"கேம் சேஞ்ச்".. செம ட்விஸ்ட்.. அப்ப "இவர்"தான் தலைவரா.. நொறுங்கிய சீக்ரெட்.. அதிமுக கூடாரமே நிசப்தம்
எடப்பாடி பழனிசாமியின் கன்ட்ரோலில் அதிமுக செல்ல போவதாக கூறப்படுகிறது
சென்னை: இவரா? அவரா? யார் அதிமுகவின் தலைவர்? என்ற விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பி கொண்டிருக்க, ஒரு புது தகவல் வெளியாகி, களத்தை அதிர வைத்து வருகிறது..!
இத்தனை நாளும் உள்ளுக்குள்ளேயே புகைந்து கொண்டிருந்த பொதுச்செயலாளர் பதவி விவகாரம், இந்த 4 நாட்களாகவே வெடித்து கிளம்பி உள்ளது..
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தரப்பினர் வெளிப்படையாகவே அதிருப்திகளை கொட்ட ஆரம்பித்துவிட்டனர்.

எடப்பாடி பழனிசாமி
ஓபிஎஸ் ஒரு பக்கமும், எடப்பாடி மறுபக்கமும் கட்சியை தங்கள் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதில், எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மையான ஆதரவுகள், கட்சிக்குள் கிடைத்து வருவதாக தெரிகிறது.. இது தெரிந்து ஓபிஎஸ், பிடிவாதத்தையும், எதிர்ப்பையும் காட்டி வருகிறார்.. இதையடுத்து, இப்போது இரு தரப்புமே அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக அவர்கள் வீடுகளில் பேசி வருகின்றனர்.

எடப்பாடி டீல்
இப்படிப்பட்ட சூழலில், ஒரு முக்கிய சமாச்சாரம், தமிழக அரசியல் களத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. அதாவது, ஒற்றை தலைமை, இரட்டை தலைமை என்பதெல்லாம் ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் இணைந்து நடத்தும் நாடகம் என்கிறார்கள் அதிமுக அதிகாரமில்லாத சீனியர்கள்... பேரங்கள் படியாததால் தான் , இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என்று ஓபிஎஸ் இப்போது சீறியிருக்கிறாராம்..

எடப்பாடி சமாதானம்
நடுநிலையான சீனியர்கள் இதை பற்றி நம்மிடம் சொன்னதாவது: "2021 சட்டமன்ற தேர்தலின் போது, முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் எடப்பாடி. இதனை எதிர்த்து ஓபிஎஸ் போர்க்கொடி உயர்த்தினார். அவரை சமாதனப்படுத்த பேச்சுவார்த்தை என்கிற பேரில் பேரங்களை முன்னெடுத்தார் எடப்பாடி பழனிசாமி.. பேரங்களுக்கு ஓபிஎஸ் சம்மதிக்க, உயர்த்திய போர்க்கொடியை இறக்கிக் கொண்டார்...

கன்ட்ரோல் யாரிடம்?
அடுத்து, தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, எதிர்க்கட்சி தலைவர் பதவி தனக்குத்தான் என எடப்பாடி அடம் பிடிக்க, அதனையும் எதிர்த்தார் ஓபிஎஸ். மீண்டும் பேச்சுவார்த்தை என்ற பெயரில் பேரங்கள் பேசப்பட்டது. ஓபிஎஸ் வைத்த பேர கோரிக்கையை எடப்பாடி ஒப்புக்கொள்ள, எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகினார் ஓபிஎஸ்.. ஒரு வருடத்திற்கு பிறகு, கட்சியை ஒற்றை தலைமைக்குள் கொண்டு வரவேண்டும் ; அனைத்து அதிகாரத்துடன் கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும் என்று புதிய திட்டத்துடன் தற்போது களமிறங்கியிருக்கிறார் எடப்பாடி.

எடப்பாடி பழனிசாமி
ஆனால், இதனையும் ஓபிஎஸ் எதிர்க்க செய்வார் என்பது எடப்பாடிக்கு தெரியும். முந்தைய காலங்களில் அவரை எப்படி சமாளித்தோமோ அதே பாணியில் அவரை கையாளலாம் என்கிற வித்தை எடப்பாடிக்கு தெரியும் என்பதால், ஓபிஎஸ்சின் எதிர்ப்பை பற்றி கவலைப்படாமல், ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றை தலைமை கோரிக்கையை மா.செ.க்கள் மூலம் பிரச்சனையை கிளப்பினார் எடப்பாடி பழனிசாமி. அவர் எதிர்பார்த்தது போலவே, ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தனி ஆலோசனையெல்லாம் நடத்தி பரபரப்பு பேட்டி கொடுத்துள்ளார்.

லீக் ஆன சீக்ரெட்
கடந்த 2 நாளில் நடந்த ஆலோசனையில், வழக்கம்போல, ஓபிஎஸ்சிடம் எடப்பாடி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. ஓபிஎஸ்சும் வழக்கம் போல சில பேரங்களை ஆரம்பித்தார். இந்த முறை பேரத்தின் தன்மை பல்வேறு வழிகளில் அதிகமாக இருந்ததால் எடப்பாடி அதனை ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் இரண்டு நாட்களாக இழுபறியிலேயே இருந்தன சிலபல பேரங்கள். முடிக்கப்படாமல் இழுபறியில் இருந்ததால்தான், தனது பேரங்களுக்கு எடப்பாடியை ஒப்புக் கொள்ள வைக்க வேண்டித்தான் நேற்றைய தினம் அவசர பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி காரசாரமாக பேட்டி கொடுத்தார் ஓபிஎஸ்.

பச்சை துரோகம்
பொதுச்செயலாளர் பதவியில் யார் அமர்ந்தாலும் அது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்றெல்லாம் ஆவேசப்பட்டார்.. ஜெயலலிதா மறைந்ததும் பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுத்ததையும் பொதுக்குழு அதனை அங்கீகாரத்தையும், அதற்கான தீர்மானத்தை எடுத்துக் கொண்டு போய் சசிகலாவிடம் கொடுத்தது ஓபிஎஸ்தானே? அப்போது, இதே துரோகம் என்கிற வார்த்தையை பயன்படுத்தியிருக்கலாமே ஏன் செய்யவில்லை?

திடீர் பல்டி
ஆக, கடந்த காலங்களைப் போல அவரது பேரங்களுக்கு எடப்பாடி இந்த விசயத்தில் ஒப்புக்கொள்ளாததால்தான் எகிறுகிறார் ஓபிஎஸ்... அதனால், பேரம் படிந்து விட்டால், கட்சியின் நலன் கருதி விட்டுக்கொடுக்கிறேன் என்று சொல்லி பல்டி அடித்து விடுவார்... அதனால் தற்போது அதிமுகவில் நடப்பதெல்லாமே பேரங்களுக்கான நாடகமே தவிர வேறு ஒன்றுமில்லை என்கிறார்கள் நடுநிலையாளர்களான சீனியர்கள்.












Click it and Unblock the Notifications