"கண்ணசைத்த" மேலிடம்.. பறந்த சீக்ரெட் ரிப்போர்ட்.. "அவங்களுடன்" சேர போறாங்களாமே.. பிளான் இதுதானாம்
பாஜக மேலிடம் அதிமுக விவகாரத்தில் விரைவில் தலையிட போவதாக தெரிகிறது
சென்னை: எடப்பாடி பழனிசாமி ஒருபக்கம், ஓபிஎஸ் மறுபக்கம் என பிரிந்து கிடக்க, அதிமுகவின் நிலைமை இப்படியே தான் இருக்குமா என்ற கவலை தொண்டர்களிடம் சூழ்ந்து கொண்டுள்ளது.. இந்நிலையில், ஆறுதல் செய்தி ஒன்று அரசியல் களத்தில் பறந்து கொண்டிருக்கிறது.
ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை தீவிரமான பாஜக ஆதரவாளர்.. பாஜக அபிமானி.. பாஜக தலைவர்களுக்கு நெருக்கமானவர்.. தமிழகத்துக்கு எதிரான திட்டடங்கள், அறிவிப்புகள் வெளிவரும்போதுகூட, மேலிடத்தை பகைத்து கொள்ளாமல், யாருக்குமே வலிக்காமல் ஒரு கண்டன அறிக்கையை ஓபிஎஸ் வெளியிடுவார்.
இவராவது பரவாயில்லை.. இவரது மகன், டெல்லி அவையில் பேசும்போது, சிலசமயம் அதிமுக எம்பியா? பாஜக எம்பியா? என்று குழம்பி போகும் அளவுக்கு பேசுவார் என்ற விமர்சனங்களும் பலமுறை எழுந்துள்ளன..

தகராறுகள்
ஒவ்வொரு முறை அதிமுகவில், தகராறு வெடிக்கும்போதெல்லாம், முதலில் ஓபிஎஸ் டெல்லிக்கு செல்வார்.. அவருக்கு பின்னாடியே எடப்பாடியும் செல்வார்.. அங்கு என்ன நடக்கும் என்றெல்லாம் நமக்கு தெரியாது.. பிறகு 2 பேரும் சேர்ந்து சென்னை வந்து சேருவார்கள்.. இதுதான் கடந்த காலங்களில் தமிழகம் அறிந்த செய்தி.. ஆனால், இந்த முறை அப்படி இல்லை.. வழக்கம்போல் தகராறு வெடித்தது.. வழக்கம்போல் டெல்லிக்கு சென்றார் ஓபிஎஸ்.. ஆனால், அவருக்கான ஆதரவு அங்கு முழுமையாக கிடைத்ததா என்பது சந்தேகமாக உள்ளது. அமித்ஷாவை அங்கு சந்திக்க முடியவில்லை என்ற தகவலும் கசிந்தது..

சீனிவாசன்
இப்போது, அதிமுக பிளவில் உள்ளது.. பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், நான்தான் பொருளாளர் என்று ஓபிஎஸ் சொல்லி வருகிறார்.. கடைசியில் வங்கிக் கணக்கு முடங்கும் நிலை வந்துவிட்டது.. கட்சி யாருக்கு சொந்தம் என்பது உறுதியாக தெரிந்தால்தான், அலுவலகமும் சரி, வங்கிக் கணக்கும் சரி, இரட்டை இலை சின்னமும் சரி, அனைத்தும் கிடைக்க வாய்ப்புள்ளது.. மெஜாரிட்டியான ஆதரவாளர்களுடன் எடப்பாடி ஒருபக்கம் ஆளுமையை நிரூபித்து வருகிறார்.. சட்டப்படி சென்று தன் இருப்பிடத்தை நிலைநாட்டி வருகிறார் ஓபிஎஸ்.

முதல் நபர்
இப்படி இரு தரப்புமே பிரிந்து கிடந்தாலும் முக்கியமான ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டி உள்ளது.. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், முதல் நபராக ஓடிவந்து வாழ்த்து சொன்னது பாமகதான்.. ஆனால் கூட்டணியில் உள்ள பாஜக கப்சிப் என்றாகிவிட்டது.. இதுவரை எடப்பாடிக்கு வாழ்த்து சொல்லிவில்லை. எடப்பாடி மீதான காரணமே இதற்கு சொல்லப்படுகிறது.

அரவணைப்பு
ஏற்கனவே, தினகரன் தனிக்கட்சி துவங்கி, 4 சதவீதஓட்டுகளை பிரித்ததால்தான், தென் மாவட்டங்களில் அதிமுக சரிவை சந்தித்தது.. ஏற்கனவே, சசிகலா - தினகரனை அரவணைத்து செல்லுங்கள் என்று பாஜக மேலிடம் பலமுறை அறிவுறுத்தியும், எடப்பாடி கேட்கவில்லை.. இந்த முறையாவது இவர்களுடன் இணைந்து, அதிமுக ஓட்டுக்களை அப்படியே அள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் டெல்லி உள்ளதாக தெரிகிறது. ஆனால், எடப்பாடி தொடர்ந்து பிடிவாதம் காட்டி வருகிறார்.

பொதுக்குழு
அதேபோல, பாஜக தனக்கு ஆதரவு தரவில்லை என்ற வருத்தம் எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ளதாம்.. அதனால்தான், பொதுக்குழுவில் மத்திய அரசைப் பாராட்டி எந்த தீர்மானமும் நிறைவேற்றவில்லை என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, ராகுலின் ஆதரவை எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக கோரியதாக வந்த செய்திகளும் இதன் காரணமாகத்தான் என்கிறார்கள்.. இதெல்லாம் பாஜகவுக்கும் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.

அமித்ஷா
என்றாலும், அதிமுகவின் இந்த பிளவு எந்த வகையிலும், கூட்டணிக்கு சரியில்லை என்பதை மேலிடம் நன்றாக உணர்ந்துள்ளதாம்.. அதேசமயம், இங்கு நடக்கும் அத்தனை நிகழ்வுகளும், தமிழக பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், பாஜக தேசியத் தலைவர் நட்டாவுக்கும் ரிப்போர்ட்களாக அடிக்கடி சென்று கொண்டே இருக்கிறதாம்.. விரைவில் அதிமுக விஷயத்தில் மேலிட தலைவர்கள் தலையிட உள்ளதாகவே கூறப்படுகிறது.. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் முடிந்ததுமே, அதிமுக விவகாரத்தில் ஒரு சுமூக முடிவு எட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications