செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கிடைக்குமா? அமலாக்கத்துறை மனு மீது நாளை தீர்ப்பு
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய அமலாக்கத்துறை மனு மற்றும் இடைக்கால ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜி மனு மீது சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி நாளை உத்தரவு பிறப்பிக்கிறார்.
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்துத் துறையில் வேலைவாங்கித் தருவதாக பணமோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அது போல் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவரை கைது செய்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அப்போது அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டது. அதில் 3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் அவரிடம் நேரில் விசாரணை நடத்த சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி வந்திருந்தார். அவர் செந்தில் பாலாஜியை 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரியும்,அமலாக்கத்துறை சார்பில், செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீது இன்று பரபரப்பு வாதங்கள் நடைபெற்றது. அமலாக்கத்துறை காவலில் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று செந்தில் பாலாஜி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய அமலாக்கத்துறை மனு, இடைக்கால ஜாமீன் கோரிய மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். மனு மீது சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி நாளை உத்தரவு பிறப்பிக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications