தமிழகத்திற்கு வர வேண்டிய ரேபிட் டெஸ்ட் கிட்களை தட்டிப் பறித்த அமெரிக்கா
சென்னை: தமிழகத்திற்கு வர வேண்டிய ரேபிட் டெஸ்ட் கிட் அமெரிக்காவுக்கு திருப்பிவிடப்பட்டதாக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் விளக்கமளித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அனைத்து முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ஆலோசனை நடத்தினார். அப்போது ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பெரும்பாலான முதல்வர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மருத்துவர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அப்போது ஊரடங்கு உத்தரவை இன்னும் இரு வாரங்களுக்கு அதிகரிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

தலைமை செயலாளர் சண்முகம்
இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் விளக்கினார். அவர் கூறுகையில் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை அனைத்து மாநிலங்களும் கொள்முதல் செய்ய வேண்டும் மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு முன்பாகவே தமிழக அரசு 1 லட்சம் கிட்கள் வாங்க சீனாவிடம் தனிப்பட்ட முறையில் ஆர்டர் போட்டது.

சுகாதாரப் பணியாளர்கள்
ரேபிட் டெஸ்ட் கிட்கள் இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. இந்தியாவுக்கு வந்துவிட்டால் நமக்கு அது கிடைத்துவிடும். முதல்வர்களுடனான ஆலோசனையின் போது ரேபிட் டெஸ்ட் கிட்கள் இந்தியாவுக்கு பெறும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். கூடுதலாக 50 ஆயிரம் கருவிகளை நாங்கள் ஆர்டர் செய்துள்ளோம். கடந்த 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பு "கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாரதார பணியாளர்கள் (களப் பணியாளர்கள்) நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை நாம் விரைந்து சோதனை செய்ய வேண்டும்.

டெஸ்ட் கிட்
அது போல் கன்டெய்ன்மென்ட் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட வேண்டும். எனவே நமக்கு ஏராளமான கருவிகள் வேண்டும்" என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்திருந்தார். அதனால் மேலும் 2 லட்சம் கருவிகளை ஆர்டர் செய்தோம். எனவே மொத்தமாக 4 லட்சம் கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. சீனாவில் குறைந்த அளவிலான நிறுவனங்கள் மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்களை தயாரிக்கின்றன.

சீனா உறுதி
தமிழகத்திற்கு வர வேண்டிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை அமெரிக்காவுக்கு சீனா அனுப்பிவிட்டது. நாம் முன்னரே ஆர்டர்களை செய்துவிட்டதால் முதற்கட்டமாக 50 ஆயிரம் கருவிகளையும் அடுத்த கட்டமாக 50 ஆயிரம் கருவிகளையும் அனுப்புவதாக சீனா உறுதியளித்திருந்தது என தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
-
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications