திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான்.. ஆரியம்- திராவிடம் குறித்து சத்யராஜ் அதிரடி பேச்சு
சென்னை: நடிகர் சத்யராஜ் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் நடிகர் அஜித் குமாரை வெகுவாக பாராட்டினார். திராவிட சித்தாந்தம் குறித்து உரையாடிய சத்யராஜ், சம்பந்தமே இல்லாத ஒரு மனிதனை கோபம் வருகிறது என்றால்.. அதற்கு காரணம் மதம் தான் என்று அஜித்குமார் வெளியிட்ட பதிவினை பாராட்டினார். அதேபோல் வடமாநில தொழிலாளர்களுக்கு திராவிட சித்தாந்தத்தை புரிய வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
நடிகர் சத்யராஜ் சென்னையில் திராவிடம் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு நேற்று பேசுகையில், "தம்பி அஜித் குமார் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். பைக்கில் டூர் போவதை பற்றி வீடியோவில் கூறியிருந்தார். சம்பந்தமே இல்லாத ஒரு மனிதனை கோபம் வருகிறது என்றால்.. அதற்கு காரணம் மதம் தான்.. ஏதோ ஒரு நாட்டுக்கு போகும் போது ஒருவரை பார்க்கிறோம்.. எந்த வாய்க்கால் வரப்பு சண்டையும் கிடையாது.. ஆனால் அந்த மதம் தான்.. தேவையில்லாமல் ஒரு வெறுப்பை உருவாக்குகிறது என்று அழகான பதிவினை வெளியிட்டிருந்தார் அஜித். அவருக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..

ஆரியம் திராவிடத்தை எதிர்ப்பது ஓகே. தமிழ் தேசியம் என்ற பெயரில் எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவது ரொம்ப ஆபத்தானது. ஆரியம் வந்து திராவிடத்தை எதிர்க்கலாம்.. தந்தை பெரியார் சொல்லியிருக்கிறார் இதை பற்றி.. அவரிடம் நான் பேசுவது எல்லாம் சரியா என்று கேட்டால்.. நீ பேசுவதை பார்த்து அவர்கள் கோபப்பட்டால்.. நீ பேசுவது சரி என்றார்.. ஆனால் அவர்கள் சந்தோஷப்பட்டால் நீ தப்பா பேசுகிறாய் என்று அர்த்தம் என்று தெளிவாக சொல்லிக்கொடுத்துவிட்டு போயிருக்கிறார்..
டெக்னாலஜி வளர்ந்து வரும் போது, நமக்கு இருமொழிக் கொள்கை தான் முக்கியம்.. மும்மொழிக் கொள்கை எதற்காக.. மாணவனுக்கு நேரம் என்பது மிகவும் முக்கியம்.. பள்ளிக்கு போய் வரவேண்டும். அதன்பிறகு விளையாட்டு, கொஞ்ச நேரம் டிவி பார்க்கணும்.. அப்படித்தானே வாழ்க்கையை நடத்த முடியும்.. ஏற்கனவே என்னை மாதிரி சரியாக படிக்காதவர்களுக்கு , இங்லீஸ், கணக்கு படிப்பதே பெரிய தலைவலியாக இருக்கிறது.. இதில் இந்தியையும் படிக்க வேண்டும் என்று சொன்னால் கோபம் வரத்தானே செய்யும்..
திராவிடம் தான் தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பானது.. இந்த வட மாநில தொழிலாளர்கள் நிறைய வருகிறார்கள்.. அவங்க மாநிலத்தில் வந்து ஜாதிய ஒடுக்குமுறையை அனுபவித்திருப்பார்கள்.. உயர்ஜாதி என்று கருதப்படுபவர்கள் யாரும் இங்கு வேலைக்கு வந்திருக்க மாட்டார்கள்.. மிகவும் ஒடுக்கப்பட்ட தலித் சகோதரர்களின் குடும்பங்கள் தான் இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களும் கிட்டத்தட்ட 10, 15 வருடங்களாக வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. அவர்களிடம் நாம் புரிய வைக்க வேண்டும்..

ஏன் உங்கள் மாதிரி எங்கள் மாநிலம் இல்லை.. திராவிட சித்தாந்தம் தான் காரணம் என்று புரிய வைக்க வேண்டும். நாம் சிங்கப்பூர் போய்விட்டு வந்தால், சிங்கப்பூரை போய் பாருங்க என்று சொல்வோம்.. அமெரிக்கா போய் வந்தால், அமெரிக்காவை போய் பாருங்க என்று கூறுவோம். அதுபோல் வடமாநில தொழிலாளர்கள், அவங்க மாநிலத்திற்கு போய் தமிழ்நாட்டை பாருங்க..
அப்படி சொல்லும் நிலையை உருவாக்க வேண்டும்.. அவர்களுக்கு இந்தியில் திராவிடம் குறித்து மொழி பெயர்த்து கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர் ஊரில் போய் தமிழ்நாடு பற்றி சொல்வார்.. இங்கு ஒரு மதக்கலரவமும் இல்லை.. நன்றாக போகிறது வாழ்க்கை என்று பெருமையாக கூறுவார்கள்.. எங்களை பிரியமாக வைத்துக் கொள்கிறார்கள் என்று கூறுவார்கள். அங்கிருந்து இங்கு ஆட்கள் வருகிறார்கள் என்றால், நம்மாட்கள் அதைவிட மேலே சென்றுவிட்டார்கள் என்று அர்த்தம்.. நம்மாட்கள் வேலை செய்ய வரவில்லை என்று அர்த்தம் இல்லை.
திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என பிரபாகரனே கூறியுள்ளார். ஒரு முறை பேரறிவாளன் ஜாமீனில் வெளியில் வந்திருந்தார். அவரை பார்க்க அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது அவர் வீட்டுக் கதவை திறந்த உடன் அங்கு சுவரில் பெரியார், பிரபாகரன் படம் இருந்தது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை. விடுதலை ராஜேந்திரன் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில், 1975-ல் கியூபாவில் உலகப் பேராளிகள் மாநாடு நடந்துள்ளது. இதற்கு பிரபாகரன் அழைக்கப்பட்டிருந்தார். அவர் சூழ்நிலைகள் காரணமாக செல்ல வில்லை. இதற்கு பதில் அவர் கியூபாவிற்கு கடிதம் அனுப்புகிறார்.
அதில், தமிழ் இந்தியாவிலேயே பழமையான மொழி என்றும் திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என்னும் வகையில் அவர் பேசியுள்ளார். தமிழ் மொழி பேசுகிற திராவிடர்கள் ஆகிய நாங்கள் என்று பிரபாகரன் பேசியுள்ளார். தமிழ், தமிழ் தேசியத்தின் அரண் திராவிட இயங்கங்கள். திராவிட இயக்கம் ஆட்சியில் இருக்கும் வரை அந்த அரண் வெறும் கற்கோட்டையாக இல்லாமல் இரும்புக்கோட்டையாக இருக்கிறது. அந்த இரும்பு கோட்டையின் முதன்மை காவலனாக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திகழ்கிறார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications