ்
சென்னை: சென்னை புறநகர் ஏசி மின்சார ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி முடிந்து அண்மையில் சோதனை ஓட்டமும் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் எப்போது ஏசி மின்சார ரயில் சேவை பயன்பாட்டுக்கு வரும் என்று பயணிகள் எதிர்பார்த்த நிலையில், வரும் மார்ச் மாதம் இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை பயணிகளுக்கு பெரும் வரப்பிரசாதம் போல அமைந்து இருப்பது புறநகர் மின்சார ரயில்கள்தான். ஏனெனில் சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு இருசக்கர வாகனங்களிலும், பேருந்துகளில் செல்லும் பயணிகள் நிலை திண்டாட்டமாகத்தான் இருக்கும். வீட்டில் இருந்து கிளம்பியது முதல் அலுவலகம் செல்லும் வரை கடிகாரத்தையும் சிக்னல்களையும் பார்த்துக்கொண்டே பயணிகள் செல்ல வேண்டியிருக்கும்.

சென்னை புறநகர் ஏசி மின்சார ரயில்
ஆனால் ரயில்களில் சென்றால் பெரும்பாலும் சரியான நேரத்திற்கு சென்று விட முடியும். இதனால் புறநகர் மின்சார ரயில்களில் செல்வதையே பயணிகள் விரும்புவார்கள். பள்ளி, கல்லூரி மற்றும் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் என அனைவரும் தினந்தோறும் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், சென்னையில் மின்சார ரயில் சேவை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
பயணிகளின் வசதிக்கு ஏற்ப ரயில் போக்குவரத்தும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், புறநகர் மின்சார ரயில்களில் ஏசி வசதி கொண்ட ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, சென்னை - கடற்கரை - செங்கல்பட்டு ரூட்டில் புறநகர் மின்சார ரயில்களை இயக்குவதற்கான நடவடிக்கையை ரயில்வே தொடங்கியது.
ஏசி மின்சார ரயில் சேவை எப்போது?
இதற்கான அனுமதியை ரயில்வே வாரியம் கொடுத்த நிலையில், 12 பெட்டிகள் கொண்ட 2 ஏசி மின்சார ரயில்களை தயாரிக்கும் பணியில் ஐசிஎப் ஈடுபட்டது. ஏசி பெட்டிகள் தயாரிக்கும் பணி முடிந்து சோதனை ஓட்டமும் நடந்து முடிந்துள்ளது. தாம்பரத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில், இந்த ரயில்கள் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் இடையே ஏற்பட்டுள்ளது.
கோடைக்காலம் துவங்க உள்ள நிலையில் அதற்குள் மின்சார ரயில்களை பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கோடையில் வெயிலின் உக்கிரத்தில் தப்பித்து ஜில்லென்ற பயணத்தை மேற்கொள்ள முடியும் என்பதால் பயணிகள் இடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. எனினும், இந்த ரயில் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற விவரம் எதையும் தெற்கு ரயில்வே வெளியிடாமல் இருந்தது.
மோடி தொடங்கி வைக்கிறார்
இதனிடையே, தெற்கு ரயில்வேக்கான முதல் ஏ.சி. மின்சார ரயிலை பிரதமர் மோடி துவங்கி வைப்பார் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:- ராமேஸ்வரம் ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிவடையும். எனவே, பிரதமர் மோடி வரும் மார்ச் முதல் வாரத்தில் பாம்பன் ரயில் பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கிவைக்க உள்ளார்.
எனினும் தேதி இறுதி செய்யப்படவில்லை. ராமேசுவரத்தில் இருந்து காணொலி வாயிலாக ஏசி மின்சார ரயில் சேவையையும், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைப்பார்" என்றனர். எனவே இன்னும் ஓரிரு வாரங்களில் புறநகர் மின்சார ரயில் பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல் பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
ஏசி மின்சார ரயிலில் உள்ள வசதிகள் என்ன
அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. தானியங்கி கதவுகள், ஜி.பி.எஸ். அடிப்படையிலான தகவல் வசதி மற்றும் அறிவிப்பு வசதிகள் உள்ளன. அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் இருக்கும். இந்த ரயில் தாம்பரம் யார்டில் நிறுத்தப்பட்டு, சோதனை செய்யப்படுகிறது.
இந்த புறநகர் மின்சார ரயில்கள் 12 பெட்டிகள் கொண்டதாகும். ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேரும், நின்று கொண்டு 3,798 பேரும் என மொத்தம் 4,914 பேர் பயணம் செய்யலாம்.
-
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications