எம்பி சீட் கேட்ட காளியம்மாள்.. திமுக தந்த ரியாக்சன்.. குறுக்கே வந்த ஆதவ் அர்ஜுனா.. பயங்கர ட்விஸ்ட்
சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய காளியம்மாளை தங்கள் கட்சிக்குள் இழுக்க சில தலைவர்கள் முயன்று வருகிறார்களாம். ஐடி நிறுவனத்தில் பணி மாறும் ஊழியர் கூடுதல் ஹைக்கில் வேலை மாறுவது போல.. காளியம்மாளும் நல்ல ஆபர் உடன் கட்சி மாறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறாராம். இது தொடர்பாக "ஒன்இந்தியா" தமிழுக்கு சில பிரத்யேக தகவல்கள் கிடைத்துள்ளன.
சமீபத்தில் வெளியான ஆடியோ ஒன்றில் சீமான் காளியம்மாளை விமர்சனம் செய்வது போல் ஆடியோ இருந்தது. அதில், காளியம்மாளை எல்லாம் தட்டி விடலாம். அவர் பெரிய ஆள் இல்லை. அவர் ஒரு பிசிறு. காளியம்மாள் எல்லாம் எனக்கு ஒண்ணுமே இல்லை. அவள் எல்லாம் வெறும் பிசிறு அவ்வளவுதான். இப்போது வந்துவிட்டு ஆடிக்கொண்டு இருக்கிறாள். வளர விட கூடாது என்று சீமான் பேசுவது போன்ற ஆடியோ வெளியானது.

மறுத்த நாம் தமிழர் - ஒப்புக்கொண்ட சீமான்: ஆனால் இந்த விவகாரத்தில்.. ஆடியோ வெளியான சமயத்தில் இதை நாம் தமிழர் பலர் மறுத்தனர். அதாவது இதை சீமான் பேசவில்லை என்று கூறி மறுத்தனர். இது ஏஐ என்றும் கூட விளக்கம் கொடுத்தனர். ஏஐ வைத்து இப்படி எல்லாம் ஆடியோ உருவாக்கலாம் என்றனர்.
இது சீமானின் பேச்சு கிடையாது என்று கடுமையாக பதில் வாதம் வைத்தனர். . இப்படிப்பட்ட நிலையில்தான் காளியம்மாவை அநாகரீகமாக பேசியது பற்றி வெளியான ஆடியோக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்தார். நாம் தமிழர் கஷ்டப்பட்டு மறுக்க.. சீமான் தான்தான் பேசினேன் என்பதை ஒப்புக்கொள்ளும் வகையில் அந்த பேட்டி இருந்தது.
வெளியேறிய காளியம்மாள்
அதன்பின், இதை பற்றி பேசாமல் அமைதி காத்த காளியம்மாள், தற்போது கட்சியில் இருந்தே வெளியேறி உள்ளார். நாம் தமிழர் கட்சி எனும் பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன், கனத்த இதயத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன், தமிழ்த்தேசியத்தை விதைக்கும் வழியில் எம் பயணம் தொடரும் என்று காளியம்மாள் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய காளியம்மாளை தங்கள் கட்சிக்குள் இழுக்க சில தலைவர்கள் முயன்று வருகிறார்களாம்
காளியம்மாள் அவசரம் ஏன்?
காளியம்மாள் பற்றிய சீமான் ஆடியோ வந்து பல மாதங்கள் ஆகிறது. ஆனால் இத்தனை நாட்கள் வெளியேறாமல் இருந்த காளியம்மாள் இப்போது வெளியேறியது ஏன் என்பதற்கு முக்கியமான ஒரு காரணம் உள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய சீமான் தாக்கல் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
வழக்கை ஆராய்ந்த போது நடிகை விஜயலட்சுமிக்கு, சீமான் மீது எந்த காதலும் இல்லை, குடும்ப பிரச்சினை திரைத்துறை பிரச்சனை காரணமாக சீமானை விஜயலட்சுமி குடும்பத்தினர் அணுகி உள்ளனர் அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகை விஜயலட்சுமி உடன் சீமான் உறவு வைத்துள்ளது தெரிய வருவதாக, சட்டப்படி அனைவரும் அறியும் வகையில் திருமணம் செய்து கொள்வதாக சீமான் கூறியிருந்தார் என்றும் அவரின் வற்புறுத்தலுக்கு இணங்க ஆறு ஏழு முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும், விஜயலட்சுமியுடன் பெருந் தொகையை பெற்றிருப்பதாகவும் விஜயலட்சுமி புகாரில் தெரிவித்துள்ளதாக நீதிமன்றம் கூறி உள்ளது.
இந்த வழக்கில் சீமானுக்கு எதிராக விரைவில் உத்தரவுகள் வரும் வாய்ப்புகள் உள்ளன. இந்த வழக்கில் சீமானுக்கு எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில்.. அது நாம் தமிழர் கட்சிக்கே களங்கம். அந்த கட்சியில் இருப்பவர்களுக்கும் களங்கம். ஒரு பெண்ணாக அந்த கட்சியில் இருந்தால் அது காளியம்மாளுக்கு சிக்கல். அதோடு இந்த வழக்கில் எதிர் தீர்ப்பு வந்த பின் காளியம்மாள் கட்சி மாறினால் கூட.. அவரை ஏற்றுக்கொள்ள மற்ற கட்சிகள் யோசிக்கும். இதனால்தான் டைட்டானிக் ஐஸ் பாறையில் இடிக்கும் முன்.. "லைஃப் போட்டில்" தப்பித்துள்ளார் காளியம்மாள்.
காளியம்மாளை அழைக்கும் அமைச்சர்?
காளியம்மாள் மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர். அவரை திமுகவிற்குள் இழுக்க சென்னையை சேர்ந்த 2 எழுத்து இனிஷியல் அமைச்சர் முயற்சி செய்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. நீங்கள் மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர்.. உங்களுக்கு நல்ல வாய்ஸ் இருக்கிறது.. பிரபலமாகவும் இருக்கிறீர்கள்.. கட்சிக்கு வாங்க என்று காளியம்மாளிடம் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் காளியம்மாள் கேட்கும் ஆபர் அவரிடம் இருந்து கிடைக்கவில்லையாம்.
அழைத்த ஆதவ் அர்ஜுனா
இன்னொரு பக்கம் காளியம்மாளை தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கும் அழைத்து உள்ளாராம் அந்த கட்சியில் புதிதாக இணைந்த ஆதவ் அர்ஜுனா. உங்களுக்கு பிரச்சார குழு தலைவர் பதவி தருகிறோம். தேர்தலில் போட்டியிடலாம். எம்எல்ஏ பதவி கிடைக்கும். தேர்தல் நிதிக்கு கண்டிப்பாக செலவு செய்ய பணம் தருகிறோம், என்று ஆதவ் அர்ஜுனா பேசி உள்ளாராம்.
ஒருவேளை நீங்கள் எங்கள் கட்சிக்கு வரவில்லை என்றால் சீமான் போல தனிக்கட்சி தொடங்குங்கள். உங்கள் கட்சியில் இருந்து ஏற்கனவே பலர் வெளியேறுகிறார்கள். அவர்களை வைத்து தனிக்கட்சி தொடங்குங்கள். அதன்பின் தமிழக வெற்றிக் கழகம் உடன் கூட்டணி வையுங்கள் என்று காளியம்மாளுக்கு ஆதவ் அர்ஜுனா ஐடியா தந்து உள்ளாராம்.
அதிமுக பதில் அளிக்கவில்லை
இன்னொரு பக்கம் இத்தனை காலம் திமுகவை எதிர்த்து விட்டு அவர்களுடன் சேர்ந்தால் சிக்கல் ஆகும் என்பதால் அதிமுக உடனும் பேசி பார்க்கலாம் என்று காளியம்மாள் பேசி உள்ளாராம். ஆனால் அதிமுக பக்கத்தில் இருந்து பெரிதாக ரெஸ்பான்ஸ் இல்லை. இருக்கிற பிரச்னையை சமாளிக்க எடப்பாடிக்கு நேரம் இல்லாததால் காளியம்மாள் உடன் பேச நேரம் ஒதுக்கவில்லை.. பெரிதாக பதில் இல்லை என்று கூறப்படுகிறது.
திமுக தரப்பில் பேச்சு
இன்னொரு பக்கம் திமுக தரப்பில் இன்னொரு அமைச்சரை அணுகி உள்ளார் காளியம்மாள். அந்த இளம் அமைச்சரை சந்தித்து காளியம்மாள் எம்பி சீட் கேட்டுள்ளார். ஆனால் அமைச்சர் மறுத்துவிட்டார். வாரியத் தலைவர் பதவி வேண்டுமானால் வாங்கித் தருகிறேன்..
பெரிய பதவி தந்தால் இத்தனை நாட்கள் திமுகவை எதிர்த்தவருக்கு திமுகவிலேயே பதவியா என்று கேட்பார்கள்.. வேண்டும் என்றால் வாங்க என்று காளியம்மாளிடம் பேசி உள்ளார்.
இப்படி பல இடங்களில் இருந்து காளியம்மாளுக்கு அழைப்பு வந்துள்ளது. அவரும் பல இடங்களில் பேசி வருவதால் விரைவில் காளியம்மாள் "...." கட்சியில் இணைந்தார் என்ற பிளாஷ் நியூஸ் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
காளியம்மாள் பற்றி சீமான் பேசியதும்.. அதை தொடர்ந்து காளியம்மாள் வெளியேறியதும்.. இப்போது அவர் வேறு கட்சிக்கு போக முயல்வதும் அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் நீங்கள் அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை கீழே கமெண்ட் செய்யுங்கள்!
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications