ஐபிஎல் 2023: எதிரணிகளை கலங்க வைக்கும் கில்லாடி பவுலர்கள்.. கெத்து காட்டும் அணி இதுதான்!
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு கூட்டணி எதிரணியை மிரள வைத்துள்ளது. நடராஜன், மார்கோ யான்சன், உம்ரான் மாலிக், ஆடில் ரஷீத் உள்ளிட்ட பலரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. ஏற்கனவே ஐபிஎல் காய்ச்சல் ஊரெங்கும் பரவி வரும் நிலையில், இந்திய வீரர்கள் அனைவரும் தங்களது அணியினருடன் இணைந்து வருகின்றனர்.
இதன் காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஐபிஎல் தொடர் பற்றிய எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி வருகிறது. ஒவ்வொரு அணியினரும் தங்களது பிடித்த அணியினரின் பலம், பலவீனம் பற்றி பேசி வருகின்றனர்.

சிறந்த பந்துவீச்சு கூட்டணி யார்?
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளில் பலமான பந்துவீச்சு கூட்டணியை கொண்டுள்ள அணிகளை பற்றி பார்க்கலாம். அந்த வகையில் பலமான பந்துவீச்சு கூட்டணி என்று சொல்லும் போது குஜராத், ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் சிறந்த கூட்டணியை கொண்டுள்ளன. குஜராத் அணி கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை பந்துவீச்சு மூலமாகவே வென்றது.

ஹைதராபாத் பந்துவீச்சு கூட்டணி
ஆனால் நடப்பாண்டில் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு கூட்டணி எதிரணிகளை மிரள வைத்துள்ளது. அந்த அணியில் மார்கோ யான்சன், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், நடராஜன், உம்ரான் மாலிக், கார்த்திக் தியாகி, ஆடில் ரஷீத், மயங்க் மார்க்கண்டே என்று சிறந்த பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். புவனேஷ்வர் குமார் மற்றும் மார்கோ யான்சன் பவர் ப்ளே ஓவர்களில் பந்துவீசினால், உம்ரான் மாலிக் மிடில் ஓவர்களில் வந்து சம்பவம் பண்ண தயாராக இருப்பார்.

டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்
அதேபோல் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டான நடராஜன், கார்த்திக் தியாகி ஆகியோர் கடைசி கட்ட ஓவர்களை பார்த்துக் கொள்வர். இதுமட்டுமல்லாமல் வாஷிங்டன் சுந்தர் பவர் ப்ளே ஓவர்களில் கட்டுக்கோப்பாக பந்துவீசக் கூடியவர். அதேபோல் ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரமும் மிடில் ஓவர்களில் சில ஓவர்களை வீசி, ரன்களை கட்டுப்படுத்தக் கூடியவர்.

ஹைதராபாத் அணிக்கு வாய்ப்பு
அதுமட்டுமல்லாமல் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் சிறந்த பந்துவீச்சாளரான ஆடில் ரஷீத்தை எப்படி ஹைதராபாத் அணி நிர்வாகம் பயன்படுத்தப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் இந்திய வீரர்களை வீழ்த்துவதற்கு இடதுகை பந்துவீச்சாளரான மார்கோ யான்சன் சரியாக தேர்வாக இருப்பார். இதனால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புகள் உள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications