ஏப்ரல் மாத உரிமைத் தொகை ₹1000 எங்கே போச்சு? மெசேஜ் வராதவர்களுக்கு ஹேப்பி! போன்ல இந்த பட்டனை தட்டுங்க
சென்னை: தமிழகத்தில் குடும்பத் தலைவிகளின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், இப்போது 1.31 கோடிக்கும் அதிகமான பெண்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. தமிழக தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில், இந்த திட்டத்தில் அரசு எடுத்துள்ள சில அதிரடி மாற்றங்கள் மற்றும் எதிர்கால வாக்குறுதிகள் இல்லத்தரசிகள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் மாதம் பணம் வந்துவிட்டதா அல்லது வருமா என்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்கு ஒரு தெளிவான பதில் கிடைத்துள்ளது..
கடந்த பிப்ரவரி மாதமே தமிழக அரசு ஒரு மிகப் பெரிய அறிவிப்பை வெளியிட்டு, பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ₹5000 வரவு வைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் திக்குமுக்காட வைத்துவிட்டது.

மகளிர் உரிமைத் தொகை
இந்த ₹5000 என்பது பிப்ரவரி மாதத்திற்கான ₹1000 மற்றும் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான தலா ₹1000 முன்பணம் அத்துடன் கோடைக்கால சிறப்பு உதவித் தொகையாக ₹2000 என மொத்தம் சேர்த்து வழங்கப்பட்ட தொகையாகும்.. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் பட்சத்தில், பயனாளிகளுக்குத் தடையின்றிப் பணம் சேர வேண்டும் என்பதற்காகவே அரசு இந்த முன்கூட்டியே நடவடிக்கையை எடுத்துள்ளது..
அதனால் ஏற்கனவே பிப்ரவரி மாதத்தில் ₹5000 பெற்றவர்களுக்கு மார்ச் மாதம் தனியாக ₹1000 வராது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.. ஆனால், உங்கள் வங்கி கணக்கில் அந்தத் தொகை சரியாக விழுந்துள்ளதா என்பதை உறுதி செய்வது அவசியமாகும்..
செல்போனில் 2 நிமிஷம் போதும்
இதற்காக வங்கிக்கு அலைய தேவையில்லை.. உங்கள் செல்போனிலேயே இந்த தொகையின் நிலையை ஜஸ்ட் 2 நிமிஷத்தில் தெரிந்துகொள்ளலாம்.. இதற்காக தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான KMUT என்ற வெப்சைட்டிற்கு சென்று, உங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டு நம்பர் அல்லது விண்ணப்ப எண்ணைப் பதிவிட வேண்டும். இதனால் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி மூலம் உள்நுழைந்து சரிபார்க்கலாம்..
ஒருவேளை உங்கள் விண்ணப்பம் நிலுவையில் இருந்தாலோ அல்லது நிராகரிக்கப்பட்டிருந்தாலோ, அதற்கான காரணத்தையும் அதே வெப்சைட்டில் தெரிந்துகொண்டு மேல்முறையீடு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.. ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும், கேஒய்சி அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்ப்பது மிகவும் முக்கியம்..
திமுக அதிமுக வாக்குறுதிகள்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதால், இந்த உரிமைத் தொகை தொடர்பாகப் புதிய வாக்குறுதிகளும் ஏராளமாக பறக்கத் தொடங்கியுள்ளன.. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தத் தொகை ₹2000 ஆக உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ₹2000 முதல் ₹3000 வரை வழங்கப்படும் எனப் போட்டிப் போட்டு அறிவித்து வருகிறார்.
இது ஒருபுறமிருக்க, இன்னும் விடுபட்ட தகுதியுள்ள பெண்களுக்கு இந்த உரிமைத் தொகை பணத்தை பெற்று தரவும் அரசு ஸ்பெஷல் முகாம்களை நடத்தி வருகிறது.. அதனால் உங்களது செல்போனுக்கு வரும் பேங்க் மெசேஜ்களை மட்டும் நம்பியிருக்காமல், ஆன்லைன் போர்ட்டல் மூலம் உங்கள் பணத்தின் துல்லியமான நிலையை செக் செய்வது உங்கள் சந்தேகங்களை எளிதாக தீர்க்க உதவும்..!!!
ஏப்ரல் மாத பணம்?
அதேபோல ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை என்பதால், அரசு தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற்று வழக்கம் போல ஏப்ரல் 15ம் தேதிக்குள் பணத்தைச் செலுத்த வாய்ப்பு அதிகம் உள்ளது என்கிறார்கள்...!!!












Click it and Unblock the Notifications