முக்கோண இடி.. "ஆடாமல் ஜெயிப்போமேடா" காலரை தூக்கும் எடப்பாடி.. அதிரும் 3 புள்ளிகள்.. பரபரக்கும் அதிமுக
பன்னீர்செல்வம் தரப்பு விரைவில் சசிகலா, டிடிவி தினகரனை சந்திக்க போவதாக தகவல்கள் கூறுகின்றன
சென்னை: பொதுச்செயலாளர் தேர்தல் பரபரப்பு அதிமுகவில் ஆரம்பமாகி உள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பு என்ன செய்ய போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. அநேகமாக விரைவில் சசிகலா, தினகரனை ஓபிஎஸ் விரைவில் சந்திக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறுகிறது என்று அதிமுக தலைமை அறிவித்திருந்த நிலையில், இன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் நடக்கிறது.
நாளை மார்ச் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம், மார்ச் 20 ஆம் தேதி அன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது என்றும் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

திடீர் அறிவிப்பு
மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர் மார்ச் மாதம் 21ம் தேதி அன்று பிற்பகல் 3 மணிக்குள் திரும்பப் பெறலாம்.. மார்ச் 26 ம் தேதி அன்று காலை 8 மணி முதல் மாலை 6:00 மணி வரைக்கும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் , மார்ச் 27ம் தேதி திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, அதிமுகவின் சட்ட விதிகளின்படியே பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என்றும், ஜனநாயக முறையில் இந்த தேர்தல் நடைபெறும் என்றும், பொதுச்செயலாளர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றும் அறிவித்திருக்கிறார் .

பழனிசாமி
இப்போதைக்கு அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி, இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கிறார்.. இவர் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்காக தேர்தல் நடத்தப்படுகிறது என்பதால், இவரைஎதிர்த்து யாருமே போட்டியிடப் போவதில்லை, எப்படி பார்த்தாலும், எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட போகிறார். இதுதான் நடக்கப்போகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து சொல்லி வருகிறார்கள். எனினும், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படும் என்றும், யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளதால், எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து யார் போட்டியிடப் போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு எகிறுகிறது..

கலக்கம்
ஜெயக்குமார் இப்படி ஒரு கருத்தை சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை.. ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களின் அடிப்படை உறுப்பினர் தகுதி காலாவதி ஆகிவிட்டது.. அதனால் ஓபிஎஸ்ஸுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை.. அவர் அணியை சேர்ந்தவர்கள் யாரும் இந்த தேர்தலில் போட்டியிட முடியாது என்பதுதான், எடப்பாடி டீமின் அழுத்தமான வாதமாக இருந்து வருகிறது.. எனினும், ஓபிஎஸ் தரப்பு இந்த முறையும் ஏதாவது பிரச்சனை செய்துவிடுமா? என்ற கலக்கம் உள்ளுக்குள் இருப்பதால்தான், போலீஸ் பாதுகாப்பையும் அதிமுக கோரியுள்ளதாக சொல்கிறார்கள்.

ஒர்க்அவுட்
கட்சியில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த பிறகு, அதிகாரம் மிக்க பதவிக்கு, தான் மட்டுமே வரவேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் கடந்த ஒரு வருட கால விருப்பமாக இருந்து வருவதாக தெரிகிறது.. அதனால்தான், இதற்கான வேலையை கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுக்கூட்டத்திலேயே துவங்கிவிட்டாராம்.. ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, இந்த பொதுச்செயலாளர் தேர்தலில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காகத்தான், நேற்றைய தினம் தேர்தலை அறிவித்து, இன்றைய தினமே வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என்று கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டதாக காரணம் சொல்கிறார்கள்.

சம்பிரதாயம்
இந்த தேர்தல் அறிவிப்பு ஒரு சம்பிரதாயம் என்றாலும், போட்டியின்றி எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வாவார் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.. மேலும், கட்சியின் சட்ட திட்டங்களின்படி அடிப்படை உறுப்பினர்களால் அவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதால் அதற்கான சட்ட பாதுகாப்பு உறுதியாகிவிடும் என்கிறார்கள். இந்த பொதுச் செயலாளாரை தேர்ந்தெடுப்பதில் புதிய விதிகள் கடந்த ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவிலேயே சேர்க்கப்பட்டது..

தேர்தல்
அந்த வகையில் 10 வருட காலம் கட்சியில் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும், 5 வருட காலம் தலைமைக் கழக நிர்வாகியாக பணியாற்றியிருக்க வேண்டும், பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட குறைந்தது 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்று விதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளின்படி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக யாரும் போட்டியிட வரமாட்டார்கள் என்பதால், போட்டியின்றி எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட 200 சதவீதம் வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது..

ஹேப்பி பூரிப்பு
"எடப்பாடி தரப்பின் நடவடிக்கைகள் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை சட்டநீதிக்கு புறம்பாகதான் நடைபெற்று கொண்டிருக்கிறது, இது அனைவருக்கும் தெரியும்" என்று நேற்று முன்தினம் ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் சொல்லியிருந்த நிலையில், இந்த பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார்.. அதேபோல, எக்காரணம் கொண்டு, அதிமுகவை கைப்பற்றியே தீருவேன் என்று முழக்கமிட்ட சசிகலாவும், இதுவரை இந்த விஷயத்தில் கருத்து எதுவும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார்.. தன் கூடாரத்திலேயே எடப்பாடி கையை வைத்து விட்டாரே, அதிருப்தியாளர்களை தட்டி தூக்கி சென்று கொண்டிருக்கிறாரே என்ற கவலையில், டிடிவி தினகரனும் அதிர்ந்து போயுள்ளதாக தெரிகிறது..!

சூழும் சிக்கல்கள்
பாஜகவும் தற்போதைக்கு கூட்டணி பூசலில் உள்ளதால், இதை பற்றி பேச வாய்ப்பே இல்லை.. ஆக, இந்த சாதகமான சூழல்கள் எல்லாமே எடப்பாடி தரப்புக்கு புது தெம்பை தந்து வருகிறதாம்.. எனவேதான், சசிகலாவை அடுத்த சில தினங்களில் ஓபிஎஸ் சந்தித்து பேசவிருப்பதாக தகவல்கள் பரபரக்கின்றன.. இதனிடையே, பிரதமர் மோடி வரும் 27ம் தேதி சென்னை வர உள்ள நிலையில், அவரை சந்தித்து பேசவும் ஓபிஎஸ் தரப்பு நேரம் கேட்டிருப்பதாக தெரிகிறது.. அப்படி பிரதமரை சந்தித்து பேச அப்பாயிண்மென்ட் கிடைத்துவிட்டால், அந்த சந்திப்புக்கு பிறகே சசிகலாவை சந்திக்கலாம் என்றும் சொல்கிறார்கள்..!!












Click it and Unblock the Notifications