தமிழ்நாடா? தமிழகமா?’… கண்ணகி காலத்திலும் கொடுமைகள்..-காரசார விவாத களமான சென்னை இலக்கியத் திருவிழா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சியில் தமிழ்நாடு பல புதுமைகளைப் படைத்து வருகிறது. அதற்கு மற்றுமோர் சாட்சிதான் 'சென்னை இலக்கியத் திருவிழா' . "தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் எப்படிப் பார்க்கப்படுகிறார்கள் என்பது குறித்த இரண்டு வகையான நிலைப்பாடுகள் இருக்கின்றன. இந்த நிலைப்பாடுகள் குறித்த காரசாரமான விவாதம் புதிய சிந்தனைப் போக்குகளை முன்வைத்தன.

கடந்த 60 ஆண்டுகளில் பார்க்காத அதிசயம்:

கடந்த 60 ஆண்டுகளில் பார்க்காத அதிசயம்:

கடந்த 6 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்ற இலக்கிய திருவிழாவில், பயிலும் அரங்கம், படிப்பு அரங்கம், பண்பாட்டு அரங்கம், குழந்தைகள் இலக்கிய அரங்கம் என மூன்று களங்கள் அமைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. மொத்தம் 100 ஆளுமைகள் இதில் பங்கேற்று கருத்தளித்தனர். மக்கள் இசை தொடங்கி செவ்வியல் இசை வரை, நாடகம், ஆடற்கலை என பழங்கால பண்பாட்டு அடையாளங்கள் தொடங்கி நவீன கலைகள் வரை களைகட்டின.

தொடக்க விழா நிகழ்வில் பேசிய எழுத்தாளர் பவா செல்லத்துரை, "கடந்த 60 ஆண்டுகளில் சிறுபத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்த ஒரு எழுத்தாளன் முதலமைச்சர் பங்கேற்கும் ஒரு விழாவில் தனது மேடையைப் பகிர்ந்து கொண்டதே இல்லை. ஒரு முதல்வர் அமர்ந்துள்ள மேடைக்கு அழைக்கப்படுவது என்பது அபூர்வத்திலும் அபூர்வமாகவே இருந்துள்ளது" என்றார்.

அவர் சொன்னது உண்மைதான். அதற்கான முதல் விதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் விதைத்துள்ளார். இந்த விழாவிற்குச் சிறப்பு அழைப்பாளராகக் கேரள எழுத்தாளர் பால் சக்காரியா கலந்து கொண்டு பேசினார்.

இவை எல்லாம் செய்தது திமுகதான்:

இவை எல்லாம் செய்தது திமுகதான்:

விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய முதலமைச்சர், "ஈராயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட நிலத்திற்கு திமுக ஆட்சிதான் 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டியது என்பதை சுட்டிக்காட்டினார். நூற்றாண்டுக் கனவான செம்மொழி அந்தஸ்தைத் தமிழுக்கு வாங்கிக் கொடுத்தது கலைஞர் என்பதை யாரும் மறந்திட முடியாது. 'மெட்ராஸ்' என்ற பெயரை 'சென்னை' என்று மாற்றியது.
ஸ்ரீ, ஸ்ரீமதி என்ற சொல்லுக்குப் பதிலாகத் திரு, திருமதி என்ற சொற்களை சட்டப்பூர்வமாக ஆக்கியது. தலைநகரில் வள்ளுவர் கோட்டமும் கடல்நகரில் வள்ளுவர் சிலையும் அமைத்தது, திரும்பிய பக்கம் எல்லாம் திருக்குறளைத் தீட்டியது. தமிழ் வாழ்க என எழுத வைத்தது. தமிழில் வழிபடக்கூடிய உரிமையை வாங்கிக் கொடுத்தது.
ஆட்சி மொழியாய் தமிழை முழுமையாக்கியது. தமிழ்த்தாய் வாழ்த்தை அனைத்து நிகழ்ச்சிகளிலும் பாட வேண்டும் என்று உத்தரவிட்டது என அனைத்தையும் செய்தது திமுக ஆட்சிக் காலத்தில்தான்" என்று நினைவூட்டினார்.

 கண்ணகி காலத்தில் நடந்த கொடுமைகள்:

கண்ணகி காலத்தில் நடந்த கொடுமைகள்:

இலக்கிய விழாவின் அரங்க விவாதத்தில் பங்கேற்ற கவிஞர் கனிமொழி அந்தக் காலப் பெண்கள் முதல் இந்தக் கால பெண்கள் வரை எனும் தலைப்பில் கருத்தாழம் மிக்க ஒரு உரையை நிகழ்த்தினார்.
"சங்ககாலத்தில்கூட 32 பெண்கள் கவிஞர்களாக இருந்திருக்கிறார்கள் என்று நாம் பெருமையாகச் சொல்கிறோம். அந்தக் காலத்திலேயே பெண்கள் கல்வி கற்றவர்களாக இருந்துள்ளனர் என்று பேசி வருகிறோம். இதைத்தாண்டி நாம் பெருமையாக அவ்வையைச் சொல்கிறோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் பல ஔவைகள் இருந்திருக்கிறார்கள்.
இத்தனைக் காலத்திலும் ஒரே அவ்வை மட்டுமே இருந்தார் என்பதை நாம் நிச்சயம் ஏற்க முடியாது. 'தமிழகம்' என்று பேசுபவர்கள் அதை ஏற்பார்கள். 'தமிழ்நாடு' என்று சொல்பவர்கள் அதைக் கட்டாயம் ஏற்கமாட்டோம். அப்படி பல்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த ஔவைகளில் ஒருவர் அதியமானுக்குத் தூதுவராகச் சென்றுள்ளார். ஒரு போர்ச் செய்தியை அன்றைக்குத் தைரியமாகக் கொண்டுபோய் சேர்த்தவர் ஒரு பெண் என அறிகிறோம்.
கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில்தான் பூதப் பாண்டியனின் மனைவி தேவி பெருங்கோப்பெண்டு என்பவர், 'விதவை நோம்பு என்ற பெயரால் உப்பு இல்லாத உணவு, உப்பில்லாத கீரை, தரையில் படுத்து உறங்க வைக்கும் நிலையும் இருந்தது. நாம் இதை எல்லாம் சகித்துக் கொள்ள முடியாது. ஆகவே நெருப்பில் வீழ்ந்து இறந்துவிடுகிறேன் என்று சொல்லக்கூடிய நிலைமையும் இங்கே இருந்துள்ளதைப் பார்க்கிறோம்.
அதைப்போலக் கண்ணகி. தன கணவனுக்காக ஒரு அரசனைக் கேள்வி கேட்ட பெண் என்று முன் நிறுத்துகிறோம். அது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளத்தக்கக் கருத்துதான். ஒரு கணவனுக்காக அரசவைக்குள்ளாகவே சென்று ஒரு பெண் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துப் பேசும் சூழல் அன்றைக்கு இருந்திருக்கிறது. அதைவிட அந்தப் பெண்ணிற்கு ஒரு அசாதாரண தைரியம் இருந்துள்ளது.

இன்றைக்குக்கூட எதிர்க்கருத்து முன்வைக்கக்கூடிய பத்திரிகையாளர்களே என்ன மாதிரியான அச்சுறுத்தல்கள் உள்ளன என்பதைப் பார்க்கிறோம். ஆனால் அன்றைக்கு ஒரு பெண் இப்படி எதிர்க்கேள்வியை முன்வைத்திருக்கிறார் என்பது பெரிதுதான்.
ஒரு இடத்தில் கண்ணகி தனது தோழி, ' நீ சோம குண்டம், சூரிய குண்டம் ஆகிய இரு நதிகளில் நீராடி வந்தால் உன் கணவன் வந்துவிடுவான்' எனச் சொல்லும் போது அதை அழகில்லை என்று கண்ணகி புறந்தள்ளிவிடுவாள். கணவன் வந்தால் வரட்டும்; இல்லையேல் போகட்டும் அதற்காக எந்த பூஜையையும் செய்ய மாட்டேன் என்று நிராகரித்துவிடுவாள். இதில் நாம் பெருமை கொள்ளும் தகவல் இருக்கிறது.
ஆனால், அந்தக் காலத்திலேயே தேவதாசி முறை என்று ஒரு வழக்கம் இருந்துள்ளதை அறிகிறோம். ஒரு பெண் பிறப்பால் குடும்ப ரீதியாக வழிவழியாக தேவதாசி முறைக்குள் தள்ளப்பட்ட ஒரு சோக நிலையும் இருந்துள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இதை உடைத்துக் கொண்டு மாதவி செல்லவில்லை. எல்லோரும் செய்யக்கூடிய துறவறத்திற்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாள். ஆக, மாதவியும் மணிமேகலையும் சமூகம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சட்டத்திற்குள் தங்களை உட்படுத்திக் கொள்கிறார் என்றே நாம் படிக்கிறோம்.
இப்படி பெண்கள் சமூகம் ஏற்கக்கூடிய விஷயங்களை மட்டும் செய்துகொண்டிருந்தார்களா? என்றால் அது இல்லை. ஆண்டாள் அதற்கு உதாரணம். 'நான் யாகத்தில் போடப்பட்ட பிரசாதத்தைப் போன்றவர். என்னை யாரும் சாதாரண மனிதன் வந்து தொட்டுவிட முடியாது' என சொல்லக்கூடிய தைரியத்தோடு திமிருடனும் இருந்திருக்கிறாள். இவரும் பெண்? ஆணா என்ற விவாதமும் உள்ளது. அதில் எழுதப்பட்டுள்ள கருத்துகளைக் கொண்டு பார்த்தால், அவர் பெண்ணாகவே இருந்திருக்கக்கூடும் என விளங்குகிறது.

பெண்களுக்கு எதிரான 4 லட்சத்து 28 ஆயிரம் குற்றங்கள் :

பெண்களுக்கு எதிரான 4 லட்சத்து 28 ஆயிரம் குற்றங்கள் :

ஆண்டாள் எழுதியவற்றை இன்றைக்கு எளிமையாக ஒரு பெண் எழுதிவிட முடிகிறதா என்பதையும் நாம் பார்க்க வேண்டும். பெண்களைத் தவறாகச் சித்தரித்துப் பாடல்கள் வருகின்றன. ஒரு பெண் அதை எழுதினால் பெரும் எதிர்வினைகளை சந்திக்க நேரிடுகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இப்போதும் நடக்கின்றன. இப்படி பெண்கள் தங்களின் இச்சைகளை வெளிப்படையாகப் பேசக்கூடாது என்று தொல்காப்பியம் காலம் தொட்டே சமூகம் வலியுறுத்திக் கொண்டே வந்துள்ளது. 4 லட்சத்து 28 ஆயிரத்திற்கும் மேலாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளன. இது கடந்த 2021ஆம் ஆண்டு மட்டும். இது பதிவாகி உள்ள குற்றங்களின் பட்டியல்தான். ஏனெனில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை முதலில் பதிவு செய்வதே இல்லை.

அடுத்து திராவக வீச்சு. 107 பெண்கள் மீது ஆசிட் அட்டாக் நடந்துள்ளது. 'ரெமோ'படத்தில்கூட ஆசிட் அடிப்பதை அன்பால் செய்வதாக நியாயப்படுத்தி இருப்பார்கள். இதான் இன்றுவரை கூட யதார்த்த நிலைமை"என்று கனிமொழி பேசினார்.
வழக்கறிஞர் அருள்மொழி பேசும் போது "இந்தியாவில் உயர்ந்த இடங்கள் என்றால் சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிக்குத்தான் கிடைக்கும். கர்நாடக இசை பொழியும் மேடைகளில் கூட பாடுவது தெலுங்கில்தான். பேசுவதோ ஆங்கிலத்தில். வணக்கம் என்பதுகூட நமஸ்காரம்தான்.
தமிழில் வணக்கம் என்பது இன்னமும் கூட சற்று குறைவான பண்பாட்டுச் சொல்லாக தங்களைத் தாங்களே நினைத்துக் கொள்பவர்களால் கருதப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், இந்த நூலகமும் அது கொடுத்துள்ள மதிப்பும் நமக்குத் தன்னம்பிக்கையை அளிக்கிறது" என்றார்.

வைரமுத்து செய்த திருக்குறள் சோதனை:

வைரமுத்து செய்த திருக்குறள் சோதனை:

இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் கரு. பழனியப்பன் பல ஹைலைட் ஆன கருத்துகளைக் கலகலப்பாக முன்வைத்தார். "இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவந்த பலரும் எனக்கு நண்பர்கள். அவர்கள் எல்லோரும் சொன்னது ஒரே விஷயத்தைத்தான். சரியான நேரத்தில் தொடங்கி, சரியா நேரத்தில் முடித்துவிடுகிறார்கள் என்பதைத்தான். அப்படிச் சரியாக ஒரு அரசு விழாவை நடத்திவிட முடியுமா என்று எனக்குச் சந்தேகம்.
கவிஞர் வைரமுத்து படித்துக் கொண்டிருந்த போது அவரது பேராசிரியர், 'திருக்குறளில் உள்ள அனைத்து குறள்களும் பிரித்துப் பார்த்தால் தளைத்தட்டவே தட்டாது என்றாராம். உடனே மாணவராக இருந்த வைரமுத்துவுக்கு ஒரு கேள்வி எழுந்ததாம். அது எப்படி எல்லா குறள்களையும் தளைத் தட்டாமல் எழுதிவிட முடியுமா வள்ளுவனால்? அப்படி என்ன கொக்கின் கவனத்தோடா வள்ளுவன் குறளை எழுதி இருப்பான், ஆகவே பிரித்துப் பார்த்துவிடுவோம் என்று இறங்கினாராம். விடியவிடிய குறளை தளைப்பிரித்து பார்த்திருக்கிறார். ஒருகுறள் கூட தளைதட்டவே இல்லையாம்.
அதைப்போல நானும் இந்த விழா அப்படிச் சரியான திட்டமிடலோடா நடந்துவிட முடியும் என்று நம்பி வந்தேன். ஆனால், இப்போது உணர்கிறேன், இந்த விழா கொக்கின் கவனத்தோடுதான் இதுவரை நடந்துள்ளது.
ஒருவரை நாம் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? அவர் சொல்லும் சொல்லைவைத்துத் தான் தெரிந்து கொள்ள முடியும். தமிழ்நாடு என்றால் அவர் யார் என்றுதெரிந்து கொள்ளலாம். அதேபோல் தமிழகம் என்று சொன்னால் அவர் யார் என்று தெரிந்து கொள்ளலாம்.
இதைப்போன்ற உரையாடல்கள் ஏன் சமூக வெளியில் நடக்க வேண்டும்? உரையாடுவதை மிக முக்கியமானது என்று நினைப்பது தமிழ்ச்சமூகம். இது ஒரு வெர்பல் சொசைட்டி. நாம் பேசிப்பேசித்தான் மக்களை ஒன்று திரட்டி இருக்கிறோம். ஆகவேதான் இன்று விழாவிற்கு இவ்வளவு பெண்கள் வருகிறார்கள். ஆணைப் போலப் பெண்ணும் ஒரு உயிர் என்று நினைப்பதற்கு, ஆணுக்குச் சமமானவள் அவள் என்று நம்பச் செய்வதற்குப் பேசிப்பேசித் தான் அந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறோம் எனக் குறிப்பிட்டார்.

25 ஆண்டுகள் கழித்து இந்தியா பேசுகிறது:

25 ஆண்டுகள் கழித்து இந்தியா பேசுகிறது:

இங்கு சிலர் பெரியாரை எங்கே கொண்டு போய் குறுக்க நினைக்கிறார்கள் என்றால், அவர் கடவுள் இல்லை என்று சொன்னவர் எனச் சொல்லித்தான். அவர் கடவுள் இல்லை என்பதற்கும் மேலான விஷயங்களையும் சொன்னார். அதில் மிக முக்கியமானது, ஆணுக்குப் பெண் சமமானவள் என்பது. அதை அவர் சாகும் வரைச் சொல்லிக்கொண்டே இருந்தார்.
1928இல் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வேண்டும் என்று தீர்மானமாக நிறைவேற்றியவர் அவர். பெரியாரின் தம்பிகள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததால், அவரது கனவை நினைவாக்க முடிந்தது. நாம் 1998இல் பெண்ணுக்குச் சொத்தில் உரிமை கொடுப்பதைச் சட்டமாக நிறைவேற்றினோம்.
நாம் அதை நிறைவேற்றி 25 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இந்தியா மெதுவாகப் புரண்டு படுக்கிறது. இப்போதுதான் பெண்களுக்கும் சொத்தில் பங்கு தரவேண்டுமா? வேண்டாமா என்று பேசத் தொடங்கி இருக்கிறார்கள். ஆக நாம் தொடர்ச்சியாகப் பேசி, தொடர்ச்சியாக உரையாடி இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். அதைத் தூண்டியவர் பெரியார்.

இனிமேல் அவர் பேர் ரெவிதான்:

இனிமேல் அவர் பேர் ரெவிதான்:

வலது சாரிகள் பெரியாரை விமர்சிக்க ஆரம்பித்ததால் இன்று பெரியார் இளம் தலைமுறைக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறார். நானே பலமுறை மறந்து தமிழகம் என்று சொல்லி இருக்கிறேன். இப்போதுதான் தெளிவாகப் புரிகிறது தமிழ்நாடு என்று சொல்லவேண்டும் என்பது.
இந்த விழாவில் மிக முக்கியமானது நாம் இதைத் தமிழ்த் தாய் வாழ்த்துடன்தான் தொடங்க வேண்டும். அப்படிப் பாடும் போது ஒருவர் எழுது நிற்க மாட்டார் என்றால், நீங்கள் இங்குத் தொடர வேண்டாம், வேறு மாநிலத்திற்குக் கிளம்பலாம் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், ஒரு மொழியை வாழ்த்திப்பாடும் முதல் பண்பாடு நம்மிடம்தான் இருந்தது.

இந்தியாவுக்கு தேசிய மொழி இல்லை:

இந்தியாவுக்கு தேசிய மொழி இல்லை:

இந்தியாவுக்கு என்று ஒரு தேசிய மொழிக் கிடையாது. இந்தியாவுக்கு அலுவல் மொழிதான் இருக்கிறது. அதை மறக்காமல் அழுத்தி அழுத்திச் சொல்லுங்கள். இங்குத் தேசியப் பறவை இருக்கிறது. தேசிய விலங்கு இருக்கிறது. தேசியக் கொடி இருக்கிறது. ஆனால் தேசிய மொழி கிடையாது. ஆக, நாம் மொழியைக் காப்பாற்ற வேண்டும் என்றால், எழுத்தாளனைக் காப்பாற்ற வேண்டும். ஒரு எழுத்தாளனை நன்றாக வைத்துக்கொள்ளாத சமூகம் நன்றாகவே இருக்க முடியது. இதைப் போன்ற இலக்கிய விழாக்கள் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டக்கூடும்.
இந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பாருங்கள் எவ்வளவு சிறப்பாக இருக்கிறது. ஒருவர் வேலையே இல்லாமல் சும்மா உட்கார்ந்திருக்கிறார். அதற்கு அவ்வளவு பெரிய இடம். மான்கள் துள்ளித்திரியும் அந்த இடத்திற்குள் ஒரு நூலகம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நம் தலைமுறை எவ்வளவு முன்னேறி இருக்கும்? உண்மையா இல்லையா?
ஆன்லைன் ரம்மிக்கு தமிழக அரசு சட்டம் இயற்றி அனுப்புமாம், அதற்கு அவர் கையெழுத்துப் போட்டு அனுப்ப மாட்டாராம். ஆனால் தமிழ்நாட்டைத் தமிழகம் என்று சொல்லவேண்டுமாம். சொல்லுங்கள், ரெவி. அவர் பேர் ரெவிதான்" என்றார். அரங்கம் சிரிப்பலையில் சிந்தித்தது.
இப்படியாக, பண்டைய இலக்கியங்கள் தொடங்கி சமகால நிகழ்வுகள்வரை பல்வேறு கருத்துகள் குறித்து உரையாடும் உயர்களமாக இருந்தது இலக்கியத் திருவிழா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+