பாலஸ்தீன் அதிபரை விருந்தினராக அழைத்த இந்திரா காந்தி.. பாசிச இஸ்ரேலை மோடி ஆதரிக்கிறார் - வன்னியரசு
சென்னை: இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையிலான போர் உக்கிரமடைந்து இருக்கும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் ஆதரவு நிலைபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, "பாலஸ்தீனத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும் முடிவில் இஸ்ரேல் தமது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இஸ்ரேலை ஆதரிக்கப்போவதாக இந்தியாவின் தலைமை அமைச்சர் மோடியும் அறிவித்து விட்டார். இதைத் தொடர்ந்து இந்திய ஊடகங்களின் பார்வையும் நம்மூரு செய்தித்தாள் போல ஆகி விட்டது. அதாவது, பாலஸ்தீனத்தை பாதுகாக்க போராடும் ஹமாஸ் இயக்கத்தை பயங்கரவாதிகளாக பார்க்கும் பார்வை நாளிதழுக்கு மட்டுமல்ல; மோடிக்கும் இருக்கிறது.

ஆனால், பாலஸ்தீனத்தை ஆதரித்தது மட்டுமல்லாது, பாலஸ்தீன அதிபர் யாசர் அராபாத் அவர்களை இந்தியாவுக்கு விருந்தினராக அழைத்து சிறப்பு செய்தவர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார். அப்படிப்பட்ட உறவை இன்றைக்கு சிதைத்துள்ளார் மோடி. அது சரி எப்படி இஸ்ரேல் உருவானது? யூதர்களுக்கென ஒரு நாடு இல்லை. ஆனால், உலகம் முழுக்க சிதறிக்கிடக்கும் யூதர்கள் தங்களுக்கென ஒரு நாட்டை உருவாக்க படாதபாடு படுகின்றனர். பாலஸ்தீனமும் இந்தியாவை போல இங்கிலாந்து கட்டுப்பாட்டில் இருந்தது. 1948 மே 14 ம் அன்று பாலஸ்தீனம் விடுதலையானது.
இச்சூழலில், யூதர்கள் பாலஸ்தீனத்தை குறிவைக்க ஆரம்பித்தனர். இதற்கு இங்கிலாந்தும் உதவ ஆரம்பித்தது. பாலஸ்தீனத்தின் நிலப்பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக விலை கொடுத்து வாங்கினர் யூதர்கள். (ரியல் எஸ்டேட் வியாபாரம் போல). 1922 ல் 90,000 யூதர்களை பாலஸ்தீனத்தில் குடி அமர்த்தியது பிரிட்டன். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு பாலஸ்தீனத்தை மூன்றாக பிரித்தது ஐ.நா.சபை. 7 சதவீதம் வாழும் இசுலாமியர்களுக்கு 43 சதவீத நிலமாகவும், 30 சதவீதம் குடியேற்றம் செய்யப்பட்ட யூதர்களுக்கு 56 சதவீத நிலப்பரப்பாகவும் பிரித்தது.
இந்த நிலப் பிரிவினைக்குப் பின்னால் பிரிட்டனே இருந்தது. இப்படி தான் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. ஆனால்,இந்தியா தொடர்ந்து பாலஸ்தீனத்தையே ஆதரித்து வந்தது. அதுமட்டுமல்லாது, பாலஸ்தீன விடுதலை இயக்க (PLO) அலுவலகம் தில்லியில் திறக்கப்பட்டது. இஸ்ரேல் - யூதர்களின் ஆக்கிரமிப்பு போக்கை இந்தியா ஒரு போதும் ஆதரித்தது இல்லை. இச்சூழலில் இன்றைக்கு நடக்கும் இந்த யுத்தம் எப்படிப்பட்ட பின்னணியில் நடக்கிறது என்பதை புரிந்து கொள்வோம்.
மோடியின் இப்போதைய ஆதரவு அமெரிக்க நிலைப்பாடாகவே மாறியுள்ளதையும் புரிந்து கொள்ள வேண்டும். அன்று நாஜி படைகளால் வேட்டையாப்பட்ட யூதர்கள், தற்போது தீவிர வலதுசாரி பாசிஸ்ட்டுகளாக உருமாறி பாலஸ்தீனர்களின் உரிமைகளை மறுத்து, திறந்தவெளி சிறைச்சாலையாக காஸா மற்றும் மேற்கு கரையை முற்றுகையிட்டு ஆக்கிரமித்துள்ளனர்.
#பாலஸ்தீனத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும் முடிவில் இஸ்ரேல் தமது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
— வன்னி அரசு (@VanniKural) October 9, 2023
இஸ்ரேலை ஆதரிக்கப்போவதாக இந்தியாவின் தலைமை அமைச்சர் மோடியும் அறிவித்து விட்டார்.
இதைத் தொடர்ந்து இந்திய ஊடகங்களின் பார்வையும் நம்மூரு #தினத்தந்தி போல ஆகி விட்டது.
அதாவது, பாலஸ்தீனத்தை… pic.twitter.com/gpk3bqh50X
பாலஸ்தீனர்கள் இனவழிப்பை நியாப்படுத்தி பேசியும், செயலப்டுத்தியும் வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இந்துத்துவ பாசிச ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரதமர் மோடி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான தனித்த நிலைப்பாடு கேள்விக்குரியதாகவே மாறிப்போனது பெரும் ஆபத்தான நிலைப்பாடாகும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications