Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பிளேட்டை" திருப்பினாரா எடப்பாடி.. பல்டி அடித்த அதிமுக.. தவிடுபொடியான கணிப்பு.. தவழ்ந்து வந்த இனிப்பு

அதிமுக பாஜக கூட்டணி இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்று மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி முடிவுக்கு வருகிறதா? பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டிவிட எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டாரா? என்ற யூகங்களும், சந்தேகங்களும் பரபரத்து கிடந்த நிலையில், மொத்தமும் சுக்குநூறாக நொறுங்கிவிட்டது.. இதற்கு என்ன காரணம்?

கடந்த 4 நாட்களாகவே அதிமுக - பாஜக கூடாரம் பற்றிக்கொண்டு எரிந்தது.. திடீர் திடீரென பாஜக நிர்வாகிகள், அதிமுக பக்கம் கிளம்பி சென்றார்கள். அப்படி செல்லும்போது, பாஜக மாநில தலைமையை விமர்சித்துவிட்டும் போனார்கள்.

ஈரோடு பிரச்சாரத்தின்போதுகூட 2 கட்சி தலைவர்களும் ஒற்றுமையாக இருந்த நேரத்தில், திடீரென என்ன நடந்தது? என்ற சந்தேகங்கள் அடுத்தடுத்து கிளம்பின.

முஸ்லிம் ஓட்டு

முஸ்லிம் ஓட்டு

இந்த திடீர் மோதல்களுக்கு காரணம், பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டிவிட எடப்பாடி நினைப்பதாகவும், அப்போதுதான், வரப்போகும் தேர்தல்களில், இதுவரை கையைவிட்டு நழுவிப்போன முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஓட்டுக்களை பெற முடியும் என்று நம்புவதாகவும் காரணம் சொல்லப்பட்டது.. மேலும், ஓபிஎஸ், சசிகலாவை கட்சிக்குள் இணைத்து கொள்ளும்படியான பாஜகவின் குடைச்சல்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் எடப்பாடி நம்புவதாகவும் சொல்லப்பட்டது. அதற்கேற்றவாறு, மூத்த தலைவர் செம்மலை தந்த பேட்டியில், "பாஜக அதிமுக கூட்டணியில் இப்போது கிடையாது. வரப்போகும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் கூட்டணி தொடர்கிறதா? என்பதை எடப்பாடி பழனிசாமிதான் முடிவெடுப்பார் என்றார்.

மாயாஜாலம்

மாயாஜாலம்

பாஜகவுக்கு எதிரான செயல்பாடுகளாக இவையெல்லாம் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் அதிமுக அடக்கிவாசிக்கிறதோ? என்ற சந்தேகத்தை சிலர் கிளப்பினார்கள்.. காரணம், "தன் ஆதரவாளர்களை இழுக்கும் பணியை தொடங்கியதால், தானும் அதை செய்ய நேரிடும்" என்று அண்ணாமலை எச்சரித்தும், அதற்கு அதிமுக மூத்த தலைவர்கள் யாருமே பதிலடி தரவில்லை.. கோவில்பட்டியில் எடப்பாடியின் உருவபொம்மை எரித்தும், அதற்கும் அதிமுக மூத்த தலைவர்கள் யாருமே பதிலடி தரவில்லை.. எதிர்வினையாற்றுவோம் என்ற பாஜகவின் எச்சரிக்கைக்கும் அதிமுக மூத்த தலைவர்கள் யாருமே பதிலடி தரவில்லை.

பிரம்மாஸ்திரம்

பிரம்மாஸ்திரம்

அதனால், நேற்றைய தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எப்படியும் அதிமுக - பாஜக மோதல்போக்கு குறித்து எடப்பாடி தலைமையில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே, பாஜ தலைவர்கள் அதிமுகவை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருவது குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாம்.. அப்போது, குறிப்பாக தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, அதிமுக தலைமையை கடுமையாக விமர்சித்து வருவதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று பலரும் ஆவேசமாகவும் கூட்டத்தில் கருத்து கூறியிருக்கிறார்கள்.. ஆனாலும், எடப்பாடி பழனிசாமி இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லையாம்.

பம்மிய கூடாரம்

பம்மிய கூடாரம்

மாறாக, "சிறுபான்மையின மக்கள் ஓட்டு நமக்கு வராததால் இடைத்தேர்தலில் நமக்கு சரிவு ஏற்பட்டுள்ளது, எனினும், இப்போது, திமுக மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்....எம்பி தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும், ஒற்றுமையுடன், அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.. 2024ம் ஆண்டு தேர்தலிலும் பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்து தேர்தலில் போட்டியிடும்.. தமிழக பாஜக தலைவர்கள் பேச்சுக்கு, அதிமுக மூத்த நிர்வாகிகள் யாரும் உணர்ச்சி வசப்பட்டு பதிலடி கொடுக்க வேண்டாம். அப்படி பதிலடி கொடுத்தால் அதிமுக தலைவர்களுக்குதான் பிரச்சனை வரும்.. அதனால் பாஜ தலைவர்களை விமர்சித்து அதிமுக தலைவர்கள் யாரும் பேசக்கூடாது. கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் என்றும் கடிவாளம் போட்டுவிட்டாராம் எடப்பாடி பழனிசாமி.

 மாயாஜாலம்

மாயாஜாலம்

இதையடுத்தே, ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போதும், பாஜகவுடன் எந்த மோதலும் இல்லை... ஐடி விங் தரப்பில் சில பக்குவப்படாத கருத்துகள் பகிரப்பட்டது. அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்தே வருகிறது என்று கூறினாராம்.. அந்தவகையில், அதிமுக - பாஜக கூட்டணியிடையே முறிவு ஏற்பட்டுவிடுமோ என்ற அஞ்சக்கூடிய அளவுக்கு சலசலப்புகள் நடந்த நிலையில், அவை அனைத்துமே நேற்றைய தினம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அனைத்துவிதமான யூகங்களும் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது.. கூட்டணியும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது..

பச்சைப்பொய்

பச்சைப்பொய்

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், அதிமுகவின் இந்த திடீர் பல்டிக்கு காரணம் என்ன? எடப்பாடியின் உருவபொம்மையை தீயிட்டு எரிக்கும் அளவுக்கு சென்ற நிலையில், திடீரென கூட்டணிக்குள் ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்ல அதிமுக தலைவர்கள் சொல்ல காரணம் என்ன? என்ற புதுகுழப்பம் எழுந்துள்ளது.. அப்படியானால், "அண்ணாமலையும் - எடப்பாடியும் சேர்ந்து நாடகம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்" என்று கேசி பழனிசாமி சொன்னதெல்லாம் உண்மையா? என்றும் சிலர் சந்தேகங்களை கிளப்பி விட்டுள்ளனர்.. அடுத்து என்ன நடக்க போகிறது? பார்ப்போம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+