"ஆட்டுக்குட்டி".. திமுக தோழமை "காப்பாளன்" யார் தெரியுமா.. பாஜக "குண்டா" அரசியலை வெளுத்த வேல்முருகன்
சங்பரிவார அராஜகம் கும்பலை திமுக அரசு கைது செய்ய வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்திஉள்ளார்
சென்னை: அடாவடி, அட்டூழியங்களில் ஈடுபடும் சங்பரிவார கும்பல்களை, சட்டத்தின் துணை கொண்டு அடக்கி ஒடுக்கி வைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
11-ம்தேதி அதாவது நாளையதினம் மனித சங்கிலி பேரணி நடைபெறும் என்று விசிக அறிவித்துள்ளது.. இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), மதிமுக, யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவும் தெரிவித்துள்ளன.
இதற்கான எதிர்பார்ப்புகள் ஒருபக்கம் கூடிவந்தாலும், சமீபத்தில் நடந்த கூட்டத்தில் வேல்முருகன் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இது பாஜகவுக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த பேச்சின் சுருக்கம் இதுதான்:

ஆட்டுக்குட்டிகள்
"முதல்வரின் கட் அவுட்டை கொளுத்தறாங்க.. முதல்வரின் கொடும்பாவியை கொளுத்தறாங்க.. முதல்வரின் சுவரொட்டிகளை கிழிக்கறாங்க.. எல்லா அக்கிரமங்களையும் ஆட்டுக்குட்டிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.. தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி தலைவராக அண்ணாமலை என்ற இந்த தலைவர் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களை, ஜனநாயக சக்திகளை மிகவும் மோசமாக, அநாகரீகமாக, ஒருமையில், அவதூறாக கருத்துக்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.. ஆனால், தமிழக காவல்துறையும், தமிழக அரசும், ஏன் வேடிக்கை பார்க்கிறது?

ரொட்டி + ரெட்டி
எச்.ராஜா மீது உங்கள் சட்டம் பாய மறுக்கிறதே ஏன்? எஸ்வி சேகர் மீது உங்கள் சட்டம் பாய மறுக்கிறதே? கல்யாண ராமன்கள் மீது உங்கள் சட்டம் பாய மறுக்கிறதே? ரொட்டி, ரெட்டி என்று ஒவ்வொரு நாளும் யூடியூப் சேனல்களில் மிக மோசமான வார்த்தைகளால், முதல்வரை வாடா, போடா என்றெல்லாம் கூப்பிட்டு பேசுகிறான். இவங்களை எல்லாம் 2 தட்டு தட்டி உள்ளே போட்டிருக்க வேண்டும் இந்த காவல்துறை.. ஆனால், திமுக என்கிற இந்த சமூக நீதி இயக்கம், இந்த நாட்டில் ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு காரணமாக இருந்த என் இஸ்லாமிய உறவுகளை கைது செய்ய உங்கள் காவல்துறை பயன்படுகிறது.. இது தமிழ் இனத்துக்கும் தமிழக அரசுக்கும் அவமானம் இல்லையா?

குண்டா பிரியாணி
அந்த கும்பலின் ஒரு தலைவனை இந்த நாட்டில் யாராவது கைது செய்திருக்கிறார்களா? தமிழ்நாட்டில் அப்படிப்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்களா? ஆனால், தமிழக காவல்துறையே, ஜனநாயக சக்திகள் மீது நட்போடு இருக்கும் எங்களை போன்றவர்களை பகைத்து கொண்டால், நாளை இந்த பாசிச வெறிபிடித்த கும்பலுக்கு இங்குள்ள மக்கள் பாடம் புகட்ட தயாராக இருக்கிறார்கள்.. ஆனால், எங்கள் பேராசிரியர் அந்த வழியை தேர்வு செய்யவில்லை.. திமுகவின் கூட்டணி தலைவர்களும் அந்த வழியை கடைப்பிடிக்கவில்லை.. 11ம் தேதி விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் நடத்த போகும் என்பது மனிதநேயத்தை காக்கும் மனித சங்கிலி அது. அறவெறி போராட்டத்தில் எங்கள் உணர்வுகளை வெளிக்காட்ட போகிறோம்.

இரத்த வியர்வை
55 இடங்களுக்கு மேலாக, ஆர்எஸ்எஸ் சங்பரிவார் கும்பல்களின் அணிவகுப்பு எதுக்காக? கையில் திரிசூலம், வேல், ஈட்டிகளுடன் எதுக்காக அணிவகுப்பு? என்ன தேவை இந்த தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டது? இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளிலும், கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளிலும், பல்லாயிரக்கணக்கான வணிக நிறுவனங்களை இஸ்லாமியர்கள் நடத்துகின்ற பகுதிகளிலும், திட்டமிட்டு ஊர்வலம் என்ற பெயரிலே சூறையாடுவதற்கும், எனது இஸ்லாமிய சகோதரர்கள் ரத்த வியர்வை சிந்த சிந்த உழைத்து பிரியாணி குண்டாவை அவன் உருவாக்கினால், அதை தூக்கி போவதற்கும் பேரணி நடத்துகிற கும்பல்களே, என்னத்த சாதிக்க போறீங்க அதில்?

கொக்கரிப்பு
மதத்தின் பெயரால் மக்களை கூறுபோட்டு, இனதுவேஷத்தை உருவாக்கி, மனித நேயத்தை கொன்றுகுலைத்து, இந்து என்ற போர்வையில், இந்து ராஷ்டிரியம் அழிப்போம் என்ற போர்வையில், இந்தியா முழுக்க ஒரே சட்டம் என்கிறாய், இந்தியா முழுக்க ஒரே ஆட்சிமுறை என்கிறாய்.. இந்தியா முழுக்க ஒரே தேர்தல் கொண்டு வரப்போகிறோம் என்று கொக்கரிக்கிறாய், இந்தியாவின் முப்படைகள் கலைக்கப்பட்டு, முப்படைக்கும் ஒருவனே என்று அறிவிக்கிறாய், தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் உன் கட்டுப்பாட்டில் உள்ளன..

ஜவாஹிருல்லா
நாளை திமுகவுக்கும், பெரியாரிய கருப்பு சட்டை தோழர்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் உயிரையே தந்து காக்ககூடியதாக உள்ள சக்தி இஸ்லாமிய சக்திகளும், கிறிஸ்தவ உறவுகளும்தான் என்பதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.. சட்டமன்றத்திலேயே உங்களுக்கே ஒன்று என்றால்கூட, ஓங்கி ஒலிக்கும் குரல் பேராசியர் ஜவாஹிருல்லா குரலும், பாலாஜியின் குரலும், வேல்முருகனின் குரலும், கம்யூனிஸ்ட்கள் குரலும்தான் உங்கள் காப்பாளனாக இருக்கின்றன.. உணர்ச்சிவசப்பட்டு உங்கள் அமைச்சர்கள் எடுத்து வைத்தும் வாதங்கள், கருத்துக்களுக்குகூட சரியான பதிலடியை தந்து, உங்களை காப்பாளனாக இருக்கக்கூடியதும் தோழமை சக்திகள்தான்

ஸ்ட்ரிக்ட் ஆக்ஷன்
இந்த சங்பரிவார கும்பல்களின் அடாவடி, அட்டூழியங்களை உங்களின் சட்டத்தின் துணை கொண்டு இவர்களை அடக்கி ஒடுக்கி வைக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக முதல்வரின் கைகளில் உள்ளது. உங்கள் கைகளில் உள்ள காவல்துறைக்கும் உள்ளது. எனவே அதற்கான நீங்கள் பிறப்பிக்க வேண்டும்.. தமிழ்நாட்டின் சங்பரிவார கும்பலின் அநியாயங்களும், அட்டூழியங்களும், பாஜகவின் அநாகரீகமற்ற பேச்சுக்களும் தொடரும் என்று சொன்னால், அமைதி வழியில் கூடிநிற்கும் கூட்டம், நாளை மாற்றுக்கருத்தோடு சிந்தித்தால், இந்த தமிழகம் தாங்காது" என்றார் வேல்முருகன்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம்












Click it and Unblock the Notifications