ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிட போகும் சின்னம் எது தெரியுமா? அவரே கொடுத்த பதில் இதுதான்
சென்னை: பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவுக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் சுயேட்சையாக ஓ பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிட விருப்பமாக கோரிய சின்னங்கள் எது என்பது குறித்து ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். சுயேச்சையாக போட்டியிடும் ஓ பன்னீர் செல்வம் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ பன்னீர் செல்வம் கூறியதாவது:-

வாளி, பலாபழப்பம், திராட்சை, உள்ளிட்ட ஏதாவது ஒரு சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளேன். அதிமுக சார்பாக எனக்கு ஆதரவாக வேலை பார்த்த முன்னாள் அமைச்சர்கள் தற்போது எனக்கு எதிராக வேலை பார்க்க போவதாக கேட்கிறீர்கள். இது கால சூழ்நிலை.. காலத்தின் சூழலுக்கு ஏற்ப அவர்கள் வேலை செய்கிறார்கள்.
இதை நாம் குற்றமாக சொல்ல முடியாது. அதிமுகவில் எம்ஜிஆர் வகுத்த சட்ட விதிகளின்படி தான் இருபெரும் தலைவர்களும் வழிநடத்தினார்கள். அவர்கள் கடந்து வந்த பாதையை நாம் பின்பற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோள். அதன்படி தான் நடக்க வேண்டும் என்பதுதான் ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணம் நிலைப்பாடு.. பொதுமக்களின் நிலைப்பாடும் இதுதான்” என்றார்.
போனை போட்டு பேசிய அமித் ஷா.. ஓ பன்னீர்செல்வத்திற்கு மத்திய அமைச்சர் பதவி உறுதி? ஆஹா இது வேறயா!
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ளது. இதனால், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு முடிந்து வேட்பு மனு தாக்கலையும் ஏறத்தாழ முடித்துவிட்டன. திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் இன்று ஒரே நாளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதனால் இன்று தமிழகம் முழுவதும் தேர்தல் அலுவலகங்கள் பரபரப்பாக காட்சி அளித்தன.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications