சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராசிபுரத்தில் எல் முருகன்? கோவை தெற்கில் வானதி? 20 தொகுதிக்கு பாஜக வேட்பாளர்கள்.. உத்தேச பட்டியல்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக சார்பில் ராசிபுரம் தொகுதியில் எல் முருகன், மயிலாப்பூர் தொகுதியில் ராகவன், ராசபாளையம் தொகுதியில் கௌதமி, துறைமுகம் தொகுதியில் பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம், சேப்பாக்கம் தொகுதியில் குஷ்பு என 20 தொகுதிக்கு வேட்பாளர்கள் யார் யார் என உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 8 நாட்களாக நீடித்துவந்த இழுபறி நேற்று முடிவுக்கு வந்துள்ளது. 20 சட்டமன்ற தொகுதிகளுடன் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியும் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டனர். பாஜக சார்பில் மாநிலத் தலைவர் எல்.முருகன், தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பாஜக விருப்பம்

பாஜக விருப்பம்

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு விருதுநகர், ராஜபாளையம், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, சேலம் ஆத்தூர், நாமக்கல், ராசிபுரம், ஈரோடு, பவானி, திருப்பூர், கோவை ( தெற்கு), சூலூர், கரூர், அரவக்குறிச்சி, சேப்பாக்கம், மயிலாப்பூர், துறைமுகம், கொளத்தூர், திருவள்ளூர் (அ) திருத்தணி, செங்கல்பட்டு, ஆலந்துர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்பதூர் (தனி) வேலூர், கேவி குப்பம், கிருஷ்ணகிரி, ஓசூர், தருமபுரி, பழனி, காரைக்குடி போன்ற தொகுதிகளை பாஜக விரும்புகிறது. இதில் இருந்து 20 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டு பெற வேண்டும் என பாஜக நினைப்பதாக சொல்லப்படுகிறது

திமுகவின் தொகுதிகள்

திமுகவின் தொகுதிகள்

விரைவில் 20 தொகுதிகள் எது எது என்ற பட்டியலை அதிமுக மேலிடத்திடம் இறுதி செய்து, வேட்பாளர்களை அறிவிக்க பாஜக ஆயத்தமாகி வருகிறது. அதிமுகவின் சிட்டிங் எம்எல்ஏக்கள் இருக்கும் சில தொகுதிகளை அதிமுகவிடம் பாஜக தலைவர்கள் கேட்டுவருவதால் அந்த தொகுதியில் எம்எல்ஏக்கள் கலக்கத்தில் உள்ளார்கள். திமுகவிற்கு அதிக செல்வாக்கு உள்ள தொகுதிகளை பாஜகவிற்கு தர அதிமுக ஆர்வம்காட்டி வருவதாகவும் பேச்சுக்கள் உலா வருகின்றன.

ராஜபாளையத்தில் கௌதமி

ராஜபாளையத்தில் கௌதமி

இந்நிலையில் அதிமுகவிடம் தொகுதிகள் எது எது என்பதை இன்னமும் பாஜக இறுதி செய்யாத நிலையில், ராசிபுரம் தொகுதியில் எல் முருகன், மயிலாப்பூர் தொகுதியில் ராகவன், ராசபாளையம் தொகுதியில் கௌதமி போட்டியிடக்கூடும் என கூறப்படுகிறது.

சேப்பாக்கத்தில் குஷ்பு

சேப்பாக்கத்தில் குஷ்பு

இதேபோல் துறைமுகம் தொகுதியில் பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம், சேப்பாக்கம் தொகுதியில் குஷ்பு ஆகியோர் போட்டியிடுவார்களா என்ற கேள்வியும் எழுகிறது. இதேபோல் காரைக்குடி மற்றும் கிணத்துக்கடவு தொகுதியிலும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் இரண்டு பேர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

யார் யார் எங்கு எங்கு

யார் யார் எங்கு எங்கு

இதனிடையே சமூக ஊடகங்களில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை எவை, யார் யார் எங்கு போட்டியிடுவார்கள் என்பது குறித்து உத்தேச பட்டியல் பரவி வருகிறது, அவற்றை இப்போது பார்ப்போம்.

(1)மயிலாப்பூர் - K.T.ராகவன்

(2) காரைக்குடி - H.ராஜா

(3)சேப்பாக்கம் குஷ்பு

(4)வேளச்சேரி டால்பின் ஸ்ரீதர்

(5) காஞ்சிபுரம் - கேசவன்

(6) திருத்தணி -சக்கரவர்த்தி

(7)பழனி -கார்வேந்தன்

(8)சிதம்பரம்- ஏழுமலை

(9) கிணத்துக்கடவு- IPS அண்ணாமலை

(10 )கோவை தெற்கு -வானதி சீனிவாசன்

(11) ராசிபுரம் - L.முருகன் (தலைவர் பாஜக)

(12)ஆத்தூர் -வி.பி.துரைசாமி மகன் Dr.பிரேம்

(13)திருவாரூர் -கருப்பு முருகானந்தம்

(14)திருவண்ணாமலை- தணிகைவேல்

(15) வேலுர் -கார்த்தியாயினி

(16)ஒசூர்-நரேந்திரன்

(17)தூத்துக்குடி-சிவ முருக ஆதித்தன்

(18)நெல்லை-நயினார் நாகேந்திரன்

(19) ராஜபாளையம்- நடிகை கவுதமி

(20)துறைமுகம்-வினோஜ் பி.செல்வம்.

English summary
The question is whether L Murugan will contest from Rasipuram constituency, Raghavan from Mylapore constituency, Gautami from Rajapalayam constituency, BJP youth leader Vinoj Selvam from Port constituency and Khushbu from Chepauk constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X