தமிழ்நாட்டுக்கே ஹேப்பி.. வருது குட்நியூஸ்.. சாதாரண வந்தே பாரத் ரயிலை "முந்தும்" வந்தே மெட்ரோ? பெஸ்ட்
சென்னை: சாதாரண் வந்தே பாரத் ரயில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி வரும்நிலையில், "வந்தே மெட்ரோ" ரயில்கள் பயணிகளுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை தந்து வருகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல் வெளியாகி உள்ளது.
வந்தே பாரத் ரயில் பொதுமக்களின் அபார ஆதரவை பெற்று வருவதையடுத்து, ரயில்வேயின் அடுத்தடுத்த விரிவாக்கம் நடந்து வருகிறது.. அந்தவகையில், சாதாரண பெட்டிகளை கொண்ட "வந்தே சதரன்" ரயில்கள் தயாராகி கொண்டிருக்கின்றன.

வந்தே பாரத்: கடந்த ஆகஸ்ட்டில் இதற்கான பணிகள் துவங்கியது.. மேற்கு வங்கத்தில் உள்ள சித்தரஞ்சன் தொழிற்சாலையில், இதற்கான இன்ஜின்களும் தயாரிக்கப்பட்டன. நாடு முழுவதும் இந்த ரயிலை இயக்கப்போவதாக கூறப்படும்நிலையில், வந்தே சதரன் ரெயில்கள் ஓடும் வகையில் தயாரிப்பு பணிகளை முடுக்கிவிடப்பட்டுள்ளன. எனவே இது தொடர்பாக அறிவிப்பு விரைவில் வரப்போகிறது.
அதேபோல, ஸ்லீப்பர் கோச்சுகளுடன் கூடிய வந்தே பாரத் அடுத்த மாதம், அதாவது மார்ச் 2024 முழுமையாகத் தயாராகும் என்று தகவல் வெளியாகி வருகிறது.. ஏப்ரல் மாதம் இந்த ரயிலின் சோதனை ஓட்டம் ஆரம்பிக்கும் என்றும் மகிழ்ச்சி தகவல் வெளியாகி உள்ளது..
ஏசி பெட்டி: வழக்கமாக, ரயில்களில் 8 அல்லது 16 பெட்டிகள் ஏசி வசதியுடன் கூடியதாக இருக்கும்.. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் மொத்தம் 16- 20 பெட்டிகள் இருக்கும்.. ஏசி + ஏசி அல்லாத பெட்டிகளும் இருக்குமாம்.. இது தொடர்பாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரும் என்கிறார்கள்.
தமிழகத்தில் தற்சமயம், சென்னை - கோவை, சென்னை - நெல்லை, சென்னையில் இருந்து கோவை வழியாக மைசூரு வரை, கோவை - பெங்களூர் ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் மதுரை பெங்களூர் இடையேயும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்தும் விரைவில் அறிவிப்பு வரப்போகிறது.
படுக்கை வசதி: அதேபோல, விரைவில் தொலை தூரங்களுக்கு பயணிக்கும் விதமாக வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதி கொண்ட ரயிலும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அம்ரித் பாரத் ரயில்களையும் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதால், இது தொடர்பாகவும் விரைவில் அறிவிப்பு வரப்போகிறது.
இந்நிலையில், இன்னொரு ஸ்வீட் தகவலும் வெளியாகி உள்ளது. வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணிகள், இந்த மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன..
வந்தே மெட்ரோ : சென்னை பெரம்பூர் ஐசிஎப் ஆலையில், மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில், முதல் "வந்தே மெட்ரோ" ரயில் தயாரிப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வரும்நிலையில், அவைகள் இப்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டனவாம்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, குறுகிய துாரத்திற்கு இயக்கும் வகையில், "வந்தே மெட்ரோ" ரயில் தயாரித்து வருகிறோம். 60 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்த மாதம் இறுதியில் பணிகள் முடித்து, ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்க போகிறோம்.. குறுகிய துாரத்தில் இயக்கப்படும், "மெமு" வகை ரயில்களை நீக்கி விட்டு, படிப்படியாக வந்தே மெட்ரோ ரயில்களை இயக்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது.
சூப்பர் வசதி: AC வசதி, பயணியரை கவரும் வகையில் உள் அலங்காரம், சொகுசு இருக்கைகள் போன்ற அடிப்படை வசதிகள் இதில் இருக்கும். சிசிடிவி கேமரா, அதிநவீன கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும். தேவைக்கு ஏற்றார் போல, எட்டு முதல் 12 பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும், 100 பேர் உட்கார்ந்து செல்லலாம். 200 பேர் வரை நிற்க முடியும்" என்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications