சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அவரா".. அமித்ஷா ஆட்டம் ஆரம்பம்..2 பேருக்கு மட்டுமே தெரிந்த.. 2 தமிழக புள்ளி யார்.. டெல்லி சீக்ரெட்

அமித்ஷாவும், மோடியும் தமிழகத்தில் 2 ராஜ்யசபா எம்பிக்களை தேர்வு செய்கிறார்களாம்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக மேலிடத்தின் மொத்த கவனமும், தமிழகத்தின் பக்கம் இப்போது திடீரென திரும்பி உள்ளதாம்.. இதற்கு என்ன காரணம்?

நாடாளுமன்ற மக்களவை (லோக்சபா) எம்பிக்களுக்கு நேரடியாகவோ, மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்பி பதவிகளுக்கு அந்தந்த மாநிலங்களின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மூலம் மறைமுகமாகவும் தேர்தல் நடத்தப்படுகிறது.

ராஜிவ் கொலை: அன்றே மன்னித்த ராகுல்.. 3 ஆண்டுகளாகியும் முறுக்கிக்கொண்டு நிற்கும் தமிழக காங்கிரஸ் ராஜிவ் கொலை: அன்றே மன்னித்த ராகுல்.. 3 ஆண்டுகளாகியும் முறுக்கிக்கொண்டு நிற்கும் தமிழக காங்கிரஸ்

இவர்களில் மக்களவை எம்பிக்களின் பதவிக் காலம் 5 வருடங்களாகவும், அதேபோல மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக் காலம் 6 வருடங்களாகவும் உள்ளன.

 ராஜ்யசபா எம்பி

ராஜ்யசபா எம்பி

நாடாளுமன்ற மக்களவைக்கு 2024ல் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களுக்கான ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ளது... இதனையடு்தது இந்த பதவிக்கு புதிய எம்பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான மும்முரத்தில் கட்சிகள் இறங்கி உள்ளன... அந்த வகையில், பாஜக தன்னுடைய வழக்கமான ராஜதந்திரத்தை கையில் எடுத்துள்ளது.. தமிழகத்திலிருந்து 2 பேரை ராஜ்யசபா எம்பியாக்க அமித்ஷாவும், மோடியும் முடிவு செய்துள்ளார்களாம்..

 அமித்ஷா

அமித்ஷா

இப்போதைக்கு 4 எம்எல்ஏக்கள் மட்டுமே தமிழகத்தில் உள்ளதால், இந்த பலம் போதாது.. ராஜ்ய சபாவிற்கு எம்பிக்களை அனுப்புவதற்கு குறைந்தது 35 எம்எல்ஏக்களின் ஆதரவாவது தேவை.. ஜனாதிபதி 12 பேரை ராஜ்யசபா எம்பியாக நியமிக்கலாம் என்கிறது சட்டவிதி.. அதிமுகவிடம் போதுமான பலம் இருந்தாலும், பாஜகவுக்கு ஆதரவு தருமா என தெரியாது.. காரணம், அவர்களுக்குள்ளேயே எம்பி பதவிக்கான போட்டி உள்ளது.. எனவே, பல்வேறு துறையில் சிறப்பாக செயல்படும் நபர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு எம்பி பதவியை கொடுக்க பாஜக முடிவு செய்துள்ளது.

 2 பேர் யார்?

2 பேர் யார்?

பாஜகவின் இந்த வியூகம் இதுவரை வடமாநிலங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்ட நிலையில், முதல்முறையாக தமிழகத்தின் பக்கம் திரும்பி உள்ளதாம்.. இதற்கு என்ன காரணம் என்ற தகவலும் கசிந்துள்ளது.. எம்பி தேர்தல்களில், இதுவரை வடமாநிலங்களில் மட்டுமே பலத்தை பெற்றுவந்த பாஜக, இந்த முறை நடக்க போகும் எம்பி தேர்தலில் தென்மாநிலங்களில் இருந்தும் குறிப்பிட்ட அளவு எம்பிக்களை அள்ள கணக்கு போட்டு வருகிறது..

 அமித்ஷா பிளான்

அமித்ஷா பிளான்

அதிலும் கேரளா & தமிழ்நாடு இந்த இரு மாநிலங்களில் இருந்தும் தலா 5 எம்பிக்கள் வெற்றி பெற வேண்டும் என்று முடிவெடுத்துள்ளது. இதில், பெரும்பாலான கவனத்தை தமிழகத்தின் மீதுதான் திருப்பி உள்ளது.. சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்த அமித்ஷாவை, தமிழக பாஜக நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள்.. அப்போது தமிழக நிலவரத்தை ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து கொண்டார் அமித்ஷா..

 குஷ்பு

குஷ்பு

இதற்கு பிறகு, வானதி, குஷ்பு, போன்றோர், வடமாநில பலாத்கார வழக்கு தொடர்பான விசாரணை ரிப்போர்ட்டை அளிக்க டெல்லி சென்றபோதும், தமிழக நிலவரம் குறித்து புட்டு புட்டு வைத்துவிட்டு வந்தனர்.. இதுபோக, புலனாய்வு டீம் ஒன்றும் இங்குள்ள நிலவரங்களை அவ்வப்போது டெல்லிக்கு ரிப்போர்ட்டாக அனுப்பி வைத்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் சேர்த்து வைத்து பார்த்துதான், தமிழகத்திற்கு 2 ராஜ்ய சபா எம்பிக்களை நியமித்தால், அது தங்களுக்கு ஆதரவான ரிசல்ட்டை பெற்று தரும் என்று கணக்கு போடப்படுகிறதாம்..

 அமித்ஷா முடிவு

அமித்ஷா முடிவு


வழக்கமாக மற்ற எம்பிக்களை போல அல்லாமல், இது நியமன எம்பிக்கள் என்பதால், பரவலாக அனைத்து துறைகளையும் உள்ளடக்கியே நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.. கலை, இலக்கியம், பத்திரிகை, விளையாட்டு என பலதுறைகளில் சாதனை படைத்தவர்களை, ராஜ்யசபாவுக்கு அனுப்பும் வழக்கம் இருந்து வருகிறது.. இந்த லிஸ்ட்டில், அரசியல் துறையும் சேர்க்கப்பட்டு அதில் இணைந்தவர்தான் சுப்பிரமணியசாமி.. இவருக்கும் சேர்த்துதான் தற்போது பதவிக்காலம் நிறைவடைகிறது..

 சு.சாமி

சு.சாமி

ஏற்கனவே தனக்கு சீட் கொடுப்பார்கள் என்று காத்திருந்தவர் சு.சாமி.. அதிலும் நிதியமைச்சராக தன்னை நியமிக்க வேண்டும் என்று பலமுறை பேசியவர்.. அதனால்தான் இப்போதுவரை, பாஜகவிலேயே இருந்தாலும் நிர்மலா சீதாராமன் எந்த அறிவிப்பு வெளியிட்டாலும், முந்திக் கொண்டு வந்து குறை சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். தன்னுடைய எம்பி பதவியும் முடியும் நிலையில், மீண்டும் இதே பதவிக்காக காய் நகர்த்த ஆரம்பித்துள்ளார்.. பாஜகவில் இருந்து கொண்டே, சேம்சைடு கோல் போடும் சு.சாமி, வெளிப்படையாகவே மோடி அரசை அட்டாக் செய்தும் வருகிறார்..

 அமித்ஷா பிளான்

அமித்ஷா பிளான்


இவருக்கு மீண்டும் போஸ்டிங் தருவதற்கு, அமித்ஷா, மோடி இருவருக்குமே விருப்பமில்லையாம்.. இப்போது பதவி கிடைக்காது என்ற அரசல் புரசலாக செய்தி கசியவும், இன்னும் மோசமாக மத்திய அரசை விளாச ஆரம்பித்துவிட்டார். அதேபோல, ஏற்கனவே இளையராஜா, ரஜினி என எத்தனையோ பெயர்கள் அடிபட்டு ஓய்ந்த நிலையில், 2 பிரபலமான & மற்றும் மக்கள் அறிந்த நபர்களை அமித்ஷாவும், மோடியும் தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. அவர்கள் யார் என்று தெரியவில்லை.. அவர்கள் யாராக இருந்தாலும், அதற்காகவெல்லாம் "தாமரை மலர்ந்துவிடுமா" என்பதுதான் இங்கு சிந்திக்க வேண்டி உள்ளது.. பார்ப்போம்..!

English summary
Who are the 2 Rajya Sabha MPs of Tamil Nadu and whats bjp senior leader amitshahs plan அமித்ஷாவும், மோடியும் தமிழகத்தில் 2 ராஜ்யசபா எம்பிக்களை தேர்வு செய்கிறார்களாம்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X