தமிழ்நாட்டுக்கே மகிழ்ச்சி.. வருது ஸ்பெஷலான அறிவிப்பு.. கோவை டூ சென்னை.. அதென்ன யாத்ரி சேவா அனுபந்த்
சென்னை: சாதாரண் வந்தே பாரத் ரயில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி வரும்நிலையில், "யாத்ரி சேவா அனுபந்த்" என்ற திட்டம் அறிமுகமாகி உள்ளது.. இந்த திட்டமானது, பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
வந்தே பாரத் ரயில் பொதுமக்களின் அபார ஆதரவை பெற்று வருவதையடுத்து, ரயில்வேயின் அடுத்தடுத்த விரிவாக்கம் நடந்து வருகிறது.. அந்தவகையில், சாதாரண பெட்டிகளை கொண்ட "வந்தே சதரன்" ரயில்கள் தயாராகி கொண்டிருக்கின்றன.

வந்தே பாரத்: கடந்த ஆகஸ்ட்டில் இதற்கான பணிகள் துவங்கியது.. மேற்கு வங்கத்தில் உள்ள சித்தரஞ்சன் தொழிற்சாலையில், இதற்கான இன்ஜின்களும் தயாரிக்கப்பட்டன. நாடு முழுவதும் இந்த ரயிலை இயக்கப்போவதாக கூறப்படும்நிலையில், வந்தே சதரன் ரெயில்கள் ஓடும் வகையில் தயாரிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
மேலும், முதல் ரயில் தற்போது தயாராகி உள்ள நிலையில், அதற்கு முன்பாக, உத்தரபிரதேசம் மாநிலம், லக்னோவில் உள்ள ஆர்டிஎஸ்ஓ எனப்படும், ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிறுவனத்தின் ஒப்புதல் கிடைத்துவிடும் நிலையில், இந்த ரயிலை அறிமுகப்படுத்த, ரயில்வே திட்டமிட்டுள்ளது.. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
அனுபவங்கள்: இந்நிலையில், இன்னொரு ஸ்பெஷல் அறிவிப்பு வந்துள்ளது.. அதாவது, வந்தே பாரத் ரயில்களின் உயர் வகுப்பு பெட்டிகளில் பயணிக்கும், பயணியரின் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்காகவே, பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், "யாத்ரி சேவா அனுபந்த்" என்ற திட்டம் தற்போது புதிதாக அறிமுகமாகிறது.
இதன்படி, ரயில் பெட்டிகள் தூய்மைக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட உள்ளது.. முக்கியமாக, உணவு மற்றும் குளிர்பான சேவைக்கு, தனி கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட உள்ளார்களாம்.. ரயில் பயணியர் ரயில் நிலையம் வருவதற்கும், அங்கிருந்து செல்வதற்கும் டாக்சி சேவை வழங்குதல், க்யூ.ஆர் கோடு மூலம், உணவின் தரத்துக்கு மதிப்பீடு வழங்குதல் போன்ற சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகிழ்ச்சி தகவல்: இந்த புதிய திட்டம் குறித்து, ரயில்வே முன்பதிவு மைய அதிகாரிகள் சொல்லும்போது, "கூடுதல் கட்டணம் செலுத்தி, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணியர் கூடுதல் சேவைகளை எதிர்பார்க்கிறார்கள்..
அதனால்தான், கோவை - சென்னை உள்ளிட்ட வந்தே பாரத் ரயில்களில், பயணிகளின் வசதிக்காகவே, இனிவரும் நாட்களில் கூடுதல் சேவைகள் கொண்டு வருவதற்காக புதிய திட்டங்கள் அறிமுகமாக உள்ளன" என்ற மகிழ்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications