எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது. இந்தியாவும் விரைவில் இந்த நெருக்கடியை சந்திக்கும் என்றாலும், இதைவிட பெரி பிரச்சனையில் இந்தியா சிக்கியிருக்கிறது. எல்பிஜ தான் அந்த பிரச்சனை.

போர் சூழலில் இந்தியாவுக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இருப்பினும், வணிக சிலிண்டர் முன்பு போல எளிதாக கிடைக்கவில்லை என்று வணிகர்கள் புலம்ப தொடங்கியுள்ளனர்.

India LPG strategic

இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனை

கச்சா எண்ணெய்யை போலவே, எல்பிஜியும் இறக்குமதிதான் செய்யப்படுகிறது. எல்பிஜி சப்ளைக்கு 60-65% வரை நாம் வளைகுடா நாடுகளைதான் நம்பியிருக்கிறோம். குறிப்பாக சவுதி, கத்தார் மற்றும் அமீரகத்திலிருந்து 90% நமக்கு வருகிறது. இந்த வாயுவை அப்படியே கப்பலில் கொண்டுவர முடியாது. திரவ நிலைக்கு மாற்றிதான் கொண்டுவர முடியும். இதற்காக இந்த வாயுவை மைனஸ் 42 டிகிரி செல்சியஸில் குளிர வைப்பார்கள். இல்லையெனில், வாயுவை அதிக அழுத்தத்திற்கு உட்படுத்துவார்கள்.

இந்தியாவுக்கு எப்படி எல்பிஜி வருகிறது?

எல்பிஜி வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறினால், அதிகமான அளவில் கப்பலில் ஏற்றி கொண்டுவர முடியும். இப்படித்தான் VLGC கப்பல்கள் மூலம் எல்பிஜி இந்தியாவுக்கு வருகிறது. இப்படி வரும் எல்பிஜி, துறைமுகங்களில் உள்ள டேங்கர்களில் சேமிக்கப்படுகிறது. இதனையடுத்து டேங்கர் லாரிகளிலும், சரக்கு ரயில் மூலமாகவும் பாட்லிங் பாயிண்ட்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கேஸ் லீக்கேஜ்

இங்கு வைத்துதான், நம் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர்களுக்கு கேஸ் நிரப்பப்படுகிறது. எல்பிஜிக்கு இயற்கையில் மணம் கிடையாது. எனவே கசிவு ஏற்பட்டால் கண்டுபிடிக்க முடியாது. இது எளிதில் தீப்பற்றும் என்பதால், வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களில் இந்த வாயுவை நிரப்பும்போது கூடவே, 'ஈத்தேன் தியோல்' வாயு சேர்க்கப்படும். இதுதான் வீட்டில் கேஸ் லீக் ஆனால் வரும் வாசனைக்கு காரணம். இதெல்லாம் இந்த பாட்லிங் பாயிண்டில்தான் செய்யப்படும்.

இந்தியா செய்த தவறு

விஷயம் என்னவெனில், இவ்வளவு செய்யும் எரிபொருள் நிறுவனங்கள், எல்பிஜியை சேமித்து வைக்க எந்த இடத்தையும் உருவாக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. கச்சா எண்ணெய்யை சேமித்து வைக்க இந்தியாவில் இடம் இருக்கிறது. ஆனால், எல்பிஜியை சேமித்து வைக்க இப்படியான இடங்கள் பெரிய அளவில் இல்லை. எனவே ஒரே ஒருநாள் எல்பிஜி கப்பல்கள் இந்தியாவுக்கு வரவில்லை என்றாலும் எல்பிஜ தட்டுப்பாடு ஏற்படும். இதுதான் மத்திய அரசு செய்த பெரிய தவறு.

செலவுக்கு தயங்கி..

எல்பிஜயை சாதாரணமாக சேமித்து வைக்க முடியாது. அதை சேமிக்க பிரத்யேக இடம் வேண்டும். எல்பிஜியை தொடர்ந்து குளிர்வித்துக்கொண்டே இருக்க வேண்டும். இப்படியான சேமிப்பு கிடங்குகளை மெயின்டெயின் செய்ய பல ஆயிரம் கோடிக்கணக்கான ரூபாய் செலவாகும் என்பதுதான். இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் இருக்கும் நாடுகளில், இதுபோன்ற சேமிப்பு கிடங்குகளி்ல் விபத்து ஏற்பட்டால் பேரழிவு ஏற்படும்.

முக்கியமான எச்சரிக்கை

இருப்பினும் பாதுகாப்பான முறையில் நிச்சயம் நம்மால் சேமித்து வைத்திருக்க முடியும். ஆனால், நாம் அதை செய்யவில்லை. இதன் காரணமாக இந்தியாவில் எல்பிஜ தட்டுப்பாடு ரொம்ப சீக்கிரமாகவே ஏற்படும் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் போன்றோர் எச்சரித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+