நாட்டிலேயே அதிக கிரிமினல் வழக்குகள் எந்த முதல்வர் மீது தெரியுமா? ஸ்டாலின் மீது மொத்தம் 32 வழக்குகள்
சென்னை: நமது நாட்டில் உள்ள 31 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களில் எத்தனை பேர் மீது எவ்வளவு கிரிமினல் வழக்குகள் உள்ளன என்பது குறித்த விவரத்தை ஏடிஆர் (ADR) எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்ச குற்ற வழக்குகளைக் கொண்ட முதல்வர்கள் மூன்று பேருமே தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஏடிஆர் (ADR) எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு அவ்வப்போது நமது நாட்டின் அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் குறித்த சில முக்கிய டேட்டாக்களை வெளியிடும்.

ஏடிஆர் அமைப்பு:
எந்தக் கட்சி எவ்வளவு நன்கொடை பெற்றுள்ளன என்பது உள்ளிட்ட தகவல்களை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும். இதற்கிடையே இந்த அமைப்பு நாட்டின் 31 முதலமைச்சர்களின் பின்னணி குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளன. அவர்கள் தேர்தல் சமயத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் உள்ள தகவல்களை வைத்து இந்த லிஸ்டை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
இந்த லிஸ்டில் மாநில முதல்வர்கள் மீது இருக்கும் குற்ற விவரங்கள் குறித்த தகவல்களும் இடம்பெற்று இருக்கிறது. நாடு முழுக்க 31 மாநில முதல்வர்களில் கிட்டதட்ட 13 பேர், அதாவது 42% முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதிலும் சுமார் 10 பேர், அதாவது 32 சதவீத முதல்வர்கள் மீது கொலை முயற்சி, ஆள் கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட கடுமையான வழக்குகள் உள்ளன.
ரேவந்த் ரெட்டி மீது தான் அதிக கேஸ்:
இதில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மீதுதான் அதிகபட்ச கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவர் மீது மொத்தம் 89 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் 72 வழக்குகள் கடும் கிரிமினல் வழக்குகள் ஆகும். மிரட்டல் வழக்குகள் 34 இருக்கும் நிலையில், மத உணர்வுகளை பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாக 38 வழக்குகள் உள்ளன. இது தவிரக் கலவரத்தை ஏற்படுத்துவது, மத நம்பிக்கையை அவமதித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் அவர் மீது வழக்குகள் உள்ளன. அதேநேரம் அவர் எந்தவொரு வழக்கிலும் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின் மீது எவ்வளவு வழக்குகள்:
அவரை தொடர்ந்து அதிக வழக்குகள் என்றால் அது தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது தான். அவர் மீது மொத்தம் 47 வழக்குகள் உள்ளன. அதில் 11 வழக்குகள் தீவிரமான கிரிமினல் வழக்குகள் ஆகும். அவர் மீது கலவரத்தை ஏற்படுத்த முயல்வது, அவதூறு என மொத்தம் 47 வழக்குகள் உள்ளன. ஸ்டாலின் மீதான எந்தவொரு வழக்கிலும் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படவில்லை.
அடுத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இவர் மீது மொத்தம் 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது 13 வழக்குகள், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது 5 வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவர் மீது உள்ள எந்தவொரு வழக்கிலும் அவர்கள் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு:
இதேபோல அதிக சொத்து வைத்திருக்கும் பணக்கார முதல்வர்கள் குறித்த லிஸ்ட்டையும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ. 931 கோடி சொத்துடன் நாட்டிலேயே பணக்கார முதல்வராக இருக்கிறார். அவரைத் தொடர்ந்து ரூ. 332 கோடி சொத்து மதிப்புடன் அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு 2வது இடத்திலும் கர்நாடக சிஎம் சித்தராமையா ரூ.51 கோடி உடன் 3வது இடத்திலும் இருக்கிறார். இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூ. 8 கோடி சொத்து மதிப்புடன் 14வது இடத்தில் இருக்கிறார்.
-
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ்












Click it and Unblock the Notifications