கொளுத்தும் வெயிலுக்கு நடுவே.. சில்லென வரும் மழை.. எங்கெல்லாம் தெரியுமா! வானிலை மையம் தகவல்
வரும் நாட்களில் டெல்டா உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்யும்
சென்னை: தமிழ்நாட்டில் இப்போது பிப். மாதமே வெப்பம் கணிசமாக அதிகரித்துவிட்டது. இதற்கிடையே தமிழ்நாட்டில் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைக் காட்டிலும் சற்று அதிகமாகப் பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர். இதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியுள்ளன.
இப்போது வடகிழக்கு பருவமழை முடிந்துள்ள நிலையில், மாநிலத்தில் பல இடங்களில் வெப்பம் மெல்ல அதிகரித்து வருகிறது. கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பே வெப்பம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

தமிழ்நாடு வானிலை
பொதுவாக அக்னி நட்சத்திரம் காலத்தில் தான் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால், இப்போது பிப். மாதமே மாநிலத்தில் பல இடங்களில் வெப்பம் அதிகரித்துவிட்டது. பிப். மாதம் வழக்கமாக இருப்பதைக் காட்டிலும் கூடுதல் வெப்பமே இருக்கிறது. இப்போது இந்தளவுக்கு வெப்பம் இருப்பதால் கோடைக் காலத்தில் வெப்பம் உச்சம் தொடும் என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

வெப்பம் அதிகம்
சில காலமாகவே மாநிலத்தில் வறண்ட வானிலையே நிலவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது.. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் இயல்பைக் காட்டிலும் அதிகபட்சம் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாகக் காணப்பட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எங்கே மழை
இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் பிப். 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.. வரும் பிப். 29இல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தலைநகர் சென்னை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் தெளிவாகக் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications