சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தடுப்பு... குறைகள் தீர்ப்பு... பிறகு தான் எல்லாம்... ஸ்டாலின் முன்னெடுக்கும் 2 அஜெண்டா..!

Google Oneindia Tamil News

சென்னை: சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், திமுக ஆட்சி அமைக்கும் என்பதில் உறுதியாக உள்ள ஸ்டாலின், மே 2-க்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து இப்போதே கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

அதன் வெளிப்பாடாக தான் கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நேற்று வீடியோ கூட வெளியிட்டிருந்தார். அதில் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம் என அறிவுறுத்தவும் செய்திருந்தார்.

Which main tasks plan that Stalin has to carry out

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சார நிகழ்வின் போது தன்னிடம் அளிக்கப்பட்ட குறைதீர்க்கும் மனுக்கள் மீதான நடவடிக்கை ஆகிய இரண்டுக்கும் அதி முக்கியத்துவம் மற்றும் முன்னுரிமை தரவிருக்கிறார் ஸ்டாலின்.

கடந்த ஒரு வாரமாகவே இது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டு வரும் ஸ்டாலின், கொரோனா இல்லாத தமிழகம் என்ற நிலையை அடுத்த 6 மாதங்களுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளிலும் சைலண்டாக இறங்கியிருக்கிறார்.

இதற்காக நோய் தடுப்பு பணிகளுக்கு என ஸ்பெஷல் டீம் ஒன்றையும் மே 2-க்கு பிறகு மாவட்ட வாரியாக உருவாக்க இருக்கிறார். கொரோனா தடுப்பு பணிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திற்கு சற்றும் குறையாமல், மக்களின் கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கைக்கும் அவர் முன்னுரிமை கொடுக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

'ரூட்' க்ளீயர்..நேஷ்னல் முதல் லோக்கல் வரை.. 'ஒரே' ரிப்போர்ட் - 'கோட்டை'க்கு மு.க.ஸ்டாலின் தயார்'ரூட்' க்ளீயர்..நேஷ்னல் முதல் லோக்கல் வரை.. 'ஒரே' ரிப்போர்ட் - 'கோட்டை'க்கு மு.க.ஸ்டாலின் தயார்

இந்த இரண்டு விவகாரங்களுக்கு அடுத்தபடியாக இந்த கல்வியாண்டை எப்படி கொண்டு செல்லலாம், மாணவர்களின் கற்றல் திறனை எந்த வகையில் இணைய வழியில் மேம்படுத்தலாம் என்பது பற்றியும் ஸ்டாலின் சிந்தித்து வருகிறாராம்.

இதனிடையே மீண்டும் ஆட்சியை பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் உள்ள முதல்வர் இ.பி.எஸ். தரப்பும், கொரோனா ஒழிப்பு குறித்து டிஸ்கஷன் நடத்தி வருகிறது.

English summary
Which main tasks plan that Stalin has to carry out
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X