நீங்க யார்.. ஏன் இங்க நிற்கிறீங்க? பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரெய்டு விட்ட அமைச்சர் மூர்த்தி!
சென்னை: சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர் மூர்த்தி, அங்கு தேவையின்றி நின்று கொண்டிருந்த இடைத்தரகர்களை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தார்.
நீங்க யார்.. ஏன் இங்க நிற்கிறீங்க?டோக்கன் எங்கே என அமைச்சர் மூர்த்தி டென்ஷன் ஆன நிலையில், தனது பெயர் சீனிவாசன் என்றும் தாம் சாட்சிக் கையெழுத்து போட வந்த நபர் எனவும் 2 டூ 3 டோக்கன் போட்டுள்ளதாகவும் அந்த நபர் தெரிவித்தார்.

மேலும், அமைச்சர் மூர்த்தியிடம் அந்த நபர் தெனாவட்டாக பேசியதை பார்த்த பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள், சீனிவாசன் என்ற பெயர் டோக்கன் லிஸ்டில் உள்ளதா என ஆராயத் தொடங்கினர். வம்பை விலை கொடுத்து வாங்கிய கதையாக அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக இன்னும் ஏதோதோ கூறிக்கொண்டிருந்தார்.
அமைச்சர் மூர்த்தியின் அதிரடி ஆக்ஷன் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சுற்றித் திரிந்த இடைத்தரகர்களுக்கு ஹைவோல்ட் ஷாக்காக அமைந்திருந்தது. அமைச்சருடன் பத்திரப்பதிவு துறை ஐஜி உட்பட இன்னும் பல உயர் அதிகாரிகள் இந்த ஆய்வில் இருந்தனர்.
சென்னையை போலவே தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அமைச்சர் மூர்த்தி சார் பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. காரணம் சார் பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றும் கடை நிலை ஊழியர்களும், இடைத்தரகர்களும் சிண்டிகேட் அமைத்து கலெக்ஷன் பார்ப்பது இங்கு அங்கு என்றில்லாமல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.
உயர் அதிகாரிகள் கேட்கிறார்களோ இல்லையே அவர்களது பெயரைச் சொல்லி சொத்து விற்க வருபவர்களிடமும், வாங்க வருபவர்களிடமும் கல்லா கட்டும் ஆசாமிகள் ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும் பார்க்க முடியும். இது போன்ற நபர்களை அப்புறப்படுத்த வேண்டிய பொறுப்பு அமைச்சர் மூர்த்திக்கு உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications