சென்னை ஈசிஆர்-ஓஎம்ஆர் இடையே 3 பாலங்கள் வருகிறது.. எங்கு எல்லாம்.. ஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி
சென்னை: சென்னை பழைய மகாபலிபுரம் சாலையான ஓஎம்ஆர் சாலையில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.. அதற்கு அடுத்துள்ள கிழக்கு கடற்கரை சாலை என்பது வானுயர்ந்த கட்டிங்கள், மிகப்பெரிய விஐபி வீடுகள், புதுச்சேரி, மகாபலிபுரம் பிரதான சாலையாக உள்ளன. ஆனால் ஈசிஆர்-ஓஎம்ஆர் இடையே பக்கிங்ஹாம் கால்வாய் செல்கிறது. இதன் காரணமாக பாலம் வழியாக மட்டுமே இணையக்கூடிய நிலை இருக்கிறது. இந்நிலையில் இங்கு ஏற்கெனவே உள்ள 3 பழைய பாலங்களை இடித்துவிட்டு ரூ.16 கோடியில் புதிய பாலங்கள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னையிலிருந்து புதுச்சேரி மற்றும் மகாபலிபுரம் செல்ல கிழக்கு கடற்கரை சாலை (ECR), பழைய மகாபலிபுரம் சாலை (OMR) ஆகியவை முக்கிய சாலைகள் ஆகும். இதில் கிழக்கு கடற்கரை சாலை என்பது விஐபிக்கள் மற்றும் விடுதிகள் அதிகம் நிறைந்த சுற்றுலா தலங்கள் நிறைந்த இடமாக உள்ளது.

அதேநேரம் ஓஎம்ஆர் சாலையான பழைய மகாபலிபுரம் சாலையை பொறுத்தவரை, ஏராளமான அடுக்கு மாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்கள் காணப்படுகின்றன. ஆனால் இரு சாலைகளுக்கும் நடுவில் தான் பக்கிங்ஹாம் கால்வாய் செல்கிறது. இவ்விரு சாலைகளும் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாகும்.
ஆனால் இச்சாலைகளின் குறுக்கே போதிய பாலங்கள் இன்று வரை கிடையாது. ஒன்று திருவான்மியூரில் நுழைய வேண்டும்.. இல்லை என்றால் 7 கிமீ தூரம் தள்ளி சென்று சோழிங்கநல்லூரில் பாலத்தை கடக்க வேண்டும். அது இல்லாவிட்டால் திருப்போரூர் அருகே செல்ல வேண்டும். வேறு வழியே இல்லை.. இதனால் ஒரு சாலையில் இருந்து மற்றொரு சாலைக்கு பல கிமீ சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இன்று வரை தொடர்கிறது.
மக்கள் நடந்து செல்லவும், இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லக்கூடிய வகையில் ஆங்காங்கே சில பழைய பாலங்கள் உள்ளன. ஆனால் ஏற்கெனவே உள்ள பாலங்கள் பழுதடைந்த நிலையில் தான் இருக்கின்றன. பழுதடைந்த 3 பாலங்களை இடித்துவிட்டு புதிய பாலங்களை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்பணிகளுக்கான டெண்டரும் கோரியிருக்கிறது
இதன்படி, பெருங்குடி மண்டலம், 181-வது வார்டு, பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே ஈசிஆர்- ஓஎம்ஆர் சாலைகளை இணைக்கும் வெங்கடேசபுரம்- இளங்கோ நகர் பகுதியில் ஏற்கெனவே உள்ள பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்கும் பணி ரூ.5.65 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதேபோல் பெருங்குடி மண்டலம், 182 மற்றும் 183-வது வார்டுகளில், பாலவாக்கம் பகுதியில் பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே ஈசிஆர்- ஓஎம்ஆர் சாலைகளை இணைக்கும் காமராஜர் சாலை- வீரமணி சாலையில் ஏற்கனவே உள்ள பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்கும் பணி ரூ.5.62 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்திருக்கிறது.
அதுமட்டுமின்றி சோழிங்கநல்லூர் மண்டலம், 192, மற்றும் 193-வது வார்டுகளில், பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே ஈசிஆர்- ஓஎம்ஆர் சாலையை இணைக்கும் துரைப்பாக்கம் பாண்டியன் தெரு- அண்ணாநகர் பகுதியில் ஏற்கனவே உள்ள பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்கும் பணி ரூ.5.60 கோடியில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 3 பாலங்களும் மொத்தம் ரூ.16.87 கோடியில் புதிதாக அமைக்கப்பட உள்ளன. இதுதவிர கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் வகையில் பள்ளிக்கரணை சந்திப்பான பெருங்குடியில் பெரிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாதை ரெடியானால் ஐடி ஊழியர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். இந்த பணிகளும் தற்போது நடந்து வருகின்றன .
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications