இன்று 15 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை மையம் வார்னிங்! உங்க ஊர் இருக்கானு பாருங்க
சென்னை: மாண்டஸ் புயல் கரையைக் கடந்துவிட்ட போதிலும், தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே இன்று 15 மாவட்டங்களில் கனமழை இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாண்டஸ் புயல் கடந்த வெள்ளிக்கிழமை தான் கரையைக் கடந்தது. மாண்டஸ் புயல் கரையைக் கடந்த போது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும், சூறாவளிக் காற்றும் வீசியது.
இருப்பினும் மாண்டஸ் புயல் காரணமாக நல்வாய்ப்பாகப் பெரியளவில் எந்தவொரு பாதிப்பும் இல்லை. மாண்டஸ் புயல் கரையைக் கடந்துவிட்ட போதிலும், இன்னுமே கூட தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

15 மாவட்டங்களில் கனமழை
இதற்கிடையே வரும் நாட்களில் தமிழ்நாட்டில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வரும் நாட்கள்
நாளை டிச.12 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், வரும் டிச. 13, 14 தேதிதகளில தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. வரும் டிச. 15ஆம் தேதி மாநிலத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சொல்லப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 100 மிமீ மழையும், திருப்பத்தூர் வடபுதுப்பட்டு 90 மிமீ மழையும், ஆம்பூரில்80 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்று முதல் டிச.13 வரை லட்சதீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். டிச. 14,14 தேதிகளில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் ஆன அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாண்டஸ் புயல்
முன்னதாக வடகிழக்கு பருவமழை உருவான பிறகு முதல் புயலாக மாண்டஸ் புயல் கடந்த வாரம் உருவானது. இது நேற்று முன்தினம் மாமல்லபுரத்திற்கு அருகில் புயல் கரையைக் கடைந்தது. சென்னை மற்றும் புதுவைக்கு இடையே கரையைக் கடக்கும் 14ஆவது புயல் இந்த மாண்டஸ் புயலாகும். புயல் கரையைக் கடந்த போது அதிகபட்சமாக 80-85 கிமீ வரை காற்று வீசியுள்ளது. நல்வாய்ப்பாக இந்தப் புயல் வர்தா அளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications