புஸ்ஸி ஆனந்த், அருண் எங்கே? கரூர் சம்பவம் நடந்த போது எங்கிருந்தார்கள்? இதெல்லாம் கொடூரம்
கரூர்: கரூரில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் விஜய் பரப்புரையின் போது 39 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்வின் போது ஆதவ் அர்ஜுனா, அருண், புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் எங்கே போனார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக முக்கியமான விவரங்கள் வெளியாகி உள்ளன.
கரூர் விஜய் பரப்புரையில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவகள் 28 பேர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ள 4 பேரின் உடல்கள் அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 பேரும், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 61 பேரும் என மொத்தம் 111 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் எங்கே?
சம்பவம் நடந்த போது புஸ்ஸி ஆனந்த் விஜய் உடன் இருந்ததாகவே கூறப்படுகிறது. ஆனால் அவரும் விஜயுடன் அவசரமாக அங்கிருந்து எஸ்கேப் ஆகி உள்ளார். கட்சியின் பொதுச்செயலாளராக அவர் இந்நேரம் அறிக்கை விட்டு இருக்க வேண்டும். ஆனால் இந்த நொடி வரை அறிக்கை வெளியிடவில்லை.
அவர் இப்போது சென்னையில் உள்ளார். இன்று விஜயை சந்திக்க செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆதவ் அர்ஜுனா விஜயுடன் கரூரில் இருந்தார்.. ஆனால் சென்னையில் இப்போது அவருடன் இல்லை. விஜயுடன் என்ன போஸ்ட் செய்ய வேண்டும்.. செய்தியாளர்களை சந்திக்க வேண்டாம் என்பது உள்ளிட்ட சில ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். திமுகவை கடுமையாக விமர்சனம் செய்யும் ஆதவ் அர்ஜுனா.. தவெக கூட்டத்தில் மக்கள் இறந்ததற்கு 1 இரங்கல் செய்தி கூட வெளியிடவில்லை. இன்னொரு பக்கம் கட்சி நிர்வாகி அருண் சென்னையில் இருக்கிறார். விஜயுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் அவர்.. விஜய்க்கு முக்கியமான சில ஆலோசனைகளை இந்த விவகாரம் தொடர்பாக வழங்கி வருகிறார்.
டிஜிபி வெங்கட்ராமன் விளக்கம்
முன்னதாக டிஜிபி வெங்கட்ராமன் சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கரூரில் நடைபெற்றது மிகவும் துயரத்தக்கமான விஷயம். தற்போது வரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் ஆண்கள் 12, 16 பெண்கள், ஐந்து ஆண் குழந்தைகள் ஐந்து பெண் குழந்தைகள் என பத்து குழந்தைகள் இறந்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. உடனடியாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தலைமையில் மூன்று ஐஜி கல் இரண்டு டிஐஜிக்கல் 10 எஸ்பிக்கள் உட்பட 2000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் கூட்டங்களை மனதில் வைத்துக் கொண்டுதான் அவர்கள் கூறியதை விட கூட்டம் அதிகமா வந்ததை மனதில் வைத்துக் கொண்டுதான் தற்போது கரூரில் பெரிய இடம் அவர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டது.
இதே இடத்தில் மாநில அளவில் ஒரு பெரிய கட்சி பரப்பரை செய்துள்ளது. பத்தாயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் 27 ஆயிரம் பேர் கூடி உள்ளனர். விஜய் பிரச்சாரம் நடத்திய இடத்தில் 500 காவல் துறையினர் பாதுகாப்பில் இருந்தனர்.
முக்கியமாக குறிப்பிட விஷயம் என்னவென்றால் மதியம் மூன்று இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி கோரப்பட்டது. ஆனால் காலை 11 மணியிலிருந்து சேர்ந்த கூட்டம் விஜய் இரவு 7:40க்கு தான் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். அதுவரை அங்கு சேர்ந்த கூட்டத்திற்கு போதுமான தண்ணீர் உணவு வழங்கப்படவில்லை. இதுதான் உண்மை.
கூட்டம் அவரை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. விஜய் அவர்களே காவல்துறையை பாராட்டினார். கத்தி தொண்டர்கள் முறையாக கூட்டத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் என்று நாம் முன்னரே அவர்களுக்கு நிபந்தனை விதிக்கிறோம். ஆனால் 27 ஆயிரம் கூட்டத்திற்கு எதிர்பார்த்து காவல்துறையினரை நியமிக்க வேண்டும் என்ற அர்த்தம் கிடையாது. இந்த துயரமான சம்பவம் எதனால் நடந்தது என்பது விசாரணை கூறியது அதற்கான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் அது பற்றி தற்போது பேச முடியாது என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications