அதிக வாக்குப் பதிவு.. தமிழ்நாட்டில் டாப் கள்ளக்குறிச்சிதான்.. லிஸ்டில் தருமபுரி, சிதம்பரம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று லோக்சபா தேர்தல் நடந்து முடிந்த நிலையில், எந்த தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் பதிவானது எங்கு குறைந்த வாக்குகள் பதிவானது என்பது குறித்த தகவல்களை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பகிர்ந்து கொண்டுள்ளார்.
நமது நாட்டில் இந்த முறை மொத்தம் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே லோக்சபா தேர்தல் இன்று நடந்தது.

தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகள் உட்பட நாடு முழுக்க இருக்கும் 21 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரேதேசம் என மொத்தம் 102 தொகுதிகளுக்கு இன்று லோக்சபா தேர்தல் நடைபெற்றது.
லோக்சபா தேர்தல்: ஒவ்வொரு தேர்தல்களிலும் பொதுமக்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் கடந்த காலங்களில் வாக்கு சதவீதம் 70 முதல் 80 சதவீதம் என்ற அளவிலேயே இருந்துள்ளது. கடந்த 2009 லோக்சபா தேர்தலில் 73.02 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், கடந்த 2014இல் 73.74 சதவீத வாக்குகளும் கடந்த 2019இல் 72.47 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
இந்த முறை தமிழ்நாட்டில் 72.09% வாக்குகள் பதிவாகி உள்ளதாக சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சில வாக்குச்சாவடிகளில் 6 மணிக்கு வந்தவர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், துல்லியமாக எத்தனை சதவிகிதம் என்பது இரவு அல்லது நாளை காலை அறிவிக்கப்படும் என்றார்.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67% வாக்குகள் பதிவாகி உள்ளதாக சத்யபிரதா சாகு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தர்மபுரி தொகுதியில் 75.44% வாக்குகள் பதிவாகி இருக்கும் நிலையில், சிதம்பரம் தொகுதியில் 74.87% வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
அதேபோல வழக்கம் போல இந்த முறையும் குறைந்தபட்ச வாக்குகள் சென்னையில் தான். மத்திய சென்னை தொகுதியில் 67.35% வாக்குகள் பதிவாகி இருக்கும் நிலையில், தென் சென்னை தொகுதியில் 67.82% வாக்குகளும் மதுரை தொகுதியில் 68.98% வாக்குகளும் பதிவாகி உள்ளது. வடசென்னை தொகுதியில் 69.26% வாக்குகள் பதிவாகி உள்ளது.
இதில் அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ள கள்ளக்குறிச்சியில் திமுக சார்பில் மலையரசன் களத்தில் இருக்கிறார். அதிமுக சார்பில் ஆர்.குமரகுரு களத்தில் இருக்கும் நிலையில், பாஜக கூட்டணியில் பாமகவில் இருந்து ஆர். தேவதாஸ், நாம் தமிழர் சார்பில் ஜெகதேச பாண்டியன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications