மின் கட்டணம் மாதந்தோறும்.. மின்சார வாரியத்தின் மெகா பிளான்.. அமைச்சர் அறிவிப்பின் பின்னணி
பெரம்பலூர்: தமிழ்நாட்டில் தற்போது வீடுகளுக்கான மின் கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் கணக்கெடுக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வரும் முன்பு, திமுக, மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் அதனை நான்கரை ஆண்டுகளாக கொண்டுவரப்படவில்லை.. இந்நிலையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கிடப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டால் ஏராளமான மக்கள் பயன்பெறுவார்கள். ஆனால் இன்று வரை நடைமுறைக்கு வரவில்லை. இதுபற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஏனெனில் திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகியும் இன்று வரை மின் கட்டணம் வசூலிப்பில் மாற்றம் வரவில்லை..

மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை கொண்டு வர வேண்டும் என்றால்,அதற்கு முன்பாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியை நடத்த வேண்டியுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் கூறிவருகிறார்கள். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின், மின் பயன்பாட்டை தொலைவிலிருந்து துல்லியமாக கணக்கெடுக்க முடியும் என்பதால் மாதம் ஒரு மின் கட்டண நடைமுறையை கொண்டுவருவதில் தாமதம் ஏற்படுகிறதாம்.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்த டெண்டர் விடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சில பகுதிகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன், 2025 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு வீடுகளுக்கு மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடும் நடைமுறையை சோதனை அடிப்படையில் தொடங்க அரசு திட்டமிட்டு வருகிறதாம்.
பெரம்பலூரில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், பொதுமக்கள் மின்சாரத்தை தங்களுடைய வீடுகளிலும், பொது இடங்களிலும் சிக்கனமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை கடும் நிதி நெருக்கடிக்கு இடையில் தான் செயல்பட்டு வருவதாக கவலையை வெளிப்படுத்திய அமைச்சர் சிவசங்கர், நிதி நிலைக்கு ஏற்ப மின்வாரியத்தில் சில புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். புதிய மின்மாற்றிகளை கொள்முதல் செய்வதற்கு தமிழக மின்வாரியத்திற்கான நிதியை பெறுவதற்கு மத்திய அரசினுடைய நிதி நிறுவனங்கள் நிதியை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
மத்திய அரசின் நிதியை பெறுவதில் தாமதம் இருந்தது என்றும் தற்போது அதற்கான நடைமுறைகள் எடுக்கப்பட்டு, பல்வேறு நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறப்பட்டு, புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான டெண்டர்கள் விடப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
மின் கட்டணம் குறித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், அதேபோல் புதிய மின்மாற்றிகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் படிப்படியாக இந்த பிரச்சினைகள் சரிசெய்யப்படும் என்றும் ஸ்மார்ட் மீட்டர் நடைமுறைக்கு வருகிறபோது, தமிழகத்தில் மாதம் ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடுவதற்கு அது வசதியாக இருக்கும். ஸ்மார்ட் மீட்டருக்கான டெண்டர் விடப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும் என்றும் கூறினார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications