"முளைத்த முடிச்சு".. அவசர அவசரமாக அமித்ஷாவிடம் ஓடிய தம்பிதுரை.. யாரந்த 3 பேர்? இதென்ன புதுசா இருக்கே
சென்னை: தேசிய அளவில், பாஜகவுக்கு எதிரான கூட்டணியை அமைப்பதில், விஸ்வரூபமெடுத்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.. திமுக அரசை சமாளிக்க முடியாமல் அதிமுக, பாஜக தரப்பு திணறி வரும்நிலையில், அடுத்த அஸ்திரத்தை திமுகவுக்கு எதிராக கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன..!!
"பாஜக எதிர்ப்பு" விஷயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து உறுதியாக இருப்பதால், அவரது முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..
திமுகவை பொறுத்தவரை தன்னுடைய கருத்தியலில் எப்போதுமே உறுதிப்பாட்டுடன் பயணித்தாலும், தன்னுடைய சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை.. அதேசமயம், தமிழக மக்களின் நலன்களை பெற்றுத்தர, மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கையாண்டு வருகிறது..

காய் நகர்த்தல்
அதுமட்டுமல்ல, அந்த பக்கம் மம்தா, இந்த பக்கம் அரவிந்த் கெஜ்ரிவால், இதற்கு நடுவில் பினராய் என மாநில வாரியான ஆதரவையும், நல்லிணக்கத்தையும் ஸ்டாலின் கடைப்பிடித்து வருகிறார்.. "பிரதமர் யார் என்பதைவிட, பிரதமராக யார் வந்துவிடக்கூடாது" என்பதில்தான் அதிக கவனத்தை செலுத்தி, பாஜகவை வீழ்த்தும் கூட்டணியை வலுப்படுத்தவும் நினைக்கிறார்.. ஆனால், 2018 லேயே முதலாவதாக முந்திக்கொண்டு ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தவர் ஸ்டாலின்தான்.. அதேபோல, கடந்த வருடம் நடந்த தன்னுடைய நூல் வெளியீட்டு விழாவிலும் ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று பகிரங்கமாக அறிவித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

நேஷனல் பாலிட்டிக்ஸ்
அந்தவகையில், ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்பதில் தீவிரமாக ஸ்டாலின் உள்ளார் என்றாலும், மம்தாவை போல், அரவிந்த் கெஜ்ரிவால், சந்திரசேகர ராவ் போன்றவர்கள், காங்கிரஸ் தலைமையை ஏற்க முன்வரவில்லை என்றால், தன்னுடைய தலைமையை ஏற்க வைக்கும் திட்டம் ஒன்றையும் வகுத்து வருவதாக சொல்கிறார்கள். அதற்கேற்றவாறு, ஒவ்வொரு முறையும் டெல்லி செல்லும்போதெல்லாம், எதிர்க்கட்சிகளின் கவனம் ஸ்டாலின் மீது குவிவதை தவிர்க்க முடியாததையும் நாம் கவனிக்க வேண்டி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு, மூத்த தலைவர் பரூக் அப்துல்லாவிடம் செய்தியாளர்கள், "ஸ்டாலின் பிரதமராக வாய்ப்பு இருக்கிறதா?" என்று கேட்டார்கள்..

மெயின் கருவி ஸ்டாலின்
அதற்கு ஃபரூக் அப்துல்லா, ''அவர் ஏன் பிரதமராகக் கூடாது? அதில் என்ன தவறு இருக்கிறது?'' என்று திருப்பி கேட்டார்... அப்படியானால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஸ்டாலின் தன்னை இணைத்துக்கொண்டாரா? என்று அடுத்த கேள்வியை செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு ஃபரூக் அப்துல்லா, ''எதிர்க்கட்சிகளை இணைக்கும் முக்கிய கருவியாக ஸ்டாலின் மாறிவிட்டார் என்றே நினைக்கிறேன்.. இந்த நாட்டை மேலும் வலுப்படுத்த கடவுள் அவருக்கு உதவ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்'' என்று கூறியிருந்ததை இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.

அழுத்தம் திருத்தம்
நடக்கும் இந்த நிகழ்வுகளையெல்லாம் மேலிட பாஜக கவனிக்காமல் இல்லை.. முதல்வர் ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு, தன்னுடைய பிறந்தநாள் விழாவில் பேசிய பேச்சுக்கள் டெல்லிவரை எதிரொலித்ததாம்.. அதாவது, தேசிய தலைவர்கள் இடம்பெற்றிருந்த அந்த மேடையில் பேசிய ஸ்டாலின், "இது இந்தியாவின் புதிய அரசியலுக்கான தொடக்கம். இன்றைய காலத்தில் மிக அவசியம் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல். இதில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் மிக அவசியம். பாஜகவை அரசியல் ரீதியாக வீழ்த்த வேண்டும். இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் மாநில பிரச்சனைகளையும் மறந்து ஒன்றிணைய வேண்டும். காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது" என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

டபுள் டீம்
அதுமட்டுமல்ல, கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாடி, தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக பலமான அணியை, திமுக மேலிடம் உருவாக்க திட்டமிட்டு வருவதாக சொல்கிறார்கள்.. அந்தவகையில், திருவாரூரில் ஜுன் 3ல் நடக்கும் கருணாநிதி நுாற்றாண்டு விழா மாநாட்டில், தமிழக கூட்டணி தலைவர்கள் கேஎஸ் அழகிரி, வைகோ, திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன், கமல் போன்றவர்களை பங்கேற்க செய்ய திமுக முனைப்பு காட்டி வருகிறது.. அன்று மாலையே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மம்தா, சந்திரசேகர ராவ், அரவிந்த் கெஜ்ரிவால், நிதிஷ்குமார், நவீன் பட்நாயக், சரத்பவார், சந்திரபாபு நாயுடு, பரூக் அப்துல்லா, டி.ராஜா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி போன்ற தலைவர்களை அழைக்க உள்ளார்களாம்.

ஓடோடிய தம்பிதுரை
அநேகமாக, இந்த மாநாட்டு மேடையிலேயே தேசிய அளவிலான, பாஜக எதிர்ப்பு அணி உருவானாலும் ஆச்சரியப்படுவற்கில்லை என்கிறார்கள்.. இதெல்லாம் பார்த்து பாஜக மேலிடம் கலக்கமாகி உள்ளதாக சொல்கிறார்கள்.. திமுகவை டேமேஜ் செய்யும் முயற்சியை தொடர்ந்து கையில் எடுத்து வரும்நிலையில், அடுத்தடுத்த வியூகங்களிலும் திமுக களமிறங்கி உள்ளது, டெல்லியை மட்டுமல்லாமல் அதிமுகவையும் கடுப்பாக்கி வருகிறதாம்.. இப்படிப்பட்ட சூழலில்தான் திமுக மீதான புகார் ஒன்றை அதிமுகவே கிளப்பியுள்ளாம்.. அந்தவகையில், அதிமுகவின் மூத்த தலைவரும், இப்போதைய அதிமுகவின் ராஜ்ய சபா தலைவரும், முன்னாள் துணை சபாநாயகருமான தம்பிதுரை இந்த விஷயத்தில் என்ட்ரி தந்துள்ளார்.

ஹாட் லிஸ்ட்
சமீபத்தில் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து பேசியிருக்கிறார் தம்பிதுரை.. அப்போது, திமுக ஆட்சியில் தமிழகத்தில் எப்படியெல்லாம் ஊழல் செய்கிறார்கள் என்பது பற்றி, ஆதாரங்களுடன் கூடிய புகார் லிஸ்ட்டை ஒப்படைத்துள்ளாராம்,. அந்த லிஸ்ட்டில் 3 திமுக எம்பிக்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக சொல்கிறார்கள்.. அந்த 3 எம்பிக்களும், இதற்கு முன்பு மத்திய அமைச்சர்களாக இருந்தவர்களாம்.. இந்த ஊழல் லிஸ்ட்டை பெற்றுக் கொண்ட உள்துறையும், விரைவில் அப்புகார்கள் குறித்து வழக்கு தொடரலாம் என்று தம்பிதுரையிடம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறதாம்..

தம்பிதுரை
அதுமட்டுமல்ல, அமித்ஷாவிடம் கொடுத்த அந்த ஆவணங்களை தவிர, வேறு சில திமுக அமைச்சர்கள், எம்பிக்கள் குறித்த ரகசிய ஆவணங்களையும் தன்னிடமே வைத்து கொண்டிருக்கிறாராம் தம்பிதுரை... எம்பி தேர்தல் நெருங்கும் சமயத்தில், அந்த ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளியாகும் என்கிறார்கள்.. இதை கேள்விப்பட்டு திமுக தரப்பு லேசான கலக்கத்தில் உள்ளது என்றும் சொல்கிறார்கள்.. ஆனால், திமுக அமைச்சர்கள் மீது ஏற்கனவே, பாஜக தலைவர் அண்ணாமலை நிறையமுறை ஊழல் புகார்களை சொல்லியுள்ளார்.. அந்த புகார்கள் இனி மாதாமாதம் வெளியாகும் என்றும் அறிவித்திருந்த நிலையில், அது என்னவாயிற்று என்று தெரியவில்லை..

ஒன் இந்தியா
2 மாதங்களுக்கு முன்பு, மூத்த பத்திரிகையாளரும், திமுக ஐ.டி-விங் ஆலோசகரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரன், நம்முடைய ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அப்போது, திமுக அமைச்சர்கள் மீது அண்ணாமலை சொல்லும், ஊழல் புகார்கள் குறித்து கேள்வி எழுப்பினோம்.. அதற்கு மனுஷ்யபுத்திரன், "இந்த நாட்டில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதே.. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக, பேசாமல் போய் அண்ணாமலை அந்த போலீஸ் ஆபீசர் வேலையை பார்க்கலாம் இல்ல? எதுக்கு எப்ப பார்த்தாலும் பேட்டி தந்துட்டே இருக்கார்? அதாவது திமுக அரசு மீது குறை சொல்வதற்கு ஒன்னுமே இல்லை. பாஜக தரப்பில் சொல்லக்கூடிய விமர்சனங்களிலும் உடனுக்குடன் குட்டு வெளிப்பட்டு விடுகிறது.. இதுதான் அவங்களுக்கு பிரச்சனையே...

மனுஷ்யபுத்ரன்
அண்ணாமலை சொல்லக்கூடிய குற்றச்சாட்டுக்கு இதுவரைக்கும் ஏதாவது ஒன்றிற்காவது ஆதாரம் இருக்கா? அவர் சொன்ன எத்தனையோ குற்றச்சாட்டுகளுக்கு திமுக தரப்பில் விளக்கம் சொல்லப்பட்டுள்ளது.. அப்படி விளக்கம் சொன்னபிறகும், திமுக தந்த விளக்கம் தவறு என்று என்னைக்காவது வந்து அவர் நிரூபித்திருக்கிறாரா? அண்ணாமலை என்பவர் வதந்தியை பரப்பும் ஒரு நபர்.. அவ்வளவுதான்" என்று வெளிப்படையகேவே கூறியிருந்தார் மனுஷ்யபுத்ரன்.. இப்போது, தமிழக பாஜகவை போலவே, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை அதிமுகவும் ஆதாரத்துடன் தந்துள்ளதாக சொல்கிறார்கள்.. இதன் உண்மைத்தன்மை என்ன என்று தெரியவில்லை.. என்னதான் நடக்க போகிறது? பார்ப்போம்...!!
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications