பிராமண பெண்ணை "சூத்திரன்" திருமணம் செய்தால் தண்டனை என்ன தெரியுமா?.. எது "பிராமணீயம்?" விளாசிய ஆ.ராசா
பிராமணீயம் என்பது எது என்று திமுக மூத்த தலைவர், எம்பி ஆ ராசா தெளிவாக விளக்கி உள்ளார்
சென்னை:பிராமணீயம் என்பது சமத்துவம், சகோதரத்துவத்துக்கு எதிராக இருப்பதெல்லாமே பிராமணீயம் ஆகும் என்று திமுகவின் எம்பி ஆ.ராசா கூறியுள்ளார்.. அத்துடன், தாங்கள் பிராமணியத்துக்கு எதிரானவர்களா? என்பது குறித்து விளக்கம் ஒன்றை ஆ.ராசா நம்மிடம் வெளிப்படுத்தி உள்ளார்.
முன்னாள் அமைச்சரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் பேச்சுக்கள் எப்போதுமே ஆவேசமாக இருக்கும்.. உத்வேகம் தரக்கூடியதாக இருக்கும்.
அதிலும் பெரியார் பற்றி இவர் பேசும் பேச்சுக்கள் அனைவரையும் ஈர்த்துவிடும்.. இந்துத்துவாவுக்கு எதிராக, முழு தரவுகளுடன் பொதுமேடையில் ஆ.ராசாவைக்கும் வாதம், டெல்லியையே திரும்பி பார்க்க செய்துவிடும்..

சனாதனம்
சில சமயம், ராசாவின் பேச்சுக்கள் சர்ச்சையை தாங்கியும் வலம்வரும்.. அந்தவகையில், மூத்த தலைவர் ஆ.ராசா தவிர்க்க முடியாத தலைவராக அரசியல் களத்தில் உருவாகி உள்ளார்.. அதிலும் சமீபகாலமாகவே இந்துத்துவா, மனுதர்மம், சனாதனத்துக்கு எதிரான கருத்துக்களை ஆழ விதைத்து வருகிறார் ஆ.ராசா.. அந்தவகையில், நம் ஒன் இந்தியா தமிழ் சேனலுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன..

கரெக்ட்தானே
குறிப்பாக, "சாதீய படிநிலையில் யார் மேலே இருக்கிறார்களோ, அவர்கள் எங்களை அழுத்துகிறார்கள், மிதிக்கிறார்கள் என்று நீங்களும், முற்போக்காளர்களும் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறீர்கள்.. ஆனால், இதற்கு எதிர்தரப்பில் வேறு கேள்வியை எழுப்புகிறார்கள்.. "நாங்களா ஆணவக்கொலையை செய்கிறோம்? நாங்களா தீண்டாமையை கடைப்பிடிக்கிறோம்? நாங்களா சாதிக்கலவரம் செய்கிறோம்? திரும்ப திரும்ப பிராமணர்களை, பிராமணர்கள் என்று எங்களை ஏன் புண்படுத்துகிறீர்கள்?" என்ற வாதத்தை வைக்கும்போது, அது நியாயம்தானே? என்ற நம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எம்பி ஆ.ராசா அளித்த பதில்தான் இது:

ஷார்ப்
"பெரியார் சொன்னார், நான் பிராமணர்களுக்கு எதிரானவர் இல்லை, எனக்கு வேண்டியவர்களும் பிராமணர்களும்தான்.. ராஜாஜியே என்னுடைய நண்பர்தான் என்றார்.. இதைவிட அம்பேத்கர் இன்னும் ஷார்ப்பா சொல்லி இருக்கார்.. "நான் பிராமணியம் என்று சொல்வது, ஒரு சாதி பெற்றிருக்கிற, சிறப்பு தன்மையையோ அல்லது அதிகாரத்தையோ, குறிவைத்து அல்ல.. ஆனால், நான் பிராமணியம் என்று சொல்வது, எது எதெல்லாம் சமத்துவத்துக்கு, சகோதரத்துவத்துக்கு எதிராக இருக்கிறதோ, அதுதான் பிராமணியம் என்கிறார்..

முதலியார்கள்
ஆனால், இதைவிட அண்ணா, இன்னும் தெளிவாக சொல்கிறார், "தம்பி, பிராமணியம் அக்ரஹாரத்தில் மட்டுமல்ல, அது முதலியார்களிடமும் இருக்கிறது, செட்டியார்களிடமும் இருக்கிறது.. நாடார்களிடமும் இருக்கிறது என்றார்.. ஆணவக்கொலை என்கிறீர்களே? இந்த ஆணவ கொலை எங்கிருந்து வந்தது? நீங்கள் கொல்பவரின் ஜாதியைதான் பார்க்கிறீர்கள். ஆனால், அந்த கருத்தோட்டம் எங்கிருந்து வந்தது? ஒரு தாழ்ந்த சாதிக்காரன், நம்ம பொண்ணை கல்யாணம் செய்து கொண்டால், அவனை கொல்ல வேண்டும் என்ற சித்தாந்தம் எங்கிருந்து வந்தது? இது ஒருநாளில் வந்திருக்குமா? மனுஸ்மிருதியில் எழுதியிருக்கு.. ஒரு பிராமண பெண்ணோடு, வைசியன் உறவு கொண்டால், அவனுக்கு என்ன அபராதம்? சத்திரியன் என்றால் அவனுக்கு குறைவான தண்டனை..

தோள் தந்தவர்கள்
ஆனால், ஒரு சூத்திரன், அந்த பெண்ணுடன் உறவு வைத்திருந்தால் கொன்றுவிடு என்று படிநிலை அளந்து வைத்திருக்கிறார்கள்.. இப்படியான உளவியலை, நம்முடைய மூளைக்குள் செலுத்தியதுதான் வர்ணாசிரம தர்மம்.. அந்த வர்ணாசிரமத்தை யார் நிலைநிறுத்தினார்களோ, அவர்கள்தான் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.. 2ஜி வழக்கில் பாலாஜி, மனுஷர்மா என்று 2 இளம் வழக்கறிஞர்கள் இருந்தனர்.. இருவருமே எனக்கு தோள்கொடுத்தவர்கள்.. இருவருமே பிராமணர்கள்தான்.. இன்றுவரை என் உடன்பிறந்த சகோதரர்கள் போல அவர்களை நான் மதிக்கிறேன்.. தனிப்பட்ட முறையில் எனக்கு நிறைய பிராமணர்கள் நண்பர்கள் உண்டு..

பறையன்
ஆக, ஒரு தனி நபரை வைத்து பிராமணன் என்று நான் சொல்லவில்லை.. பிராமணீயம் என்பது சமத்துவம், சகோதரத்துவத்துக்கு எதிராக இருப்பதெல்லாமே பிராமணீயம்.. இதை போதித்தது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு.. அதன் விளைவுதான், இப்போது நடக்கிறது.. இன்னொரு கொடுமையும் உள்ளது, ஆதிதிராவிடர் பிரிவுக்குள்ளேயே நடந்த சம்பவம் இது.. ஒரு பறையர், அருந்ததியர் பொண்ணை கல்யாணம் செய்து விட்டதாக சொல்லி, அந்த பொண்ணை போட்டு அடிச்சிருக்காங்க.. ஆக, சாதீய படிநிலையை எங்கள் உளவியலுக்குள் திணித்தது எது? அப்படி திணிக்கப்பட்ட தத்துவதற்கு நாங்கள் எதிரானவர்கள்.. அந்த தத்துவத்தை தூக்கி பிடிக்கும் எத்தர்களுக்கு நாங்கள் எதிரானவர்கள்" என்றார் ராசா.
-
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு












Click it and Unblock the Notifications