சொந்த கட்சிக்காரங்களை சந்திக்க கூட முடியல? லேட்டாகுதே.. கரூர் போக கோர்ட்டில் அனுமதி கேட்கிறாரா விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் பிரச்சார கூட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்கப்படுவதாக தவெக தலைவர் விஜய் ஏற்கனவே அறிவித்துள்ளார்.. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்க கரூர் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், போலீஸார் அனுமதி தரவில்லை.. இதையடுத்து, கோர்ட்டுக்கு சென்று அனுமதி வாங்க தவெக முடிவு செய்திருப்பதாக சில உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் வட்டமடிக்கின்றன.

கரூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர்.. தற்போது சுகுணா என்ற ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் கரூர் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது..

Vijay Karur Velusamipuram

தெளிவுபடுத்துவாரா விஜய்

நடந்த சம்பவத்திற்கான காரணத்தை விஜய் தெளிவுப்படுத்துவார் என்று திருச்சி விமான நிலையத்திலும், சென்னை வீட்டிலும் காத்திருந்த தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், எதுவுமே சொல்லாமல் சென்று விட்டார் விஜய்,.

பிறகு உயிரிழந்த தொண்டர்கள் குடும்பத்தினரையும், பொதுமக்களையும், காயம் அடைந்தோரையும் சந்தித்து, விஜய் ஆறுதல் சொல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது... இதுவேரை அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துவிட்ட நிலையில், விஜய் மட்டும் கரூருக்கு வராமலேயே உள்ளார்.

விஜய்க்கு அனுமதி மறுப்பு

நேற்று முன்தினமே காவல்துறை தரப்பினர் இதற்கு விஜய் தரப்பில் அனுமதி கேட்டும் மறுக்கப்பட்டதாக தெரிகிறது.. ஏனென்றால், கரூர் துயரத்திலிருந்து அங்குள்ளவர்கள் தவெக மீது கொதிப்பிலும், கோபத்திலும் உள்ளனர்.. விஜய்யின் வருகையானது அவர்களை மேலும் கொதிப்படைய செய்யலாம், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுவிடலாம் என கருதி போலீஸ் அனுமதி மறுத்திருப்பதாக தெரிகிறது.

மேலும், தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்கு பதியப்பட்டு, அதில் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.. இன்னொருபுறம், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷனும், கரூரில் விசாரணையை நடத்தி வருகிறது. இதனையெல்லாம் கருத்தில் கொண்டு, கரூருக்கு விஜய் செல்ல அனுமதி போலீஸ் மறுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அனுமதி கேட்டு கோர்ட்டில் மனு?

எனவேதான், கரூர் செல்வதற்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தை நாட, விஜய் தரப்பில் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.. கரூருக்கு விஜய் இதுவரை செல்லாததால், விஜய் மீது பல்வேறு கட்சியினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

சம்பவம் நடந்து இத்தனை நாள் ஆகியும் ஏன் கரூர் போகவில்லை? என்று சோஷியல் மீடியாவிலும் சிலர் இதனை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பி வருகிறார்கள்..

இவை யாரும் தவெகவினருக்கு மிகுந்த கவலையை தந்து வருகிறதாம்.. சொந்தக் கட்சி தொண்டர்களையும், குடும்பத்தினரையும் பார்ப்பதற்கு எதுக்காக போலீஸ் அனுமதி? கரூர் செல்ல கோர்ட் வரை சென்று அனுமதி கேட்கணுமா? என்றெல்லாம் நொந்து சொல்கிறார்களாம்.

எனினும், விஜய்யின் காலதாமதம் பலவித குழப்பங்களை உண்டுபண்ணி வருவதால், நேரடியாகவே கோர்ட்டுக்கு சென்று கரூர் செல்ல தவெக தரப்பில் அனுமதி கேட்க முடிவாகியிருக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+