லுலு மால் சென்னையில் வருது.. லுலுவை போலவே இன்னும் 2 மால்கள் இந்த இடத்தில்தான் அமைகிறதா? ஹைடெக் வசதி
சென்னை: சென்னையில் புதிய புதிய மால்கள் விரைவில் வரப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது சென்னைவாசிகளுக்கு பெருத்த வசதிகளை தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கோயம்புத்தூரை பொறுத்தவரை, மிகப்பெரிய தொழில் நகரம் என்பதால் ஏகப்பட்ட டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், ஷாப்பிங் மால்கள் என நிறைந்து உள்ளன.. ஆனாலும், ஒரே இடத்தில் கிடைக்கக்கூடியதாக அமைந்துள்ள ஹைப்பர் மார்க்கெட்டை அமைத்துள்ளது லுலு நிறுவனம். இதேபோல, இன்னொரு மால் இதே கோவையில் அமைப்பதற்கான வேலைகளில் லுலு நிறுவனம் இறங்கியிருக்கிறது.

பீனிக்ஸ் மால்: இதுபோலவே, சென்னையிலும் லுலு மால் வரப்போவதாக சொல்லி வருகிறார்கள்.. சென்னையில் ஏற்கனவே நிறைய ஷாப்பிங் மால்கள் இருக்கின்றன.. குறிப்பாக, பீனிக்ஸ் மால், எக்ஸ்பிரஸ் அவென்யூ , ஆம்பா ஸ்கைவாக், போன்ற பிரம்மாண்டமான மால்கள் உள்ளன.. சென்னைவாசிகளும் இந்த மால்களை குவிந்தவண்ணம் உள்ளனர்..
எனினும், இவைகளைவிட மிகப்பிரம்மாண்டமான முறையில், இன்னொரு மால் அமைப்பதற்கான வேலையை லுலு நிறுவனம் மேற்கொண்டுவருகிறது. இதற்கு வணிகர்கள் தரப்பில் எதிர்ப்பு வந்தபோதும், லுலு நிறுவனம், எப்படியும் விரைவில் மால் அமைப்பதற்கான வேலைகளை முடித்துவிடுவோம் என்கிறது. அந்தவகையில், சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கக்கூடிய இடத்தில் லுலு மால் வரப்போவதாக சொல்கிறார்கள்.
2 மால்கள்: அதேபோல, மால் ஆப் மெட்ராஸும், சென்னையில் எஸ்.ஆர்.பி. சிட்டியில் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. இது எப்படியும், கிட்டத்தட்ட 1.2 மில்லியன் சதுர அடியில் கட்ட திட்டமிடப்பட்டிருப்பதால், பிவிஆர் தியேட்டர் உட்பட அனைத்துமே இந்த கட்டிடத்தில் அமைய போகிறதாம். இப்படி லுலு + மால் ஆப் மெட்ராஸ் என 2 விதமான மால்கள் வர உள்ளநிலையில், மேலும் இன்னொரு மால் வரப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அந்தவகையில், சென்னை எழும்பூரில் புதிய "யூனிட்டி" மால் வரப்போகிறதாம்.. அதாவது, மத்திய அரசின் சார்பில், "ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டம்" என்ற திட்டத்தின் கீழ், இந்த மால் கட்டப்பட உள்ளதாக சொல்கிறார்கள்.. அந்தவகையில், எக்மோரில் கோ ஆப்டெக்ஸ் வளாகத்திலேயே, 9 மாடிகளுடன் அமைய போகிறதாம்..
மகிழ்ச்சி: இந்த மாலில், நம்முடைய இந்திய மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்டத்தின் பொருட்களும் விற்பனைக்கு வருகிறது. இதற்காக அரசு சார்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டு இந்த மால் கட்டப்ப உள்ளது. ஆகமொத்தம், சென்னையில் மட்டும் 3 மால்கள் வரப்போவதால், சென்னைவாசிகள் மிகுந்த குஷியில் உள்ளனர்.
ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டம் என்பது மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டமாகும்.. மின்னணு சந்தைக்கான திறந்த கட்டமைப்புடன் இணைக்க வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார்.
அதாவது, ஒரே தளத்தில் வாங்குவோரையும், விற்பவரையும் கொண்டு வருவதன் மூலம் ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தின் களப்பணியாளர்களை மேலும் விரிவுப்படுத்த மின்னணு சந்தைக்கான திறந்த கட்டமைப்பு உதவும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications