மகளிர் உரிமை தொகை ரூ.1000.. புது பயனாளிகள் இணைப்பு எப்போது? திட்ட விரிவாக்கம் எப்போது? முக்கிய தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் மகளிர் உரிமை தொகை திட்டம் மீண்டும் விரிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த 2019ல் 27 மாவட்டங்களில் தேர்தல் நடந்தது. தேர்வான நபர்களின் பதவி காலம் வரும் டிசம்பருடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில்தான் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தல்: 2024 சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆளும் திமுக இப்போதே செய்ய தொடங்கிவிட்டது. மற்ற கட்சிகளுக்கு முன்பாக வேகமாக தேர்தல் பணிகளுக்கான காய்களை திமுக நகர்த்தி வருகிறது அதே சமயம் இன்னொரு பக்கம் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலை நடத்துவது அல்லது தள்ளிப்போடுவது தொடர்பாக திமுக அரசு இறுதி முடிவு எடுக்காமல் இருக்கிறது. திமுக சீனியர்கள் யாருக்கும் இந்த தேர்தலை நடத்துவதில் விருப்பமில்லை. தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.
சீனியர்கள்: இது குறித்து ஸ்டாலினிடம் பலமுறை வலியுறுத்தியும் வந்துள்ளனர் சீனியர்கள். அதே சமயம், மாவட்ட, ஒன்றிய அளவிலான திமுகவினரோ, டிசம்பரில் தேர்தலை நடத்தியாக வேண்டும் என தலைமைக்கு தங்களின் விருப்பத்தை தெரிவித்தபடி இருக்கின்றனர்.
இந்த நிலையில், ஊரக உள்ளாட்சிக்கான தேர்தலை நடத்துவதற்கு தயாராகும் வகையில், ஜனவரி 1, ஏப்ரல் 1 , ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய மாதத் தேதிகளை அடிப்படையாகக் கொண்டு 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
சட்டசபை தேர்தல்: இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 20 மாதங்கள் உள்ளன. 20 மாதங்கள் தேர்தலுக்கு இருந்தாலும் திமுக வேகமாக மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.
மகளிர் உரிமை தொகை: உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் விரைவில் மகளிர் உரிமை தொகை திட்டம் மீண்டும் விரிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் விரிவாக்கத்திற்கு பின்பும் நீங்கள் அதில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அதற்கு முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் ஆகியோர்களுக்கு எல்லாம் இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஏற்கனவே பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை.
வேறு சில ஆவணங்கள் சரியாக இல்லாத பெண்களுக்கும் பணம் வழங்கப்படவில்லை. பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு இந்த திட்டத்தில் இப்போது என்று இல்லாமல் எதிர்காலத்திலும் வாய்ப்பு வழங்கப்படாது.
மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். இப்போது செய்ய முடியாது என்றாலும் அடுத்த 4 மாதங்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்போது புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் விரிவாக்கம்: இந்த திட்டத்தில் மேலும் விரிவாக்கம் செய்ய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பிடம் விசாரித்த போது, இனி அடுத்த வருடம் மீண்டும் இந்த திட்டம் விரிவாக்கப்படும். அப்போது புதிதாக திருமணம் ஆனவர்கள், அரசு பணியில் இருந்து காலமான ஆண்களின் மனைவிகள் வரும் வருடங்களில் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக இந்த திட்டம் மேலும் விரிவாக்கப்படலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications